செவ்வாய், 5 மே, 2009

Align Center

தங்கள் ஊர்களில் தேர்தல் பிரசாரத்திற்காக விநியோகிக்க வேண்டிய துண்டு பிரசுரங்கள்

Click here to download Page 1

Click here to download Page 2

நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான பி.ஜே அவர்களின் பேட்டி

முழு விபரம் >>

நேர்காணல் என்ற போர்வையில் அரங்கேறிய நாடகம் !

(இரண்டாம் பாகம்)

சுனாமி திருடர்கள்
"அடுத்ததாக உங்களுக்கு சுனாமி திருடர்கள் என்ற ஒரு பெயர் உள்ளதே ! " என்று கேள்வி கேட்க திருடியவந்தான் திருடன் திருடன் என்று கத்துவான். நாங்கள் மக்கள் மன்றத்தில் கண்க்குகளை படம் ஒட்டிக் காண்பித்துவிட்டோம் என்று 'படம் ' காட்டினார்.
மொத்த வரவு 68 லட்சம் செலவு 33 லட்சம் மீதி இருப்புத் தொகை 35 லட்சம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூலிக்கப்பட்ட தொகையில் 35 லட்சம் ரூபாயை செலவழிக்காமல் நீங்கள் இருப்பு வைக்க அதிகாரம் கொடுத்தது
யார் ? மீதி இருந்த 35 லட்சத்தை என்ன செய்தீர்கள் ? இதுவரை கணக்கு காட்டினீர்களா ? ( ஏற்கெனவே காட்டியது போன்று கள்ளக் கணக்காவது காட்டியிருக்கணுமா ? இல்லையா ?
பேரிடர் பாதுகாப்பு மையம் கட்டப் போகிறார்களாம் ! ஒரு திறந்த பொட்டல் வெளியில் ஒரு பெரிய தகரத்தை ஊன்றி திறந்து வைத்துவிட்டு 35 லட்சம் தீர்ந்து போய் விட்டது என்பது தான் நீங்கள் காட்டும் கணக்கா ?
மாறாக டி.என்.டி.ஜேவை திருடன் என்று சொல்கிறீர்களே.... டி.என்.டி.ஜே வை விமர்சனம் செய்யும் அத்தனை இயக்கங்களையும் பட்டியல் போட்டு அவர்களது அவர்களது விசாரனைக்குத் தயார் என டி.என்.டி.ஜே மற்றும் தமுமுக சுனாமி மற்றும் ஃபித்ரா வசூலை விசாரனை செய்ய முன் வந்தார்களே, நீங்கள் ஏன் ஓடி ஒளிந்தீர்கள் ?
டி.என்.டி.ஜே சுனாமியில் திருடியிருந்தால் நீங்கள் நிருபிக்க சரியான வாய்ப்பாக அது அமைந்ததே ! ஏன் முன் வரவில்லை ? ஏனெனில் நீங்கள் தான் திருடர்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
தனது தணித்தன்மையை பறைசாற்றிய டி.என்.டி.ஜே சுனாமி வரவு செலவை பகிரங்கமாக ' உணர்வு ' இதழில் வெளியிட்டது.
மொத்த வரவு 75,98,385 செலவு 75,98,385 மீத இருப்பு 00,00,000 என்று கணக்கை வெலியிட்டு தனது தூய்மையை நிருபித்தது. இனிமேல் வரவிருக்கும் சுனாமிக்கு இப்போதே பேரிடர் பாதுகாப்பு மையம் அமைக்க போகிறோம் என்று டி.என்.டி.ஜே சீன் காட்டவில்லை. இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் பெரும் பணத்தை திருடிவிட்டு திருடன் திருடன் ! என்ற சப்தம் போடாமல் கமுக்கமாக செல்லும் சுனாமி திருடர்கள் நீங்கள் தான் என்பதை நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் !
ஃப்த்ரா வசூலில் நீங்கள் திருடியதையும் குற்றச்சாட்டாக வைத்தோமே அதை பற்றி வாய் திறக்காதது ஏன் ?

கடைந்ந்தெடுத்த சந்தர்ப்பவாதம்

திமுக மணல் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று தற்போது அவர்களது துண்டு பிரசுரங்களிலும், இனையத்தளத்திலும் பாலம் கட்டுவதில் ஊழல், சாலை போடுவதில் மோசடி, அனைத்து காண்ட்ராக்ட்களிலும் 14 சதவிகிதம் லஞ்சம் என்று திமுகவினர் மீது குற்றம் சாட்டும் இவர்கள் இத்தனை காலமாக நீங்கள் கூட்டனியில் தானே இருந்தீர்கள் அப்போது சொல்லாமல் இப்போது ஏன் சொல்கின்றீர்கள் என்ற நியாயமான கேள்விக்கு இவர்கள் வைத்திருக்கும் ரெடிமேட் பதிலையும் அந்த நேர்காணல் நாடகத்தில் அவிழ்த்துவிட்டார்.
"மணலை கொள்ளையடிக்கிறார்களே இதுவெல்லாம் தவறு என்று ஸ்டாலினிடம் நான் நேரிலேயெ தெரிவித்துள்ளேன். வீரபாண்டி வீட்டில் போய் தெரிவித்துள்ளேன் " என்று கேட்பவர்கள் காதில் பூ சுற்றுகிறார். இதை ஏன் இப்போது வெளியில் சொல்கிறார்கள் தெரியுமா ? இதை ஏன் தற்போது மேடைகளில் பேசுகிறார்கள் தெரியுமா ? இதை ஏன் தற்போது இனையத்தளதில் போடுகிறார்கள் தெரியுமா ? இவர்கள் கேட்ட இரண்டு எம்.பி சீட் எலும்புத் துண்டு போடாததால்தான்.
இந்த இரண்டு சீட் எலும்பு துண்டை திமுகவினர் இவர்களுக்கு வீசி இருந்தால் இந்த குற்றச்சாட்டுக்ளை எல்லாம் ஸ்டாலினிடமும், வீரபாண்டி ஆறுமுகத்திடமும் காதில் போய் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
ஒருவேளை அதிமுக கூட்டனியில் இவர்களுக்கு சீட் ஒதுக்கி இடம் கொடுத்திருந்தால் தேர்தலுக்கு பிறகு அதிமுக பி.ஜே.பி யை ஆதரிக்கும்போது கேட்டால் ஜெயலிதாவிடம் நேரில் சொல்லிவிட்டேன் என்று ரெடிமேட் பதிலை அப்போதும் அவிழ்த்துவிடுவார்கள். இது எவ்வளவு பெரிய கடைந்தேடுத்த சந்தர்ப்பவாதம் என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வாரியப் பதவியில் ராஜினாமா செய்தது தியாகமா ?

அந்த நேர்காணலில் வாரியப் பதவியை ராஜினாம செய்தது பெரிய தியாகம்போல அதை ஹைதர் அலி சித்தரித்தார்.
அது தியாகமல்ல என்பதையும் அவரே விளக்கிவிட்டார். கலைஞர் பி.ஜே.பி யுடன் கூட்டனி வைத்தபோது அப்போது வக்ஃப்பு வாரியத் தலைவராக இருந்த லத்தீப் அவர்கள் வக்ஃப்பு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லையாம்.
உடனே அவர்மீது வீண் பழி சுமத்தி கலைஞர் வக்ஃப்பு வாரியத் தலைவர் பதவியை பிடுங்கினாராம். அதுபோல தனக்கு நேர்வதற்க்கு முன்னால் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் என்றுதான் தனது பதவியை ராஜினாமா செய்ததற்க்கான காரணத்தை ஹைதர் அலி தெளிவுபடுத்தினார்.
தன் பதவியை பிடுங்கி விடுவார் என்பதை தெரிந்து கொண்டு பதவியை பறிப்பதற்க்கு முன்னரே பதவியை துறப்பதுபோல் ராஜினாமா நாடகம் ஆடி அதை தற்போது தியாகம் என்று சொல்வதும் பதவியை துச்சமாக மதித்து தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறோம் என்பது மக்களை மடையர்களாக்கும் செயல்.
நீங்கள் தூக்கி எறியாவிட்டால் அவர்கள் உங்களை தூக்கி எறிந்திருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை! இப்படி செய்தது தியாகமல்ல ! ஒரு நல்ல நரித்தனம்.

வெளிச்சத்திற்க்கு வந்த உண்மைகள்

ஆகமொத்தத்தில் நேர்காணல் என்ற போர்வையில் இவர்கள் நடத்திய நாடகத்தின் எண்ணற்ற உண்மைகள் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளன. கடந்த தேர்தலில் இவர்கள் நிறுத்தச் சொன்ன நபரை வேட்பாளராக நிறுத்தாததால் தான் முஸ்லீம் லீக்கிற்க்கு கிடைத்த பாளையங்கோட்டை பறிபோனது. அதற்க்கு நாங்கள் தான் காரணம் என்பதும் கடந்த தேர்தலில் திமுகாவை ஆதரிக்க வக்ஃப்பு வாரியத் தலைவர் பதவியை பேரம் பேசிவிட்டுதான் ஆதரித்தோம் என்ற உண்மையும் இவ்வளவு நாள் பாக்கர் எதிரணியில் இருந்தபோதும் எனக்கும் அவருக்கும் சுமூகமான (கள்ள) உறவு இருந்து வந்தது என்று ஹைதர் அலி கூறியதும், இப்போது இவர்கள் செய்த அத்தனை அட்டூழியங்களையும் இந்த பொய்யன் டி.ஜே ஆமோதிக்கின்றது என்ற உண்மயை வெளிவந்துள்ளது. அல்லாஹ் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.


-- அபூ நஸ்ரின், மதுரை

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP