செவ்வாய், 9 ஜூன், 2009

மாணவரணியின் மாபெரும் கல்வி விழிப்புண‌ர்வு மாநாடு மற்றும் கண்காட்சி
07.06.2009 அன்று சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள மதராஸே இ அஞ்ஞும் பள்ளியில் சென்னை மண்டல மாணவரணியின் மாபெரும் கல்வி விழிப்புண‌ர்வு மாநாடு மற்றும் கண்காட்சி நடந்தது. அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையாலும் உதவியாலும் சென்னை மண்டல மாணவரணியின் மாநாடு கண்காட்சி மிகவும் வெற்றிகரமாகவும் அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் பெரும் உதவி உள்ளதாகவும் அமைந்தது.... அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.

கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சி யின் ஏற்பாடுகளை மாணவரனியின் நிர்வாகிகளான சகோ. S.சித்திக்.M.Tech- மாநில செயலாளர் அவர்களும் K.சித்திக்.DRAC மண்டல மாணவர் அணிச் செயலாளர் அவ‌ர்க‌ளும் M.நஸீர் அஹமது சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் S.ஷமீம்.M.Sc மாநில மாணவர் அணி துணை செயலாளர்(வேலை வாய்ப்பு) அவ‌ர்க‌ளும் K.பஷீர் அஹமது.MCA மாநில மாணவர் அணி துணை செயலாளர்,(கல்வி உதவி) அவ‌ர்க‌ளும் N.அல்அமீன் B.E. மாநில மாணவர் அணி துணை செயலாளர்,(பத்திரிக்கை துறை, மாணவர் பிரச்சனைகளை எதிர்கொள்வது ) அவ‌ர்க‌ளும் . முஹமது ஷபி.B.ஏ மண்டல மாணவர் அணிச் செயலாளர் (கல்வி வழிகாட்டுதல்) அவ‌ர்க‌ளும் M.அப்துல் பாசித்.B.Sc.(B.L) மாநில மாணவர் அணி துணை செயலாளர்(அரசு துறை, சட்டம்) அவ‌ர்க‌ளும் A. இம்தியாஸ் சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் O.முஹமது நூருல்லாஹ் சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் மற்றும் சென்னை மண்டல மாணவரனியின் உறுபினர்களும் மிகவும் சிறப்பாக செய்து முடித்திருந்தனர்

இந்த கண்காட்சியில் 25க்கும் மேற்ப்பட்ட அரங்குகளில் பல்வேறு துறைகளை பற்றி பல தகவல்களை தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள நமது மாணவரணியினர் ஏற்ப்பாடு செய்திருந்தனர் குறிப்பாக அங்கு அமைக்கப்பட்டிருந்த 10 மற்றும் 12 வகுப்புகள் முடித்த மாணவர்களுக்கான அரங்கம், பி.இ மற்றும் பி.டெக் போன்ற துறை பற்றிய அரங்கங்கள்,தொலை தூரக் கல்வி, முதுகளை, எம்.பி.ஏ,வேளை வாய்ப்பு, நுழைவுத் தேர்வு,சட்டக் கல்வி,பாதுகாப்புத் துறை, எம்.ஏ & எம்.காம், கலை மற்றும் வணிகம்,அறிவியல்,பொறியியல்,பத்திரிக்கைத் துறை வெளிநாட்டு படிப்புகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சம்மந்தமான அரங்குகளில் மாணவர்களும் பெற்றோர்களும் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

சகோதரர் சிவக்குமார் அவர்கள் ரேடியோகிராஃபி படிப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார் மற்றும் சகோதரர் உமர் அவர்கள் காவல் துறையில் எப்படி நுழைவது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினார். சகோதரர் சஃபி அவர்கள் நமக்கு கிடைத்துள்ள இட ஒதுக்கீடு பற்றியும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் ஒரு விளக்க உரை நிகழ்த்தினார்.
தொலை தூரக் கல்வி அரங்கில் செங்கல்பட்டை சேர்ந்த சகோ. அப்துல் வகீப் மற்றும் பைசூர் ரஹ்மான் அவர்களும் முதுகளை படிப்பு பற்றிய அரங்கில் கும்பகோணத்தை சேர்ந்த சகோ. அப்துர் ரஹ்மான் அவர்களும் எம்.பி.ஏ பிரிவில் தஞ்சையை சேர்ந்த சகோ. ஆசிக், ஜாஃபர் சாதிக் மற்றும் முஹ்மத் ரிஜ்வான் அவர்களும், வேளை வாய்ப்பு பகுதியில் சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த சகோ. ஷஜஹான், முஹ்மத் அனஸ் மற்றும் முஹ்மத் ரியாஸ் அவர்களும், சட்டக் கல்வி பகுதியில் சென்னையை சார்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக் அவர்களும் பாதுகாப்புத் துறை அரங்கில் சென்னை அசோக் நகரை சார்ந்த சகோ தமிமுல் அன்சாரி அவர்களும், எம்.ஏ & எம்.காம் படிப்புகள் பற்றிய அரங்கில் குண்றத்தூரை சேர்ந்த சகோ. முஹ்மத் உசைன் அவர்களும், கலை மற்றும் வணிகம் தொடர்பான அரங்கில் சென்னையை சேர்ந்த சகோ. முஹ்மத் இஸ்மாயில், ஜாவீத் மற்றும் முஹ்மத் யூசுப் அவர்களும், அறிவியல் துறை சம்மந்தமான அரங்கில் சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த சகோ. அப்துல் லதீப் மற்றும் சாகுல் அவர்களும் பொறியியல் படிப்புகள் சம்மந்தப்பட்ட அரங்கில் சகோ. அப்துல் கரீம் மற்றும் மீரா மொயீதீன் அவர்களும் பத்திரிக்கை துறை சார்ந்த அரங்கில் சகோ. அலமீன் அவர்களும் வெளிநாட்டு படிப்புகள் தொடர்பான அரங்கில் சகோ. ஹனீப்பா அவர்களும் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான அரங்கில் க‌டலூரை சேர்ந்த சகோ. கலீலூர் ரஹ்மான் அவர்களும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சம்மந்தப்பட்ட துறை பற்றியும் விரிவான விளக்கம் அளித்தனர்.
இதில் மிகவும் ஹைலைட் என்னவேன்றால் நமது சமுதாயத்தை சார்ந்த மாணவ மாணவிகளின் பெற்றோகள் மட்டும் இல்லாமல் மாற்று மத சகோதரர்களும் கலந்துக் கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று சென்றது தான்.




இறுதியாக நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மாணவரணி செயலாளர் சகோ. சித்திக் அவர்கள் மாணவரனியின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோ. பக்கீர் முஹ்மத் அல்தாஃபி அவர்கள் சமுதாயத்தின் கல்வியாளர்கள் நிலை என்ற தலைப்பிலேயும் வட சென்னை மாவட்ட பேச்சாளர் பெற்றோரும் மாணவர்களும்(பிள்ளைகளும்) என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தி மாணவரனியின் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியை நிறைவு செய்தனர்.

இந்த மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியின் வெற்றிக்கு முழு முதல் காரணம் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே என்பது யாரலும் மறுக்க முடியாத ஒன்று.

கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியின் புகைப்படங்கள்:

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP