வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

எங்கே பதில் ?

அன்பு சகோதர சகோதரிகளே ஒரு நாள் ஆன்லைனில் எனக்கும் இரு இளைஞர்களுக்கும் ஒரு குற்றச்சாட்டை பற்றி நடந்த ஒரு சிரியா விவாதம்.... (மேலும் விவரங்களுக்கு இனைபை பார்வையிடவும் Click Here)

அன்பு சகோதர சகோதரிகளே தமிழகத்தில் முஸ்லீல் அமைப்புகளில் ஒன்றான‌ பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா "வழுவான இந்தியாவை உருவாக்கலாம்" என்ற பிரச்சாரத்தில் இரங்கியுள்ள நாம் அனைவரும் அறிவோம்....

வெளியில்லிருந்து பார்க்கும் போழுது இந்த அமைப்பை பார்க்கும் இளைஞர்கள் இது இளைஞர் சக்தி இது இளைஞர்களை இஸ்லாத்தின் அடிப்படையில் நேர்வழி படுத்தக்கூடிய அமைப்பாகவே பார்கின்றனர்.

அனால் இன்று இந்த அமைபின் நிலை இஸ்லாமிய கொள்கையில் மிகவும் கவலைகிடமாக உள்ளது என்பதை யாரும் அறிவது இல்லை.

குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையான லாஹிலாஹ இல்லல்லாஹ் முஹ்மது ரஷூலுல்லாஹ் (தவ்ஹீதை) தூக்கி எறியும் அளவிற்க்கு இவர்கள் கீழ்தரமாக இறங்கியதை நாம் யாராலும் மறுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

உதாரணத்திற்க்கு எடுத்துக் கொண்டால் இவர்கள் நடத்திய பல மாநாடுகளில் மாநாட்டு மேடைகளில் இவர்கள் இஸ்லாத்தை மறந்த கதை உங்களுக்கு தெரியுமா ?

மாநாட்டு மேடையில் தலைவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது தொண்டர்கள் கைத்தட்டி விசில் அடித்து கொண்டு இருக்கும் நேரத்தில் மேடையில் இருந்த தலைவர்கள் இஸ்லாத்தை எடுத்து கூறி தடுக்காதது ஏன் ? "ஆஆஆஆஆஆஆஓஓஓஓஓ" என்று தொண்டர்கள் சத்தமிட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில் நபி வழியை கூறி தடுக்காதது ஏன் ?

அல்லாஹ் ஹராம் என்று கூறிய இசையை தங்கள் இயக்க பாடலுடன் சேர்த்தது ஏன் ?

இதுவா கொள்கை இதுவா வழுவான இந்தியாவை உர்ய்வாக்கும் தன்மை சற்று சிந்தித்து பாருங்கள் சகோதர சகோதரிகளே...

இவர்கள் இஸ்லாத்தின் அடைப்படை கொள்கையான தவ்ஹீதை மறந்து சல்யூட் அடித்த கண்றாவி கதையை எங்கே சொல்வது.....

தவ்ஹீதை மறந்து தனி மனித வழிப்பாட்டிற்க்கு வழிவகுக்கும் வகையில் தலைவர்களுக்கு சல்யூட் அடிக்கும் கன்றாவி காட்சிகள்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அணிவகுப்பில் எடுத்த புகைப்படங்கள்


இது தான் இஸ்லாமா ? இது தான் கொள்கை பிடிப்பா ? பதில் தாருங்கள்.....சரி இப்பொழுது ஆன்லைனில் நடந்த விவாதத்திற்க்கு வருவோம்...

நான் ஆன்லைனில் இருந்த போது "பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா" நடத்தவிருக்கும் மாநாட்டை பற்றிய விளம்பரம் எனக்கு அனுப்பப்பட்டது.

நான் அதற்க்கு இவர்கள் செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்று பதில் அளித்தேன்.... அதற்க்கு அவர் இது சமூக எழுச்சி மாநாடு புறியுதா என்று கூறினார்...

பிறகு நான் இதற்க்கு முன்னால் நடந்த மாநாடுகளில் இவர்கள் நடத்திய இசை கூத்துகளை பட்டியல் போட்டு அதற்க்கு மார்க்க ரீதியான விளக்கம் கேட்டேன் அதற்க்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா ?

"உஙகள் மனசாட்சியை தொட்டு கூறுங்கள் இதற்க்கு முன்னால் நீங்கள் இசையை கேட்டது இல்லை என்று " இது தான் அவர் கூறிய பதில்.

இதுவா வழுவான இந்தியாவை உருவாக்க கிளம்பியவர்கள் கூறும் பதில் சற்று சிந்தித்து பாருங்கள் சரி நான் இசையை கேட்க்க கூடியவனாகவே இருக்கட்டும் இவர்கள் பார்க்க கூடியது எதை என்னையா அல்லது முஹ்மத் நபி (ஸல்) அவர்களையா......

இன்னும் பல இடங்களில் இவர்கள் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பை எடுத்துக் கொள்வோம் அதில் அல்லாஹ்விற்க்கு மட்டும் அடிபணிய வேண்டிய கைகள் கொடிகளுக்கும் தலைவர்களுக்கும் அடிபனிந்த அசிங்கத்தையும் பார்த்தோம் அந்த அசிங்கத்தை இவர்களின் இனையதளத்தில் போட்டதையும் பார்த்தோம்.

இந்த இசை இயக்கத்தில் இருந்துக் கொண்டு இஸ்லாத்தை பேசும் இளைஞர்களே நன்மையை ஏவி தீமையை தடுப்பது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது அல்லவா ? ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை தடுக்கவில்லை

அந்த விவாதத்தில் நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் தராமல் உங்கள் இமெயில் கொடுங்கள் பதில் அளிக்கின்றேன் என்று கூறி இருந்தார் நானும் கொடுத்தேன் இன்று வரை பதில் வரவில்லை நான் பதிலை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் இன்ஷா அல்லாஹ்...

மேலும் விவரம் வேண்டும் என்றால் Click Here......

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP