வியாழன், 23 செப்டம்பர், 2010

PFI யின் அரசியல் பிரிவான SDPI யின் இன்னொரு முகம்

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

அன்பு சகோதர சகோதரிகளே பி.எஃப். யை சார்ந்த சகோதரர்களுக்கு பி.எஃப். மற்றும் அதன் சகோதர அமைப்புகள் செய்து வரும் இஸ்லாம் மற்றும் சமுதாய விரோத போக்கை ஆதாரத்துடன் தோல் உரித்து காட்டி வருகின்றோம். இதில் ஒரு பகுதியாக கலிமா சொன்ன ஒரு ஒரு முஸ்லீம்களின் வளர்ச்சிகாக பாடுபடுவோம் என்று அரசியலில் குதித்த பி.எஃப். யின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி. இன்று நாங்களும் அரசியல் வாதிதான் அரசியல் என்ற சாக்கடைக்குள் விழுந்தால் யாராக இருந்தாலும் சாக்கடையுடன் சாக்கடையாக தான் இருக்க வேண்டும் என்று நிறுபித்துள்ளார்கள்.

எஸ்.டி.பி. சார்பில் வைக்கபட்டுள்ள பேனரை பாருங்கள்....



இந்த பேனர்ருக்கு விமர்சனம் எதுவும் தேவை இல்லை என்று நினைகின்றேன்.

வழுவான இந்தியாவை உருவாக்க போகின்றோம் ????? என்றும் புதிய பாதை !! புதிய இந்தியா !! என்றும் கூறிக் கொண்டு ஒரு பகுதி இஸ்லாமிய மக்களையும் இளைஞர்களையும் தன்வசபடுத்தி இது போன்ற அனாச்சாரங்களிலும் அறிவை மழுங்க வைக்கும் இனைவக்கும் பாதக செயலிலும் ஈடுபடுத்தி மக்களிடத்தில் நன்மையை ஏவி தீமையை தடுக்காமல் நரக படுகுழிக்குழ் தல்ல நினைக்கும் அரசியலுக்காக இஸ்லாத்தை மறந்து எதையும் செய்ய துனியும் இது போன்ற தலைவர்களை இஸ்லாமிய சமுதாய மக்களும் , இவர்களுடன் கை கோர்த்து நன்மையை ஏவி தீமையை தடுக்காமல் நிற்க்கும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் புறக்கணித்து இறைவனின் வர்த்தைகளையும் உத்தம நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கிகாரத்தை காத்து இன்ஷா அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்று சொல்லப்படக் கூடிய உயர்ந்த சொர்க்கத்தில் சேர்க்க துஆ நாம் அனைவரும் துஆ செய்யலாம்.

பரங்கிப்பேட்டை T.H.கலீல்லூர் ரஹ்மான்.,B.Sc(CS).,MBA(L&S)

டி.என்.டி.ஜே மாணவர் அணி

Read more...

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

குற்றச்சாட்டா ? அவதூறா ?

குற்றச்சாட்டா ? அவதூறா ?

அன்பு இனையதள வாசகர்கள் அனைவரின் மீதும் அந்த ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...........

வழுவான இந்தியாவை உருவாக்குவோம் என்று கலத்தில் இறங்கி இஸ்லாத்தை மறந்து இந்த உலக வாழ்க்கையின் பக்கம் சென்று கொண்டு இருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற ஒரு அமைப்பை பற்றிய குற்றச்சாட்டை கடந்த 2010 பிப்ரவரி மாதம் (ஏழு மாதங்களுக்கு முன்பு) ஆதாரத்துடன் அடுக்கடுக்காக "எங்கே பதில்" என்ற தலைப்பில் www.cuddaloretntj.blogspot.com இனையத்தளத்திலும் & மெயில் மூலமும் நான் அனுப்பியது தாங்கள் யாவரும் அறிந்த ஒன்றே.


அதற்க்கான பதிலை 7 மாதங்களுக்கு பிறகு முத்து அஹ்மத் என்ற ஒரு சகோதரர் அனுப்பியுள்ளார். இதில் வருத்ததிற்க்கு உறிய விஷயம் என்ன என்றால் இந்த அமைப்பிலும் பதில் சொல்ல தைரியதுடன் ஒருவர் இருக்கிறார் என்று சந்தோஷ படுவதா அல்லது பதில் கூறியவரும் இந்த அமைப்பை போல் மார்க்கத்தை மறந்து உலக விஷயத்தில் தான் கவணம் செலுத்தியுள்ளார் என்பதை நினைத்து கவலைபடுவதா ? என்பது தான்.

சரி இப்போழுது சகோ. முத்து அஹ்மத் அவர்கள் அனுப்பிய பதிலுக்கு வருவோம் " அவதூறுகளுக்கு பதில்" என்ற சப்ஜேக்ட்டுடன் தான் இவர் எனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அனுப்பியுள்ளார்.


முதலில் இந்த சகோதரர் குற்றச்சாட்டிற்க்கும் அவதூறுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவதூறு என்றால் ஒரு தனி நபரை பற்றியோ அல்லது ஒரு ஜமாஅத்தை பற்றியோ சற்றும் ஒரு ஆதாரம் இல்லாமல் அடிப்படை சாட்சியங்கள் இல்லாமல் வாய்க்கு வந்ததை உளறி கொட்டுவது தான் அவதூறு. ஆனால் குற்றச்சாட்டு என்பது அப்படியல்ல நம்மிடம் இருக்கும் ஆதாரத்தை அடிப்படையாக கொண்டது தான் குற்றச்சாட்டு. அதன் அடிப்படையில் தான் " எங்கே பதில்" என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த சகோதரருக்கு குற்றச்சாட்டிற்க்கும் அவதூறுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது வருத்தத்திற்க்குறிய விஷயம். "எங்கே பதில்" என்ற தலைபில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டில் நடக்காத ஒரு விஷயத்தை பற்றி நான் கூறி இருந்தால் அதை அவதூறு என்று கூறலாம். ஆனால் நான் கூறிய அனைத்துமே நடந்த ஆதாரம் உள்ள குற்றச்சாட்டுகள் ஆகும் அது உண்மை தான் என்று சகோ.முத்து அஹ்மத் அவர்களே அவர்களின் மெயிலில் வாக்குமூலம் அளித்துள்ள போது நான் கூறிய எந்த ஒரு விஷயமும் அவதூறு இல்லை என்று அவர் நாவின் வாயிலாகவே அல்லாஹ் நிறுபித்து உள்ளான் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...


அடுத்ததாக அவர் அந்த பதிலை அவருடைய நன்பர் அஸ்லம் என்பவருக்கும் எனக்கும் அனுப்பியுள்ளார் என்று நினைகின்றேன் அந்த பதிலின் முதல் பாராவிலேயே நாங்கள் இஸ்லாத்தை எடுத்து கூறுபவர்கள் கிடையாது இயக்கத்தை தான் எடுத்து கூறப் போகின்றோம் என்று அல்லாஹ் அவரின் நாவை கொண்டே ஒப்புதல் அளிக்க வைத்துள்ளான் அல்லாஹ் அக்பர் . அவர் கூறி இருக்கும் அந்த வாக்கியங்கள் இதே உங்கள் பார்வைக்கு...


சகோ. முத்து அஹ்மத் அவர்களின் வாதம்...

உங்களுடைய பதிலுக்கு மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எங்களுடைய இயக்கத்தை உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுடைய நண்பர்களுக்கும் எடுத்துக்கூரும் வாய்ப்பை எனக்கு கொடுத்துள்ளீர்கள்.”

அடுத்ததாக வாதத்தில் சம்மந்தம் இல்லாத பி.ஜே வை இவர் இழுத்துள்ளார். இதோ பி.ஜே வை பற்றிய அவரின் வாதம்..

P.J ளவிற்கு எனக்கு மார்க்கம் தெரியாவிட்டாலும், அவரும் சில நேரங்களில் தவறு செய்யலாம் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

P.J - யின் விமர்சனத்திற்கு தப்பாத இயக்கங்களே உலகில் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறலாம். அந்த அளவிற்கு அனைத்து இயக்கங்களையும் குறை கூறியுள்ளார் (.. வைத்தவிற). இதற்கு P.F.I மட்டும் விதிவிலக்கா என்ன?

அன்பு சகோதரர் முத்து முஹ்மத் அவர்களே பி.ஜே மட்டும் இல்லை அல்லாஹ் அனைத்து மனிதர்கள் பற்றி தனது திருமறையிலே பேசும் அனைத்து வசனங்களிலும் மனிதர்களை 100 % உத்தமர்களே என்று கூறவில்லை மாறாக தனக்கு தானே தீங்கு இழைத்து கொண்டவர்களே என்று தான் கூறுகின்றான் இதில் பி.ஜே என்ன மனிதர்கள் யாவரும் வந்து அடங்குவார்கள் இதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது....


அடுத்ததாக பி.ஜே அவர்கள் உலகில் உள்ள அனைத்து இயக்கங்களையும் விமர்சனம் செய்துள்ளார் அவரின் விமர்சனத்திற்க்கு தப்பாத இயக்கங்களே இல்லை என்று கூறி இருந்தீர்கள் உன்மை தான்... இந்த விஷயத்தை பொருத்த வரை நீங்கள் சற்று பொறுமையுடன் சிந்திக்க கடமைபட்டுள்ளீர்கள். விமர்சனம் செய்கிறார் என்பதோடு நிறுத்திவிடாமல் எதை பற்றி விமர்சனம் செய்கிறார் யாரை பற்றி செய்கிறார் என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் அவர் செய்யும் விமர்சனங்கள் யாவும் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் பற்றியும் சமுதாய துரோகிகள் பற்றியும் தான் இருந்ததே தவிர வீணான அவதூறாக இருக்கவில்லை.


உதாரணத்திற்க்கு எடுத்துக் கொள்வோம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் .மு.மு. , பி.எஃப். போண்ற இயங்கங்களை விமர்சணம் செய்தார் ?? இந்த விமர்சணத்தை விமர்சனம் செய்தார் என்று நிறுத்திவிடாமல் எதற்க்காக செய்தார் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

.மு.மு. கூட்டணியில் ஆதரவாளராக பி.எஃப். இருந்தீர்கள் இதை உங்களால் மறுக்க முடியாது சரி .மு.மு. எந்த கூட்டனியில் இருந்தது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடனும் கிருஷ்னசாமியின் புதிய தமிழகம் கட்சியுடனும். இவர்கள் 2 பேரும் பி.ஜே.பி யுடன் நேரடியாக கூட்டனியில் இருந்தார்கள் இதை விமர்சணம் செய்ய கூடாது என்று கூறுகிறீர்களா ????

அல்லது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையான ஏகத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் அளவிற்க்கு உங்கள் மாநாட்டு மேடையில் " கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை" என்ற குறள் ஒழித்த போது உங்கள் தலைவர்கள் வாய் மூடி அமர்ந்து இருந்தார்களே அதை விமர்சணம் செய்ய கூடாது என்று கூறுகிறீர்களா ???..... (ஆதாரம் தேவை இல்லை உங்களுக்கே புரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்)

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ?????? ஆதனால் அவரின் விமர்சனமும் இஸ்லாத்தின் அடிப்படையில் தவறு இல்லை

அடுத்ததாக சகோதரர் பி.ஜே அவர்கள் டி.என்.டி.ஜே வை தவிற மற்ற எல்லா அமைப்புகளையும் விமர்சனம் செய்துள்ளார் என்ற ஒரு தவறான செய்தியையும் முன்வைத்துள்ளார். இது பொய்யான வாதம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் டி.என்.டி.ஜே முன்னால் நிர்வாகிகள் பல தவறுகள் செய்து அந்த தவறுகளுக்கான நிர்வாக தண்டனைகள் கொடுக்கப்படும் போது மறைமுகமாக இல்லாமல் பகிரங்கமாக டி.என்.டி.ஜே நிர்வாகத்தையும் தனது நிர்வாகத்தையும் பல முறை விமர்சித்துள்ளார் என்பது அந்த விமர்சன விடியோகளை இனையதளத்தில் பார்த்த அனைத்து சகோதரர்களும் அறிவார்கள்.

"எங்கே பதில்" என்ற கட்டுரையில் நான் வைத்த குற்றச்சாட்டு...

குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையான லாஹிலாஹ இல்லல்லாஹ் முஹ்மது ரஷூலுல்லாஹ் (தவ்ஹீதை) தூக்கி எறியும் அளவிற்க்கு இவர்கள் கீழ்தரமாக இறங்கியதை நாம் யாராலும் மறுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

உதாரணத்திற்க்கு எடுத்துக் கொண்டால் இவர்கள் நடத்திய பல மாநாடுகளில் மாநாட்டு மேடைகளில் இவர்கள் இஸ்லாத்தை மறந்த கதை உங்களுக்கு தெரியுமா ?


மாநாட்டு மேடையில் தலைவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது தொண்டர்கள் கைத்தட்டி விசில் அடித்து கொண்டு இருக்கும் நேரத்தில் மேடையில் இருந்த தலைவர்கள் இஸ்லாத்தை எடுத்து கூறி தடுக்காதது ஏன் ? "ஆஆஆஆஆஆஆஓஓஓஓஓ" என்று தொண்டர்கள் சத்தமிட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில் நபி வழியை கூறி தடுக்காதது ஏன் ?

சகோ. முத்து அஹ்மத் அவர்களின் வாதம்...

அதாவது எங்களுடைய பொறுப்புதாரிகள் தவ்ஹீதை தூக்கி எறியும் அளவிற்கு மாநாட்டு மேடைகளில் நடந்து கொண்டார்களாம்! தொண்டர்கள் "ஆஆஆஆஆஆஆஓஓஓஓஓ" என்று கத்தினார்களாம், விசில் அடித்தார்களாம்!, இதை தலைவர்கள் தடுக்கவில்லையாம் இதனால் நாங்கள் தவ்ஹீத் கொள்கை தூக்கி எறிந்துவிட்டோமாம்! "ஆஆஆஆஆஆஆஓஓஓஓஓ" என்று கத்துவதற்கும் தவ்ஹீத் கொள்கைக்கும் என்ன சம்பந்தம்? ஒருத்தர் அவ்வாறு கத்துவதால் ஷிர்க் செய்தவராக ஆகிவிடுவாரா? அப்படி அர்த்தமில்லாமல் கத்துவதற்கு அவர்கள் என்ன பைத்தியக்காரர்களா? உங்களுடைய மாநாடுகளில் மக்கள் எவ்வாறு தக்பீரை உறக்க சொல்கிறார்களோ அதைப் போன்றுதான் எங்களுடைய மாநாடுளிலும் தக்பீரை உறக்கச் சொல்கிறார்கள். "ஆஆஆஆஆஆஆஓஓஓஓஓ" என்று கத்துகிறார்கள் என்று சொல்வது சுத்தப் பொய்யே தவிற வேறில்லை!

நானும் பயானில் கேள்விப்பட்டிருக்கிறேன் விசில் அடிப்பதும், கை தட்டுவதும் அவர்களுடைய (மக்கா காபீர்கள்) வணக்க வழிபாடாக இருந்தது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறியிருப்பதாக, ஆனால், மாநாட்டில் கைத்தட்டி, விசில் அடித்து யார் யாரை வணங்கினார்கள் என்பதை விளக்கி கூரமுடியுமா? கைத்தட்டுவதையும், விசில் அடிப்பதையும் ஜாஹிலிய அரபிகள் வணக்கமாக கொண்டிருந்தார்களே தவிற இந்தியர்கள் அல்ல. விசில் அடிப்பதும், கை தட்டுவதும் ஹராம் என்று ஹதீத்களில் இருப்பதாக நாம் உணரவில்லை. அவ்வாறு இருந்தால் கூருங்கள். நாம் இதை மார்க்கமாகவும் பார்கவில்லை. இன்னும் இதைப்பற்றி தெளிவாக கூற்வேண்டுமென்றால் உதாரணத்திற்கு வெகுதொலைவில் நமது நண்பர் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அவரை நாம் சப்தமிட்டு அழைத்தும் அவரது காதில் அது விழவில்லையென்றால், அடுத்தகட்ட நடவடிக்கையாக கை தட்டியோ அல்லது விசில் அடித்தோ அழைக்க முற்படுவார்கள் இது இயல்பு!. மனிதன் வித்தியாசமான ஒலியை கேட்டால் அது என்ன? எங்கிருந்து அந்த ஒலி வருகிறது என்பதை பார்க்க முனைவான். இதுவும் இயல்பு!. ஆக ஒருவர் அவ்வாறு அழைத்தால் அவர் இணைவைத்துவிட்டார் என்று கூற வருகிறீர்களா? அப்படி சொன்னால் உங்களை பைத்தியக்காரன் என்று சொல்வதை விட வேறு வார்த்தைகள் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் எங்களுடைய அமைப்பில் உறுப்பினராக இருக்கும் யாரும் இதை செய்வதில்லை. அப்படி செய்வதெல்லாம் எங்களை ஆதரிக்கும் சாதரண மக்கள் தான். அதை ஏன் தடுக்கவில்லை என்ற் கேட்டால், மேலே சொன்னது போல அது தவறில்லை. உங்களுடைய ஜமாத்தினருக்கு விசில் அடிக்க தெரியவில்லயென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!

உன்மையிலேயே இந்த மனிதரின் அறியாமையை நினைத்தால் மனது மிகவும் வேதனை தான் அடைகிறது... அவரின் பதிலை பார்த்தால் நமக்கே புரிந்து விடும் கை தட்டுவதும் விசில் அடிப்பதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா என்பது.. அவரே அல்லாஹ் கூறியதாக ஒப்புக் கொண்டுள்ளார் அறியாமை காலத்து அரேபியர்களின் வணக்க வழிபாட்டில் ஒரு அங்கம் கைத் தட்டுவதும் விசில் அடிப்பதும் என்பதை....

பிறகு கை தட்டினால் என்ன ?? விசில் அடித்தால் என்ன ?? என்று கேட்பது இவரின் சிறு பிள்ளை தனத்தை உணர்த்துகிறது...


அல்லாஹ் மனிதர்களை எச்சரிக்கின்றான் நீங்கள் மறுபடியும் அறியாமை காலத்து மூட பழக்கதின் பக்கம் திருப்பாதீர்கள் என்று....


அதே போல ஒரு மனிதரின் உணர்ச்சிகள் மிகும் நேரத்தில் அல்லாஹ் அக்பர் என்று அல்லாஹ்வை போற்றி புகழ வேண்டும் என்பது முஹ்மத் நபி (ஸல்) அவர்களின் கட்டளை.


அல்லாஹ்வின் அறிவுறை நபி(ஸல்) கட்டளை இவ்விரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு உணர்த்துவது தலைவர்களுக்காகவோ அல்லது ஒருவரை புகழுவதற்காகவோ கை தட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை நம்மால் உணர முடிகின்றது..... ஆனால் ஒரு சில இடங்களில் கையை தட்ட இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளதை ஹதீஸ் நூல்களில் நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக தொழுகையில் இமாம் தவறு செய்யும் போது அதை சுட்டிக் காட்டுவதற்க்காக பென்கள் தங்கள் கைகளை தட்டலாம்...


ஒருவரை கூப்பிடுவதற்க்காக கை தட்டலாம என்று இவர் வினாவும் கேள்வி சரி தான் அதற்க்கு கை தட்டலாம். கை தட்டுவதில் இஸ்லாம் கூறுவது என்ன என்பதை இவர் முதலில் உணர வேண்டும். தூரத்தில் போகும் ஒரு நபரை அழைக்க கை தட்டி கூப்பிட்டால் அது அந்த நபரை புகழுவது போல் ஆகாது ஆனால் உங்கள் சகாக்கள் மாநாடுகளில் கைத்தட்டுவது மேடையில் உள்ள தலைவர்களை கூப்பிடுவதற்க்காக அல்ல மாறாக அவர்களின் பேச்சில் உணர்ச்சி மிகுந்த கருத்துக்கள் வெளிபடும் போது அவர்களை புகழ்வதற்க்காகவே (அறியாமை காலத்து அரேபியர்களை போல) தவிற வேறு எந்த காரணமும் இதற்க்கு கூற முடியாது இந்த வரம்பு மீறலை தான் இஸ்லாம் தடுத்து இருக்கிறது என்பதை இந்த சகோதரர் புரிந்து கொள்ள வேண்டும்...

அறியாமை காலத்து அரேபியர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால் அவர்கள் இப்ராஹீம் நபியின் சிலையையும் இஸ்மாயில் நபியின் சிலையையும் இன்னும் பிற நபிமார்களின் சிலையையும் கை தட்டியும் விசில் அடித்தும் வரம்பு மீறி புகழ்ந்தார்கள் நீங்கள் உங்கள் மேடையில் உள்ள தலைவர்களை விசில் அடித்தும் கை தட்டியும் வரம்பு மீறி புகழ்கின்றீர்கள் அவ்வளவு தான் ???


அடுத்ததாக அவரின் வாதத்தை நாம் கவணித்தோமேயானால் நம்மால் ஒரு விஷயத்தை உணர முடிகின்றது. அது என்ன என்றால் டி.என்.டி.ஜே நடத்தும் நிகழ்ச்சிகளில் விசிலோ அல்லது கை தட்டலோ இல்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்....


இதோ அவரின் வாதம் உங்கள் பார்வைக்காக...


இன்னும் சொல்லப்போனால் எங்களுடைய அமைப்பில் உறுப்பினராக இருக்கும் யாரும் இதை செய்வதில்லை. அப்படி செய்வதெல்லாம் எங்களை ஆதரிக்கும் சாதரண மக்கள் தான். அதை ஏன் தடுக்கவில்லை என்ற் கேட்டால், மேலே சொன்னது போல அது தவறில்லை. உங்களுடைய ஜமாத்தினருக்கு விசில் அடிக்க தெரியவில்லயென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!

இதில் இருந்து அவர் கூற வருவது என்ன என்றால் அவர்களின் மாநாட்டுக்கு வந்த அவர்களின் ஆதரவாளர்கள் தான் கைதட்டியோ விசில் அடித்தோ இருப்பார்கள் எங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் செய்ய மாட்டார்கள் என்பது தான்.

இந்த சகோதரர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் மாநாட்டுகாவது உங்களின் ஆதரவாளர்கள் வருவார்கள் ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தக் கூடியா அனைத்து மாநாடு பொதுக் கூட்டம் , போரட்டங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க கூடிய எங்கள் நிர்வாகிகள் மற்றும் உறுபினர்களை அடிக்க கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத்தை கடுமையாக விமர்சிக்க கூடிய அமைப்புகளில் இருந்து தான் மக்கள் அதிகம் அதிகம் வருகின்றார்கள் எங்கள் மாநாடுகளில் வந்து பாருங்கள் எந்த அளவிற்க்கு இஸ்லாம் கடைபிடிக்க படுகிறது என்று. தலைவர்கள் பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு மக்கள் விசில் அடிப்பதும் கை தட்டுவதும் இயல்பு தான் மேடையில் உள்ள எங்கள் நிர்வாகிகள் பேசிக் கொண்டு இருக்கும் எங்கள் பேச்சாளர்கள் அது போன்ற நேரத்திலும் அந்த மக்களிடமும் உங்களை போல் இயக்கத்தை எத்தி வைக்காமல் " கை தட்டாதீர்கள் அது இஸ்லாமிய கலாச்சாரம் இல்லை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தது போல அல்லாஹ் அக்பர் என்று ஏகன் ஒருவனை மட்டும் புகழுங்கள்" என்று கூறுவதை பார்க்காமல் இருக்க முடியாது.


இந்த இஸ்லாமிய பண்பு எங்கே சென்றது ?


"ஆஆஆஆஆஆஆஓஓஓஓஓ" என்று கத்துகிறார்கள் என்று சொல்வது சுத்தப் பொய்யே தவிற வேறில்லை!”

என்று கூறும் இந்த பொய்யர் அதற்க்கான ஆதாரத்தை உங்கள் தலைமையகத்தில் விற்க்கபடும் சி.டி. யை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் யார் கூறுவது உண்மை என்று....

அவரது பதிலில் என்னை பைத்தியகாரன் என்று கூறும் இவர் இந்த பைதியகாரனின் வாதத்திற்க்கு பதில் கூறட்டும் யார் பைத்தியக் காரன் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.. (ஏற்க்கனவே பதில்களை பார்த்து புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்)

அடுத்ததாகா முதலில் "எங்களுடைய அமைப்பில் உறுப்பினராக இருக்கும் யாரும் இதை செய்வதில்லை" என்று கூறிவிட்டு "உங்களுடைய ஜமாத்தினருக்கு விசில் அடிக்க தெரியவில்லயென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல! " என்று அவர்கள் அமைபில் உள்ளவர்களுக்கு விசில் அடிக்க தெரியும் என்பதை தெரிவித்து முன்னுக்கு பின் முரணாக பேசிக் கொண்டு அழைகிறார்


சகோ. முத்து முஹ்மத் அனுப்பிய 2வது மெயில் உங்கள் பார்வைக்கு....


சகோதரர் அஸ்லம் அவர்களுக்கு,

குற்றச்சாட்டு-2

அல்லாஹ் ஹராம் என்று கூறிய இசையை தங்கள் இயக்க பாடலுடன் சேர்த்தது ஏன் ?

.....சரி இப்பொழுது ஆன்லைனில் நடந்த விவாதத்திற்க்கு வருவோம்...நான் ஆன்லைனில் இருந்த போது "பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா" நடத்தவிருக்கும் மாநாட்டை பற்றிய விளம்பரம் எனக்கு அனுப்பப்பட்டது.நான் அதற்க்கு இவர்கள் செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்று பதில் அளித்தேன்.... அதற்க்கு அவர் இது சமூக எழுச்சி மாநாடு புறியுதா என்று கூறினார்...பிறகு நான் இதற்க்கு முன்னால் நடந்த மாநாடுகளில் இவர்கள் நடத்திய இசை கூத்துகளை பட்டியல் போட்டு அதற்க்கு மார்க்க ரீதியான விளக்கம் கேட்டேன் அதற்க்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா ?"உஙகள் மனசாட்சியை தொட்டு கூறுங்கள் இதற்க்கு முன்னால் நீங்கள் இசையை கேட்டது இல்லை என்று " இது தான் அவர் கூறிய பதில்.இதுவா வழுவான இந்தியாவை உருவாக்க கிளம்பியவர்கள் கூறும் பதில் சற்று சிந்தித்து பாருங்கள் சரி நான் இசையை கேட்க்க கூடியவனாகவே இருக்கட்டும் இவர்கள் பார்க்க கூடியது எதை என்னையா அல்லது முஹ்மத் நபி (ஸல்) அவர்களையா......

பதில்:

முதலில் இசை கேட்பது ஹராம் என்று குர்ஆனில் எங்குமே குறிப்பிடபடவில்லை. இசை சம்பந்தமான விஷயங்கள் ஹதீத்களில் தான் வருகிறது. "இசைக்கருவிகளை பயன் படுத்தாதீர்கள், அது இறைவனின் சிந்தனையில் இருந்து உங்களை திசைத்த்ருப்பும்" என்ற ஹதீத் வருகிறது. அதே போன்று நபி(ஸல்) அவர்கள், தஃப் என்று சொல்லக்கூடிய கொட்டு மட்டும் அனுமதித்துள்ளார்கள் என்றும் ஹதீத் வருகிறது.

இசை ஹராமா? இல்லையா? என்று ஒருமித்த கருத்து இன்று இஸ்லாமிய அறிஞ்ஞர்கள் மத்தியில் இல்லை. ஒரு சாரார் அது ஹராம் என்றும் மறுசாரார், மதி மயக்கக்கூடிய இசை மட்டுமே ஹராம் என்றும் கூறி வருகிறார்கள்.

கனடா நாட்டைச்சேர்ந்த மார்க்க அறிஞர் ஷேக் அகமது குட்டி அவர்கள் கூறும்போது, "கடந்த காலங்களிலு சரி, நிகழ்காலங்களிலும் சரி, இசை பற்றிய சர்ச்சை மார்க்க அறிஞர்கள் மத்தியில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலர் தஃப்பைத்தவிற மற்ற எல்லா இசைக்கருவிகளும் தடுக்கப்பட்டவை என்றும், வேறு சிலர் மதிமயக்கக்கூடிய, ஆபாசத்தை ஏற்படுத்தக்கூடிய, இசைகள் தான் ஹராம் என்றும் விவாதம் செய்து வருகின்றனர்."

ஷேக் அகமது குட்டி அவர்கள் கூறிய பதிலை ஆங்கிலத்தில் கீழே பேஸ்ட் செய்துள்ளேன்.

In his response to the question you posed, Sheikh Ahmad Kutty, a senior lecturer and an Islamic scholar at the Islamic Institute of Toronto, Ontario, Canada, states:

“Music is an issue that has been hotly debated by scholars of the past and the present. While many of them have been generally inclined to condemn all forms of music, with the singular exception of ad-duff (tambourine) in weddings, quite a few of them have taken a more positive approach of considering only music containing sensual, pagan, or unethical themes or subliminal messages as being categorically forbidden.


The latter view seems to be more consistent with the general nature of Islam, which is undoubtedly a complete way of life that caters to all of the genuine human instincts and needs within permissible limits. Thus, to say that all music is forbidden in Islam does not seem to agree with the balanced approach of Islam to issues of human life and experience.


Traditions often cited by the first group scholars to justify condemnation of all musical instruments and music, according to some scholars, are considered as either spurious, or phrased in such way solely because of their associations with drinking, dancing, and sensuality.


While everyone agrees that all forms of music that contain pagan, sensual themes, or subliminal messages are clearly forbidden, the latter group of scholars considers all forms of music free of such themes and messages as permissible.


As a matter of fact, we know from the authentic traditions that the Prophet, peace and blessings be upon him, not only allowed music in the weddings but also listened to girls singing: While listening to girls singing on such an occasion, he interrupted them only once when they sang the following verse, “In our midst is a prophet who knows what will happen tomorrow”; whence, the Prophet, peace be upon him, told them,
“Cut this sentence out, and continue singing what you have been singing earlier.” There is nothing in the sources to indicate that the above permission is limited to the occasion of wedding, as some people tend to think.

In light of these, according to the last mentioned group of scholars, music that is deemed to be free of un-Islamic and unethical themes and messages, the same is true of musical instruments so long as they are not used for the above, have been considered as permissible.


எங்கள் இயக்கப்பாடல்களில் இசை இருப்பது உண்மைதான். அதிலே இசை மிகைத்து விடக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். இதை எங்களின் உலமாக்கலின் அணியான "ஆல் இந்தியா இமாம் கவுன்ஸில்" மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறது. நம்முடைய கருத்தும் அதேதான்.

அன்பு சகோதரர்களே! யார் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்வதா? சரியா? தவறா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

இன்று உலகில் மனிதன் சோறு, தண்ணீர் கூட இல்லாமல் வாழ்ந்து விடுவான் போல் தெரிகிறது, ஆனால் செல்போன் இல்லாமல் வாழமுடியாது என்ற நிலை வந்துவிடும் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு செல்போனின் பயன்பாடு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு செல்போனிலும் இசை இல்லாமல் இல்லை! அந்த இசைகளைத்தான் நாம் நமது ரிங்டோனாக வைத்திருக்கின்றோம்.

ஒரு வாதத்திற்காக நீங்கள் "இல்லை! இல்லை! நாங்கள் லேடஸ்ட் செல்போன்களைத்தான் பயன்படுத்துகிறோம், அதிலே குர்ஆன் வசனங்களைத்தான் ரிங்டோனாக வைத்திருக்கின்றோம் என்று நீங்கள் வாதிடுவீர்க்ளானால், எல்லோர்னாலும் உங்களைப்போன்று கேமரா வசதி கொண்ட செல்போன்களை வாங்க முடியாது! அவர்களுடைய சக்திக்கு ஏற்றவாறுதான் வாங்க முடியும்.

சாதாரண மொபைலில் கூட இசைத்தான் உள்ளது. உதாரணத்திற்கு நோக்கியா 3300 மொபைலை எடுத்துக்கொள்வோம், அதிலே சாதாரணமான டோனாக இருப்பது NOKIA RINGTONE. உங்களின் வாதப்படி இந்த சாதாரண டோன் கூட ஹராம் தான். இந்த டோனோ அல்லது இதைப்போன்ற டோனோ செல்போன் பயன்படுத்தும் அனைவர்களிடமும் உண்டு ( நாங்கள் தான் உண்மையான தவ்ஹீத் அடிப்படையில் இருக்கின்றோம் என்று வாய் கிழிய பேசும் அனைவர் உட்பட)

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், "ஒரு காலம் வரும், அப்பொழுது எல்லோருடைய வீட்டிலும் இசைக்கருவிகள் இருக்கும் என்று கூறியுள்ளார்கள்". நபி(ஸல்) அவர்கள் இங்கே இசைக்கருவி என்பது பியானோ,வயலின், போன்ற கருவிகள் மட்டும்தான் என்று எண்ணிவிட வேண்ட்டாம், செல்போனும் இதிலே அடங்கும். ஏன் அப்படி கூறுகிறேன் என்றால்? வயலினில் இருந்து ஒரு குறிப்பிட்ட இசை மட்டும்தான் வரும், அதே போன்றுதான் மற்ற கருவிகளிலும். ஆனால் செல்போனிலே அப்படி அல்ல, எல்லா இசை கருவிகளுடைய இசையும் ஒன்று சேர்ந்து வரும். அப்படி என்றால் அதுவும் இசை கருவிதானே! உங்களிலே எத்தனை பேர் இந்த இசைக்கருவிகளை உங்களுடைய வீடுகளிலும், கைகளிலும் வைத்துள்ளீர்கள்? செல்போனை எதற்காக பயன் படுத்துகிறோம் என்றுதான் பார்க்க வேண்டும் என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்! உங்களால் அந்த இசையை பயன்படுதாமல் இருக்க முடியாது. இசைகளைத்தவிற்கலாமே! என்று வாதிட்டால் அது ஹராம் என்ற வாதிடாதீர்கள், ஏனென்றால் இப்படி வாதிடுவது முரண்பாடாகும்.


PFI- யின் நிர்வாகியாக இருப்பதால் என்னால் ஒரு விஷயத்தை சரியாக கூறமுடியும், அது என்னெவென்றால்? மற்ற எல்லா சகோதர அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதல்கள் நம்முடைய அலுவலகத்திற்கு வரும். அதே போன்று எங்களுடைய நிகழ்ச்சிக்கான அழைப்பிதல்களும் அவர்களுக்கு போய் சேரும். ஆனால் .. வினுடைய எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பிதல் வந்ததில்லை, நாங்களும் அதை எதிர்ப்பார்க்கவில்லை. நாங்களும் அவர்களுக்கு அனுப்பியதில்லை.


ஆனால் இணையதளத்தின் மூலம் யாரோ அழைத்தார்களாம், அதற்கு இவர் ஏதோ கேள்வி கேட்டாராம்! அதற்கு அந்த நபர் முட்டாள்த்தனமாக பதில் அளித்ததாக கூறுகிறார்.


இணையதளத்தில் யார் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், என்ன பதில் வேண்டுமானாலுக் கூறலாம். உண்மையிலேயே அந்த மனதர் கேட்ட கேள்வி முட்டாள்த்தனமாகத்தான் உள்ளது. ஆனால் அதை P.F.I - யின் நிர்வாகி தான் கேட்டார் என்று உறுதியாக சொல்லமுடியாது. அப்படியே அதை கேட்டது P.F.I - யின் சகோதரர் தான் என்றால் அது அவரின் அறியாமையைத்தான் குறிக்கிறது. ஒருவர் தவறாக பதில் அளித்துவிட்டார் என்றால் அதற்கு பதிலே இல்லை என்ற அர்த்தம் கிடையாது என்பது உங்களுக்கு கண்டிப்பாக தெரியும் என்று நம்புகிறேன்.

நமது நிலைபாடு...

இவர் கூறி இருக்கும் பதிலை கேட்டு இவரின் அறியாமையை நினைத்து கவலைபடுவதா இல்லை இவரின் வாதத்தை நினைத்து சிறிப்பதா என்று தெரியவில்லை...

முஹ்மத் நபி(ஸல்) அவர்களி "இசை கருவிகளை பயன்படுத்தாதீர்கள் அது இறைவனின் சிந்தனையில் இருந்து உங்களை திசை திருப்பும்" என்று கூறியதை இவரே அனைவருக்கும் இவரின் பதில் மூலமாக எடுத்து வைத்துவிட்டு. அதனை பயன்படுத்துவது ஹராம் இல்லை என்றும் முரண்பட்டுள்ளார்.

இந்த சகோதரருக்கு முஹ்மத் நபி(ஸல்) அவர்களின் இசையை பற்றிய மற்றும் ஒரு அறிவிப்பை நினைவுபடுத்த விரும்புகின்றேன் அதாவது " இசை கருவிகளை உடைத்து எரிய நான் அனுப்பபட்டுள்ளேன் " என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

உடனே நீங்கள் கூறிய சேக் அஹ்மத் குட்டியின் வாதத்தை எடுத்து வைப்பீர்கள்.....

அவர் கூறும் அதே கருத்தில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதியாகஇருக்கின்றது.... முதலில் இசையை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று உணர்த்துவதற்க்காக எழுப்ப கூடிய இசை அடுத்து இரசிப்பதற்க்காக எழுப்ப பட கூடிய இசை....

அவர் கூறும் அந்த ஹதீஸ் ல்

ஒரு திருமணத்தின் போது ஒரு சிறுமி தஃப் என்று சொல்ல படக்கூடிய ஒரு கருவியை வைத்து சப்தத்தை ஏற்படுத்திக் கொண்டே பாடிக் கொண்டிருந்தால்... முஹ்மத் நபி (ஸல்) அவர்களை கண்ட அந்த சிறுமி எங்களிடம் ஒரு தூதர் இருக்கிறார் அவர் பின்னால் நடக்க கூடியதை எங்களுக்கு முன்னரே அறிவிப்பவராக இருக்கிறார் என்று பாடும் நேரத்தில் முஹ்மத் நபி (ஸல்) அவர்கள் அந்த வரியினை மட்டும் நீக்கி விட்டு பாடலுக்கும் அந்த தஃபிற்க்கும் அனுமதி அளித்தார்கள்

இந்த ஹதீசை மட்டும் வைத்துக் கொண்டு இசை இஸ்லாத்தில் கூடும் என்ற முடிவிற்க்கு வந்து விட கூடாது...

ஃப் என்று சொல்லப்படக்கூடிய கருவி இன்றைக்கு மோலம் என்று பயன்படுத்துகின்றோமே அதை போன்றது ஆகும் ஆனால் அது போல ஒலியை எழுப்ப சக்தி பெற்றது இல்லை என்பதை இந்த சகோதரர் புரிந்து கொள்ள வேண்டும்....

அடுத்ததாக மிகவும் அழகன அறிவான ஒரு உதாரணத்தை நமது சகோ. முத்து முஹ்மத் அவர்கள் எடுத்து வைக்கின்றார் அது என்ன தெரியுமா ????? ஏழு மாதங்களுக்கு முன்பு "எங்கே பதில்" என்று நாம் வெளியிட்ட தருனத்தில் பி.எஃப். சார்ந்த சகோதரர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் எனக்கு தந்த அதே பதில் இப்போழுது சகோ.முத்து முஹ்மத் அவர்களுக்கு நான் அளிக்க உள்ள பதிலை அன்றே அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அளித்தேன் அவர்களிடமிருந்து இந்த விஷயத்தில் வெளிபட்டது மொளனம் என்ற பதிலாக தான் இருந்தது... இவரிடம் இருந்து என்ன வருகின்றது என்று பார்ப்போம்...

சகோ.முத்து முஹ்மத் அவர்களின் வாதம் இதோ உங்கள் பார்வைக்கு……

இன்று உலகில் மனிதன் சோறு, தண்ணீர் கூட இல்லாமல் வாழ்ந்து விடுவான் போல் தெரிகிறது, ஆனால் செல்போன் இல்லாமல் வாழமுடியாது என்ற நிலை வந்துவிடும் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு செல்போனின் பயன்பாடு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு செல்போனிலும் இசை இல்லாமல் இல்லை! அந்த இசைகளைத்தான் நாம் நமது ரிங்டோனாக வைத்திருக்கின்றோம்.

ஒரு வாதத்திற்காக நீங்கள் "இல்லை! இல்லை! நாங்கள் லேடஸ்ட் செல்போன்களைத்தான் பயன்படுத்துகிறோம், அதிலே குர்ஆன் வசனங்களைத்தான் ரிங்டோனாக வைத்திருக்கின்றோம் என்று நீங்கள் வாதிடுவீர்க்ளானால், எல்லோர்னாலும் உங்களைப்போன்று கேமரா வசதி கொண்ட செல்போன்களை வாங்க முடியாது! அவர்களுடைய சக்திக்கு ஏற்றவாறுதான் வாங்க முடியும்.

சாதாரண மொபைலில் கூட இசைத்தான் உள்ளது. உதாரணத்திற்கு நோக்கியா 3300 மொபைலை எடுத்துக்கொள்வோம், அதிலே சாதாரணமான டோனாக இருப்பது NOKIA RINGTONE. உங்களின் வாதப்படி இந்த சாதாரண டோன் கூட ஹராம் தான். இந்த டோனோ அல்லது இதைப்போன்ற டோனோ செல்போன் பயன்படுத்தும் அனைவர்களிடமும் உண்டு ( நாங்கள் தான் உண்மையான தவ்ஹீத் அடிப்படையில் இருக்கின்றோம் என்று வாய் கிழிய பேசும் அனைவர் உட்பட)

இவரின் இந்த வாதம் அடிப்படையில் தவறானதாகும் நான் முன்பே குறிப்பிட்டது போல இசையை இரண்டாக பிரிக்கலாம்.... செல்போனில் உள்ள ரிங்டோன்களை கால் வருவதை உணர்த்துவதற்க்காக நாம் பயன்படுத்தினால் அது இஸ்லாத்தில் அனுமதிக்கபட்ட ஒன்று.... ஆனால் அதையே இரசனையோடு நாமும் பிறரும் இரசிக்க வேண்டும் என்று நாம் வைத்தால் அது இஸ்லாம் கூறும் நெறிமுறைகளுக்கு முரனானதும் தடுக்கப்பட்டதும் ஆகும்

அது சாதாரன போன் ஆக இருந்தாலும் சரி நீங்கள் கூறும் லேட்டஸ்ட் போன் ஆக இருந்தாலும் சரி....

அடுத்ததாக செல்போனை நீங்கள் இசை கருவி என்று கூறி இருந்தீர்கள் அதுவும் அடிபடையில் தவறான வாதம் யாரும் செல்போன் வாங்கும் போதும் அதனை தயரிக்கும் போதும் இதனை நாம் இசையை உருவாக்க தயாரிக்கலாம் என்ற எண்ணத்தில் இல்லை மாறாக செல்போன் என்பது பேசுவதற்காகவும் எஸ்.எம்.எஸ் போன்றா தொலை தொடர்பு உபயோகத்திற்க்காகவும் தான் உள்ளதே தவிற அது இசைக்காக இல்லை எம்.பி. 3 பிளேயர் வயிஸ் ரேக்கார்டர் போன்ற என்னற்ற வசதிகள் உடயனவாக வேண்டுமானால் செல்போன் இருக்கலாம் அதன் முக்கிய நோக்கம் தொலை தொடர்பிற்காகவே தவிர வேறில்லை.... அதனை இசையை இரசிக்க வேண்டும் அதனை ஏற்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் யார் வாங்கினாலும் அதுவும் தடுக்க கூடிய ஒரு விஷயமாகும் ( வேண்டும் என்றால் உங்கள் சகாக்கள் வங்குவார்கள் உங்கள் இயக்க பாடலில் உள்ள இசையை கேட்க்க)

உங்கள் வாததிற்க்கு வந்தால் நாம் உபயொகிக்கும் அனைத்தை கொண்டும் இசையை ஏற்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியாது போல.... உதாரனத்திற்க்கு நாம் சாப்பிடும் தட்டில் இருந்து படிக்கும் புத்தகம், உறங்கும் கட்டில் , என்று அனைத்தை கொண்டும் இசையை எற்படுத்தலாம் என்பதை இவர் புரிந்து கொள்ள வேண்டும்...

லேட்டஸ்டாக நான் கேள்வி பட்டது இப்போது இசை கருவு எதுவும் இல்லாமல் வாயை கொண்டே எல்லா விதமான இசையையும் உருவாக்கி இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்களாம் இதானால் முஹ்மத் நபி (ஸல்) அவர்கள் கூறிய இசை கருவி நமது வாய் என்று பொருள் தர முடியாது... இசை கருவி என்பது இசை கருவிகளை தான் குறிக்கும் என்பதை இந்த சகோதரர் உணர்ந்து கொள்ள வேண்டும்..

உண்மை தான் டி.என்.டி.ஜே வின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உங்களுக்கு மட்டும் இல்லை உங்களை போல இருக்கும் எந்த அமைப்புகளுக்கும் நாங்கள் அனுப்புவது இல்லை ஏன் என்றால் ??? டி.என்.டி.ஜே ஏதாவது மாநாடோ நிகழ்ச்சிகளோ அறிவித்துவிட்டால் போதும் அதனை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று பம்பரமாக அனைத்து அமைப்பினரும் சேர்ந்து செயல்படுவதை உங்களால் மறுக்க முடியாது.... அதில் முக்கிய இடத்தில் உங்கல் அமைபினரும் வருவார்கள்

அடுத்ததாக இனையதளத்தில் நான் சாட் செய்த நபர் பற்றி அவர் கூறும் போது....

ஆனால் இணையதளத்தின் மூலம் யாரோ அழைத்தார்களாம், அதற்கு இவர் ஏதோ கேள்வி கேட்டாராம்! அதற்கு அந்த நபர் முட்டாள்த்தனமாக பதில் அளித்ததாக கூறுகிறார்.

இணையதளத்தில் யார் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், என்ன பதில் வேண்டுமானாலுக் கூறலாம். உண்மையிலேயே அந்த மனதர் கேட்ட கேள்வி முட்டாள்த்தனமாகத்தான் உள்ளது. ஆனால் அதை P.F.I - யின் நிர்வாகி தான் கேட்டார் என்று உறுதியாக சொல்லமுடியாது. அப்படியே அதை கேட்டது P.F.I - யின் சகோதரர் தான் என்றால் அது அவரின் அறியாமையைத்தான் குறிக்கிறது. ஒருவர் தவறாக பதில் அளித்துவிட்டார் என்றால் அதற்கு பதிலே இல்லை என்ற அர்த்தம் கிடையாது என்பது உங்களுக்கு கண்டிப்பாக தெரியும் என்று நம்புகிறேன்.

முதலில் இனையதளத்தில் அந்த நபர் அழைப்பு விடுத்தாரா இல்லையா என்பதை அல்லாஹ் அறிவான் ?? மறுமையில் நாம் அனைவரும் எழுப்பப்ட்டு விசாரிக்கபடுவோம் இவர் நானாக தான் அந்த சாட் நாடகதை நடத்தியதாக கூறினார் என்றால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சந்திக்கலாம்..


நான் சாட் செய்தவரை பி.எஃப். யின் நிர்வாகி என்று கூறவே இல்லை ஆனால் பி.எஃப். யில் இருப்பவர்களிடமும் அதன் நிர்வாகிகளிடமும் தான் பதில் லை கேட்டேன் என்பதை சகோதரர் புரிந்து கொள்ள வேண்டும்...


பதிலே இல்லை என்றும் நான் கூறவில்லை பதில் எங்கே என்று தான் கேட்டுள்ளேன். ஏன் பதில் இல்லை ?? யார் சொன்னார்கள் பதில் இல்லை என்று ??? ஏன் இப்போ நீங்கள் தரவில்லையா பதிலை தவறு தவறாக. (தவறுதலாக கூறுவதும் பதில் தான் )


இறுதியாக ஒரு விஷயத்தை தெளிவு படுத்த நான் கடமைபட்டுள்ளேன்


சரி இவரின் கருத்துக்கே நாம் வருவோம் என்று வைத்துக்கொள்வோம் இந்த இசை விஷயத்தில். இவர் கூறுவது போல இசையை இஸ்லாம் அனுமதித்ததாக வைத்துக்கொள்வோம்.. இவர்களின் இயக்க பாடலுக்கு எதற்க்காக இசை முதலில் அவர் அதை சிந்திக்க கடமைபட்டுள்ளார். பாடலுக்கு இசையை கலந்து எதனை இந்த இயக்கத்தில் உள்ள உலமாக்கள் மக்களுக்கு உணர்த்த போகின்றனர்.


மாறாக இந்த இசையின் மூலமாக சைத்தானின் உடன்பிறப்பிகளாக மாறியுள்ளனர் என்பதை யவராலும் மறுக்க முடியாது.. எப்படி என்று சிந்திக்கிறீர்களா... இந்த இசை கலந்த பாடலை உறுவாக்க இசை கூத்தாடிகளுக்கு கொடுத்த கூலியின் மூலம் மக்களின் பணத்தை வீண் விரையம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இதை எல்லாம் பார்க்கும் போது சகோ. முத்து முஹ்மத் அவரது பதிலில் குறிப்பிட்டு இருந்து நபி மொழி தான் என் மனதில் தோன்றுகிறது.


"இசைக்கருவிகளை பயன் படுத்தாதீர்கள், அது இறைவனின் சிந்தனையில் இருந்து உங்களை திசைத்த்ருப்பும்"


சகோதரர் முத்து முஹ்ம்த் அவர்களே "இதை எங்களின் உலமாக்கலின் அணியான "ஆல் இந்தியா இமாம் கவுன்ஸில்" மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறது. " என்று கூறினீர்களே இதை தான....


அடுத்தது உங்களின் மூன்றாவது மெயிலுக்கு வருவோம்…..


முதலாவதாக ஒரு சில பாராவில் அவர் அவரின் கொள்கையின் படி இயக்கத்தை எத்தி வைத்துள்ளார் அது நமக்கு தேவை இல்லை.... இப்போது அவரின் வாதங்களை இஸ்லாமிய மற்றும் சமுதாய பார்வையை கொண்டு ஆராய்வோம்...

அவர் அனுப்பிய மூன்றாவது மெயில் இதோ உங்கள் பார்வைக்கு....

அன்பு சகோதரர் அஸ்லம் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய ஸலாத்தினை உறித்தாக்குகிறேன்,

அஸ்ஸலாமு அலைக்கும்!

மூன்றாவது குற்றச்சாடிற்கு பதில் சொல்வதற்கு முன்னால் ஒரு சில விஷயங்களை உங்களுக்கு கூற விரும்புகிறேன். நீங்கள் அந்த இணையதளத்தில் இருந்து காபி பண்ணி பேஸ்ட் பண்ணுணீர்களே அதை ஒரு முறை நீங்கள் படித்து பார்த்தீர்களா? அதை எனக்கு பார்வேர்டு செய்வதற்கு முன்னால் அதை நீங்கள் படித்து பார்த்திருக்க வேண்டும். அப்படி படித்திருப்பீர்களாயின் இவ்வாறு பொறுத்தமில்லாத கேள்விகளை கேட்டிருக்கவே மாட்டீர்கள். மார்க்கத்தில் குறைவான ஞானம் உள்ளவர் கூட இப்படி ஒரு கேள்வியை கேட்க மாட்டார்கள். நாங்கள் மட்டும் தான் சரியான பாதையில் செல்கிறோம், என்ற மமதை தோன்றிவிட்டது என்றால் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் போய்விடும். என்னை PFI-லிருந்து வெளியேரிவிடுமாறு உபதேசம் செய்தீர்கள்! நான் அவ்வாறு கூறமாட்டேன், அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் என்னை சரியான் இயக்கத்தில் தான் இணைத்துள்ளான். சுய நலம் இல்லாமலும், தன்னால் செய்ய இயலாவிட்டாலும் மார்க்கத்திற்காக அதிகம் பிரயோஜனம் தரும் அதிகமான பணிகளை செய்து வருகிறோம். அல்லாஹ்வின் உதவி கொண்டு நிச்சயமாக நாங்கள் அதை சாதிப்போம்

இன்ஷா அல்லாஹ்.

பாப்புலர் ஃப்ரண்ட் இன்னொரு அமைப்பிலிருந்து பிரிந்து ஒரு இரவில் தோன்றிய இயக்கம் அல்ல, மாறாக பல சகோதரர்களின் உயிரையும், பொருளையும், நேரத்தையும் செலவழித்து கட்டமைக்கப்பட்ட ஒரு திடமான கோட்டையாகும். பாப்புலர் ஃப்ரண்ட் என்பது ஒரு வார்த்தை அல்ல, அது ஒரு அனுபவம்.

எங்களை நீங்கள் ஏற்றுக்கொல்லாவிட்டாலும் பரவாயில்லை, உங்களுக்காகவும் உழைப்போம். கலிமா சொன்ன ஒவ்வொரு சகோதரர்கள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்களுக்காக எங்கள் கால்கள் ஓடிக்கொண்டே இருக்கும் இன்ஷா அல்லாஹ்!

எங்களுக்கு எதிராக வரும் எந்த ஒரு விமர்சனத்திற்கும் நாங்கள் பகிரங்கமாக பதில் அளித்ததில்லை. பல காலமாக விடியல் வெள்ளி என்ற பத்திரிக்கையை நடத்தி வருகிறோம், அதில் என்றுமே நாங்கள் விமர்சனத்திற்கு பதில் அளித்தது இல்லை, பிறரை விமர்சித்ததும் இல்லை, அது எங்களுக்கு வேலையும் இல்லை. ஆனால் ஏன் இபோது பதில் அளிக்கிறேன் என்றால்?, அல்லாஹ் திருமறையிலும், நபி(ஸல்) அவர்களும் மார்க்க பணிக்காக உரிமையுடன் ஜகாத்தை கேளுங்கள் என்று சொல்ல, அதை தராவிட்டாலும் பரவாயில்லை, பிறரையும் தடுக்கும் செயலை என்னவென்று சொல்வது?

சரி! கேள்விக்கு வருவோம்.

குற்றச்சாட்டு -3

இவர்கள் இஸ்லாத்தின் அடைப்படை கொள்கையான தவ்ஹீதை மறந்து சல்யூட் அடித்த கண்றாவி கதையை எங்கே சொல்வது.....

தவ்ஹீதை மறந்து தனி மனித வழிப்பாட்டிற்க்கு வழிவகுக்கும் வகையில் தலைவர்களுக்கு சல்யூட் அடிக்கும் கன்றாவி காட்சிகள்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அணிவகுப்பில் எடுத்த புகைப்படங்கள்
இது தான் இஸ்லாமா ? இது தான் கொள்கை பிடிப்பா ?

இன்னும் பல இடங்களில் இவர்கள் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பை எடுத்துக் கொள்வோம் அதில் அல்லாஹ்விற்க்கு மட்டும் அடிபணிய வேண்டிய கைகள் கொடிகளுக்கும் தலைவர்களுக்கும் அடிபனிந்த அசிங்கத்தையும் பார்த்தோம் அந்த அசிங்கத்தை இவர்களின் இனையதளத்தில் போட்டதையும் பார்த்தோம்.

பதில்:

அசிங்கத்தையும், கன்றாவியையும் பார்த்தார்களாம்! அது அசிங்கமா? கன்றாவியா? என்பதை பதிலுக்குப்பின் முடிவு செய்துகொள்ளுங்கள்!

இன்று முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்காக போராடாத ஜமாத்தே இல்லை எனும் அளவிற்கு எல்லா அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது. அரசு துறைகளில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லோரும் போராடுகிறார்கள். உதாரணத்திற்கு நாம் கேட்ட இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம், நம்மில் பலருக்கு, அரசாங்கத்துறைகளில் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம் நல்ல தவ்ஹீத் சிந்தனை உடைய ஒரு சகோதரன் காவல் துறைக்கு வேலைக்குச் செல்கிறான் என்றால் அவன் தன்னுடைய மேல் அதிகாரிக்கோ, அல்லது ஆகஸ்ட் 15ம் தேதியில் சுதந்திர தின விழாவில் சல்யூட் அடித்துதான ஆக வேண்டும். அப்படி அவன் செய்யாவிட்டால், அவன் தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்படுவான். இது காவல்துறையில் மட்டும் அல்லஅரசாங்கத்தின் எந்த உயர் பதவிக்குச்சென்றாலும் இதை செய்துதான் ஆகவேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ராணுவத்திலும், இதே நிலைதான். இந்தியாவில் இந்த வழிமுறையை தற்போது வரைக்கும் யாராலும் மாற்ற முடியாது. அல்லாஹ்வை இணைவத்துத்தான் இந்த மாதிரியான அரசாங்க பணிகளில் ஈடுபட முடியும் என்று சொன்னால் அந்த மாதிரியான வேலையே நமக்குத் தேவை இல்லை என்று தூக்கி எறிந்து விட்டு வேறு வேலைக்குத்தான் செல்ல வேண்டும் (குறிப்பு சல்யூட் அடிப்பது ஷிர்க் என்று சொல்வது நீங்கள் தான்). இதே போன்ற துறைகளில் தான் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீட்டிற்க்காக போராடுகிறீர்கள். அப்படி என்றால் எதற்க்காக"ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு" என்ற பெயரில் கோடிக்கணக்கான நம் சமுதாய மக்களின் பணத்தை தண்ணீராய் செலவழித்தது ஏன்? நீங்கள் மாநாடு நடத்தியது இடஒதுக்கீட்டிற்க்காகத்தானா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நம் சமுதாயத்தை முட்டாளாக்க பார்க்க நினைக்கிறீர்கள் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகதெரிகிறது.

வ்ஹீத் வாதிகள் நாங்கள் தான் என்று மார்த்தட்டிக் கொள்கிறார்களே, அவர்களுக்கு தவ்ஹீத் என்றால் என என்பது தெரியவில்லை போலும், ஏனென்றால் அவர்கள் கேட்கும் கேள்விகளைக்கண்டு சிரிப்பதா? அல்லது அவர்களுடைய அறியாமையைக் கண்டு வருத்தப்படுவதா? என்று நமக்குத் தெரியவில்லை.

சல்யூட் அடிப்பது ஷிர்கா?

இணைவைப்பது மிகப்பெரும் பாவமாகும், இந்தப்பாவச்செயலுக்கு இறைவனிடத்தில் மன்னிப்பே கிடையாது. அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டிய ஒரு காரியத்தை பிறருக்கும் செய்தால் அது ஷிர்க் என்கிறோம். வணக்க வழிபாடுகளில்தான் என்றில்லை, அவனை புகழ்வதில்கூட இனணவைக்கக்கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே! சற்று சிந்தித்து பாருங்கள்!

சல்யூட் அடிப்பது ஷிர்க்கா? குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் எங்கையாவது நபி(ஸல்) அவர்களோ அல்லது அவர்களுடைய அருமை ஸஹாபாக்களோ சல்யூட் அடித்தோ, அல்லது அதைப்போன்று கையை உயர்த்தி அல்லாஹ்வை வணங்கியதாக இருக்கிறதா? சகோதரர்களே! என்ன பேசுகிறீர்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா? ஒருவர் மீது அபரிவிதமான நம்பிக்கை வைத்துவிட்டு அவர் சொல்வதெல்லாம் சரி என்று நம்பி உங்களுடைய சிந்திக்கும் ஆற்றலை ஏன் மழுங்கடித்து விட்டீர்கள்?

நீங்கள் எத்தனையோ அணிவகுப்பு நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள், அல்லது அவற்றைப்பற்றி செய்தித்தாள்களிலாவது பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அதில் வீரர்கள் சல்யுட் அடிக்க சீஃப் கெஸ்ட் அவர்களைப் பார்த்து சல்யூட் அடித்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் என்றுதான் வரும். அணிவகுப்பிலே சல்யூட் அடிப்பது மரியாதைத்தானே தவிற வழிபாடு அல்ல! அதை வழிபாடு என்று சொல்பவர்களைப் பார்த்து மூடர்கள் என்று சொல்வதை விட வேற என்னவென்று சொல்வது?

அஸ்லம் அவர்களே! உங்களுடைய இரண்டாவது மெயிலுக்கு இன்ஷா அல்லாஹ பதிலளிக்கிறேன்!


இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

சை. முத்து அகமது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

புதிய பாதை! புதிய இந்தியா

அறியாமை வாததிற்க்கான பதில்…….

சகோதரர் முத்து அஹ்மத் அவரிகளின் பதிலை படித்த அனைவரும் அவர் கூறிய படி தலைவர்களுக்கு சல்யூட் அடிப்பது அசிங்கமா ? கன்றாவியா ?? என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைகின்றேன். புரிந்து கொள்ளாமல் இருக்கும் சகோதரர் முத்து அஹ்மத் அவர்களுக்காக இஸ்லாத்தை எடுத்து வைக்க நான் கடமைப்பட்டுள்ளேன் இன்ஷா அல்லாஹ்...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி இறைவனின் மிக பெறும் கிருபையால் மக்கள் மத்தியிலும் மாநில மத்திய ஆட்சியாளர்கள் மத்தியிலும் அல்லாஹ் ஏற்படுத்திய மிக பெரியா மாற்றத்தினால் கிடைக்க உள்ள இடஒதுக்கீட்டை பற்றியும் அதனால் நம் சமுதாயத்தில் இளைஞர்கள் அமர உள்ள பெரும் பதிவிகள் பற்றியும் அவர் கூறியுள்ளார் இதை மேலோட்டமாக படிக்கும் யாவரும் ஒரு வேலை தவறாக தான் இருக்குமோ என்று சிந்திக்க கூடும்.... ஆனால் மதசார்பற்ற இந்திய ஜநனாயக சட்டத்தின் அடிப்படையில் இஸ்லாமிய கொள்கையான உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்காமல் இருப்பதும் கொடிக்கு சல்யூட் அடிக்காமல் இருப்பதும் ஒரு ஒரு முஸ்லீம்கான உரிமை என்பதை இந்த சகோதரர் புரிந்து கொள்ள வேண்டும்..


உடனே நீங்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம் இவ்வளவு நாள் ஏன் அதை தடுக்கவில்லை என்று அதற்க்கும் ஒரு அர்த்தமுள்ள காரணம் உள்ளது. இதுவரை அரசு வேலைகளில் சேர்ந்த அனைத்து முஸ்லீம்களும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையான தவ்ஹீதை மறந்து அரசாங்கம் சொல்கின்றது என்பதற்க்காகவும் உங்களை போல சிந்தித்து எங்கே சல்யூட் அடிக்காமல் இருந்தால் நம்மை பிரிவினைவாதியாக சித்தரிப்பார்களோ என்று பயந்து நடுங்கிய காரணம் தான்...

உதாரணத்திற்க்கு எடுத்துக் கொள்வோம் கொஞ்ச நாளுக்கு முன்பு இந்திய சுதந்திரத்திற்க்கு எந்த ஒரு சமந்தமும் இல்லாமல் இருக்கும் "வந்தே மாதரம்" என்ற பாடலை அனைத்து குடிமகனும் பாட வேண்டும் என்ற சர்ச்சை கிளம்பிய போது நாம் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக அப்படி ஒரு சமுதாயத்தை நிர்பந்திபது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தவறு என்பதை இந்திய அரசாங்கத்திற்க்கும் இந்து கிருத்துவ மக்களுக்கும் உணர வைத்தோம் இது தான் நீங்கள் சொல்லும் இந்து பிரச்சனைக்கும் தீர்வு ஆகும் அதை உணரமலும் இந்திய சட்டம் தெரியாமலும் "புதிய பாதை ! புதிய இந்தியா ! " என்ற கோஷத்துடன் அனைவரும் சல்யூட் அடிங்க இது தான் ஜநனாயகம் என்று இஸ்லாத்திற்க்கு மாற்றமான புதிய பாதையை நோக்கு செல்வது தான் இந்த சகோதரரின் கொள்கை போல..

சல்யூட் அடிப்பது ஷிர்க்கா ?? குர் ஆனிலோ ஹதீஸிலோ சல்யூட் அடிப்பது ஷிர்க் என்று இருக்கிறதா ? என்று கேள்வியை எழுப்பிவிட்டு... நம்மை மூடர் என்று சொல்லும் இந்த மூடரின் இஸ்லாம் அறியாத விளக்கத்தை பாருங்கள்....


நீங்கள் எத்தனையோ அணிவகுப்பு நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள், அல்லது அவற்றைப்பற்றி செய்தித்தாள்களிலாவது பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அதில் வீரர்கள் சல்யுட் அடிக்க சீஃப் கெஸ்ட் அவர்களைப் பார்த்து சல்யூட் அடித்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் என்றுதான் வரும். அணிவகுப்பிலே சல்யூட் அடிப்பது மரியாதைத்தானே தவிற வழிபாடு அல்ல! அதை வழிபாடு என்று சொல்பவர்களைப் பார்த்து மூடர்கள் என்று சொல்வதை விட வேற என்னவென்று சொல்வது?

இதை பார்த்து சிரிப்பதை தவிற வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை.... இவரின் விளக்கத்தில் இருந்து இவர் மக்களுக்கு கூற வருவது என்ன என்றால் சல்யூட் அடிப்பது ஷிர்க் கிடையாது என்றும் அது வெறும் மரியாதைக்கு தான் என்ற கருத்தை தான்...

சரி இவரின் வாதத்திற்க்கே வருவோம் இஸ்லாம் மரியாதைக்காக சல்யூட் அடிக்க கூறியுள்ளதா இதற்க்கு முஹ்மத் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் என்ன ? என்பதை இவர் கூறிய இந்த "ஆல் இந்தியா இமாம் கவுன்சில்" எச்சரிக்கையோடு கவனிக்கவில்லையா ???

ஒரு சபையில் நபி(ஸல்) அவர்கள் வரும் போது மரியாதைக்காக எழுந்து நிற்க்க வேண்டாம் என்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளை எம்பதை இவர்களின் மார்க்க அறிஞர்கள் சொல்லி தரவில்லை போல ??? இப்போ புரிஞ்சி இருக்கும் யார் "ஒருவர் மீது அபரிவிதமான நம்பிக்கை வைத்துவிட்டு அவர் சொல்வதெல்லாம் சரி என்று நம்பி சிந்திக்கும் ஆற்றலை இழந்து உள்ளார்கள் “ என்று...

ஒரு வேளை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் குர்ஆன் ஹதீஸ்க்கு மாற்றமாக நாளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் உங்களை போல தங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மார்க்கத்தை வலைத்தால் அந்த மார்க்க அறிஞரின் அறியாமை கூற்றை தூக்கி எறிவோமே தவிற உங்களை போல "ஆல் இந்தியா இமாம் கவுன்சில்" சொன்னால் சரியாக தான் இருக்கும் என்று குர்ஆன் ஹதீஸை ஆராயாமல் தலையில் தூக்கு வைத்துக்கொண்டு ஆட மாட்டோம் இன்ஷா அல்லாஹ்...

இப்போ சிந்தித்து பாருங்கள் சகோதர சகோதரிகளே ஏன் நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவதை தடுத்தார்கள் என்று அந்த செயல் வரம்பு மீறி இஸ்லாத்தை மறந்து தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி ஷிர்க் என்று சொல்லபட கூடிய பெரும் பாவத்திற்க்கு கொண்டு சென்று விடும் என்பதற்காகதானே தவிற வேறு காரணம் இருக்க முடியாது.... இவரும் மரியாதை என்ற பெயரில் முஹ்மத் நபி(ஸல்) அவர்கள் தடுத்த அந்த வழிகேட்டிற்க்கு தான் சென்று கொண்டு உள்ளார் என்பதை இந்த ஹதீஸ் தெரிந்த எந்த ஒரு முஸ்லீமும் மறுக்க முடியாது...

அப்படி இந்த ஹதீஸை மறுத்தால் மறுப்பவர்களை விட மூடர்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்…

இறுதியாக "அவதூறுக்கு பதில்" என்ற சப்ஜேக்ட்டுடன் அனுப்பிய மெயிலில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு தவறான கருத்தை உங்களுக்கு முன்வைக்க ஆசைபடுகின்றேன்.... நீங்கள் முன்வைத்த கருத்து இதோ உங்கள் பார்வைக்கு....

எனக்கு தமிழ் டைப்பிங் தெரியாததால், தமிழ் கோபி என்ற சைட்டின் உதவி கொண்டு தட்டுதடுமாறி டைப்பிங் செய்து அனுப்புகிறேன். இதில் எனக்கு நீங்கள் ஒரு சிரமத்தைத்தான் கொடுத்துள்ளீர்கள். ஆனாலும் பராவாயில்லை கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் இன்ஷா அல்லாஹ். பதில்கள் அனைத்தும் கொஞ்ஞம் தாமதமாகவும் வரலாம், ஆதலால் தாங்கள் அதை பொறுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு இயக்கத்தின் நிர்வாகி என்று இயக்கத்தை எடுத்து கூற வந்த உங்கள் மீது கடமையான ஒரு விஷயம் தான் உங்கள் இயக்கத்தை பற்றி வரும் விமர்சனங்களுக்கு விடை அளிப்பது இதை சிரமாமாக நீங்கள் கருதினால் உங்கள் (தவறான) கொள்கையை எடுத்து கூறுவதில் கூட சிரமம் என்று கருதுகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

நீங்கள் சிரமம் என்று நினைத்து எழுதிய 5 அல்லது 6 பக்க பதிளுக்கு தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் ஒரு சகோதரருக்கு எடுத்துறைக்கும் உயர்ந்த நோக்கத்தில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கும் போதும் உங்களுக்கு இஸ்லாத்தை எடுத்துறைத்து மறுமையில் அல்லாஹ்விடம் கூலி பெற இந்த 18 பக்க பதிலை உங்களுக்காகவும் உங்களை போல கருத்தில் உள்ள உங்கள் சகோதரருக்காகவும் எழுதியுள்ளேன் இன்ஷா அல்லாஹ் நீங்களும் நானும் குர்ஆன் மற்றும் ஹதீஸை மட்டும் பின்பற்றி எந்த ஒரு தனி மனித வழிபாட்டிற்க்கும் வழி வகுக்காமல் மறுமையில் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன்.


அழைப்பு மற்றும் சமுதாய பணியில் என்றும் அன்புடன்

பரங்கிப்பேட்டை T.H.கலீல்லூர் ரஹ்மான்.,B.Sc(CS).,MBA(L&S)

டி.என்.டி.ஜே மாணவர் அணி

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP