திங்கள், 4 மே, 2009



ஏக இறைவனின் திருப்பெயரால்....
மார்க்கம் நலன் நாடுகிறது, யாருக்காக? என நாங்கள் வினவினோம், அப்போது நபியவர்கள், அல்லாஹ்விற்காகவும், அவனது வேதத்திற்காகவும், அவனது தூதருக்காகவும், முஸ்லிம் தலைவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் என்று நபி(ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள்.
அறிவிப்பாளர்: தமீமுத்தாரீ நூல்: முஸ்லிம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
தேர்தல் நெருங்கி விட்டது ஒவ்வொரு ஜனநாயக நாட்டின் குடிமகனுக்கும் வாக்களித்து ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு.

அதனடிப்படையில் இந்திய முஸ்லீம்களாகிய நமக்கும் இந்தியப் பெருநாட்டின் ஆட்சியாளர்களை வாக்களித்துத் தேர்வு செய்யும் உரிமை உண்டு அதனால் நாம் ஒவ்வொருவரும் பன்முகத் தன்மைக் கொண்ட இந்தியப் பெருநாட்டை ஓரளவுக்காவது நடுநிலைத் தன்மையுடன் ஆளக் கூடிய ஆட்சியாளரை இன்ஷா அல்லாஹ் வாக்களித்து அமரச் செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செய்லபடுவோம்.

நாமே நின்று ஏன் வெற்றி பெறக் கூடாது ?

நாமே வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாவதை மார்க்கம் தடை செய்ய வில்லை.

ஆனால் சிறுபான்மை சமுதாயமாகிய நம்மால் தனித்து நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆக முடியாதவாறு நமக்கு ஏற்கனவே ஒதுக்கப் பட்டிருந்த ரிசர்வ் தொகுதி முறை பறிக்கப்பட்டு விட்டது அதனால் நம்மால் தனித்து நி;ன்று வெற்றிப்பெற்று சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக முடியாது.

இந்தியாவின் பெரும்பாண்மை சமுதாயமாகிய ஹிந்து மக்களே மேற்காணும் பொறுப்புகளில் வர வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டி சிறுபான்மை முஸ்லீம்களுக்கான ரிசர்வ் தொகுதி முறையை ரத்து செய்து விட்டனர்.

அதனால் மேற்காணும் தனித்து நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராகும் திட்டத்தை மீண்டும் ரிசர்வ் தொதியைப்போராடிப் பெறும் வரை கை விட்டு விட வேண்டும். அதுவரை நமது வாக்குகளை சிதற விடக்கூடாது.

பெரும்பாண்மை சமுதாயமாகிய ஹிந்து மக்களே மேற்காணும் பொறுப்புகளில் வரமுடியும் என்ற நிலை இருப்பதால் அவர்களில் எந்த ஆட்சியாளர் சிறுபான்மை சமுதாயமாகிய நமக்கு வாழ்வாதார வசதிகளை ஓரளவாவது செய்து கொடுக்கின்றார்களோ, அவர்களுக்கு நம்முடைய வாக்குகளை அளித்து ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும், எந்த ஆட்சியாளர் நமது வாக்குகளைப பெற்றுக் கொண்டு நமக்கு வாழ்வாதார வசதிகளை செய்து தர மறுக்கின்றனரோ அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர விடாத அளவுக்கு நம்முடைய வாக்குகளை எதிரணிக்குப் செலுத்தி அவர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும்.

இதல்லாமல் வேறு எந்த வழியை தேர்வு செய்தாலும் நம்முடைய வாக்குகள் சிதறி நமக்குப் பெரும் பிண்ணடைவை ஏற்படுத்தும்.

இன உணர்வைத் தூண்டி ஆதாயம் அடைய நிணைக்கும் வேட்பாளர்கள்.

ரிசர்வ் தொகுதி போனால் என்ன வெற்றிப்பெறும் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர்கள் மூலமாக சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் n;சன்று சமுதாயத்திற்காக குரல் எழுப்பலாமே என்ற இஉ உணர்வைத் தூண்டி சில வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள்.

சமுதாய உணர்வைத் தூண்டிவிட்டு உள்ளே செல்ல நிணைப்பவர்கள் தங்களுக்கிரும் பதவி ஆசையினால் அவ்வாறு ஆசைவார்ததைக் காட்டுவார்கள் ஆனால் அது சாத்தியப் படாது என்பது அவர்களுக்கேதெரியும்.

கூட்டணிக் கட்சிக் காரர்கள் ஒரு சீட்டை மட்டும் காட்டி மொத்த சமுதாய ஓட்டு;க்களை அறுவடை செய்வார்கள் அதனால் அவர் ஒருவர் மட்டும் உறுப்பினராகி பயன் பெறுவார் அதனால் மொத்த சமுதாயத்திற்கு ' 0 ' தான் பலனாக அமையும் காரணம் இவர் தன்னுடைய விருப்பத்திற்கு கூட்டணிக் கட்சி தலைவரிடம் அனுமதிப் பெறாமல் எதையும் பேச முடியாது, அவ்வாறுப் பேசினாலும் ஒன்றிரெண்டுப் பேர் என்பதால் முதல்வர் மற்றும் அவை உறுப்பினர்களுடைய கவனம் அதனால் ஈர்க்கப்படாது.

இதையும் மீறி ஒரு முஸ்லீம் நிற்கின்றார் என்று இன உணர்வின் அடிப்படையில் வாக்களித்தால் அந்த வாக்குகள் சிதறும் அதன் பிறகு நம்முடைய சமுதாயத்திற்கு நன்மை செய்த ஆட்சியாளரை நமது ஓட்டுகளைக் கொண்டு வெற்றி பெறச் செய்ய முடியாத நிலை எற்படும்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் அவர்களது தொகுதியில் எந்த சமுதாய மக்களிடத்திலிருந்து எத்தனை எத்தனை சதவிகிதம் ஓட்டுக்;கள் கிடைத்தது என்று துல்லியமாகத் தெரியும் அதனால் அவரிடமிருந்து மீண்டும் நமக்குத் தேவையான சலுகைகளை கேட்டுப் பெற முடியாத நிலை ஏற்படும் .

அதனால் இன உணர்வின் அடிப்படையில் வாக்களிக்க முயற்சிக்காதீர்கள்,

இரத்தத்தில் ஊறிப் போனக் கட்சி என்று நினைத்தும் வாக்களித்து வாக்குகளை சிதறச் செய்யாதீர்கள்,
சிறுபான்மை சமுதாயமாகிய நமக்கு எந்த ஆட்சியாளர் வாழ்வாதார வசதிகள் செய்து கொடுத்தார்களோ, நமது கோரிக்கையை ஓரளவாவது ஏற்று நடைமுறைப் படுத்தினாரோ அவருக்கு வாக்களித்து அவரை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

இன உணர்வைத்தூண்டி பதவி சுகம் அனுபவிக்கத் துடிக்கும் மமக.

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் மீது தனிப்பட்ட ஆசைக்கொண்டு புறப்பட்டிருக்கும் மமக சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் சென்று குரலெழுப்பினால் தான் முஸ்லீம் சமுதாயத்திற்கு சலுகைகளைப் பெறமுடியும் என்றுக் கூறுகின்றார்கள்.

தனித்து நின்று, தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, தனிப் பெரும்பான்மையுடன் சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் செல்ல முடியாது என்று அவர்களுக்கேத் தெரியும் அதற்காகத் தான் இந்த முறை அவர்கள் கூட்டணிக்காக ஏறி இறங்காத கட்சித் தலைவர்கள் வீடே இல்லை என்று சொல்லலாம் .

நாம் அவர்களிடம் கேட்போம்.

சமீபத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு தமிழக சட்டமன்றத்தில் எத்தனை முஸ்லீம் எம்.எல்.ஏக்கள் குரலெழுப்பிக் கிடைத்தது ? இதற்கு அவர்களிடத்தில் பதில் உண்டா ? எம்.பி பதவி ஆசையைத் தவிற இன உணர்வைத் தூண்டி ஓட்டு வேட்டையாட இருப்பதற்கு வேறு என்னக் காரணம் அவiர்களிடம் இருக்கு முடியும். ?

பதவி சுகத்திற்காக இரட்டை வேடமிடும் மமக.

முஸ்லீம் சமுதாயத்திற்கு குரலெழுப்புவதற்காக மட்டுமே மமக உருவாக்கப்பட்டதென்றால் அதிலாவது அவர்களிடத்தில் உறுதி இருக்கிறதா ? என்றால் அதுவும் இல்லை !

முஸ்லீம்களை சந்திக்கும் பொழுது நம்முடைய சமுதாயத்திற்காக, அவர்களுடைய கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக, அவர்களைப் பொருளாதாரத்தில் முன்N;னற்றி விடுவதற்காக, அவர்களுடைய வறுமையை துடைத்தெறிவதற்காக புறப்பட்டிருக்கி;ன்றோம் என்றுக் கூறுவார்கள்.

மற்ற சமுதாயத்து மக்களை சந்திக்கும் பொழுது அனைத்து சமுதாய மக்களுடைய கல்வி அறிறை, மேம்படுத்துவதற்காக, அவர்களைப் பொருளாதாரத்தில் முன்N;னற்றி விடுவதற்காக, அவர்களுடைய வறுமையை துடைத்தெறிவதற்காக புறப்பட்டிருக்கி;ன்றோம் என்றுக் கூறி பல்டி அடிப்பார்கள்.

முஸ்லீம்கள் மட்டும் ஓட்டுப் போடுவதினால் மட்டும் வெற்றிப் பெற முடியாது என்று அவர்கள் நன்றாக அறிந்திருந்தக் காரணத்தால் ஆரம்பத்திலேயே அவர்களுடைய அமைப்பிற்கு வித்தியாசமாக '' மனித நேய மக்கள் கட்சி '' என்று பொதுவானப் பெயரைச் சூட்டி கட்சிப் பெயரில் கூட முஸ்லீம் என்ற வார்த்தை வராமல் புத்திசாலித் தனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

நாம் இதை கற்பனையாக எழுத வில்லை கீழேப் படியுங்கள் மமக உருவாக்கப்பட்டது முஸ்லீம் சமுதாயத்தை மேம்படுத்தவா ? அல்லது மமக நிர்வாகிகளை மேம்படுத்தவா ? என்பதை விளங்கிக் கொள்வீர்கள்.

அனைத்து சமுதாய மக்களுக்கும் வட்டி இல்லாமல் கல்விஇ மருத்துவ கடன்வசதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வாக்குறுதி

ராமநாதபுரம் ஏப்.15-

தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து சமுதாய மக்களுக்கும் வட்டி இல்லாமல் கல்விஇ மருத்துவ கடன் வசதி செய்து தரப்படும் என்று ராமநாதபுரம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.

வேட்பாளர்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக சலீமுல்லாகான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் த.மு.மு.க.வின் மாவட்ட செயலாளராக உள்ளார். த.மு.மு.க. மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்விஇ சமூக சேவைஇ அம்புலன்சு வசதி மற்றும் ரத்ததான முகாம் நடத்தி வருகிறார். அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது -

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய இயக்கமாக விளங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய தேவையான அனைத்து திட்டங்களையும் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற பாடுபடுவேன். ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமான வைகை தண்ணீர் முறையாக வந்து சேர வைகை ஆற்று பகுதியில் சிமெண்டு கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

நீர்த்தேக்கம்
வெள்ளக் காலங்களில் வைகையில் இருந்து கடலுக்கு சென்று வீணாகும் தண்ணீரை தேக்கி வைக்க ராமநாதபுரம் பெரிய கண்மாய் மற்றும் சக்கரக்கோட்டை கண்மாய்களை ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்ற அரசிடம் வலியுறுத்துவேன். இதேபோல ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை சீரமைக்கவும்இ திருச்சுழி பகுதியில் கிருதுமால் நதி திட்டத்தை செயல்படுத்தவும் பாடுபடுவேன். ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலில் நிம்மதியாக மீன்பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். மாவட்டத்தில் தொழில் வளம் வேலைவாய்ப்பு பெரு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

கல்விகடன்
தொகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு கல்விக்கடன் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் மருத்துவ கடன் வட்டி இல்லாமல் வழங்க மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினத்தந்தி

இதைப் படித்தப் பிறகும் கூட யாராவது ஒருவர் மமக அமைப்பை முஸ்லீம் சமுதாயத்திற்கு மட்டும் குரல் கொடுக்கும் அமைப்பு என்று எண்ணி தங்களை பிறருடன் தேவை இல்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுத்தவோ, தங்களுடைய வலிமை வாய்ந்த வாக்குகளை அவர்களுக்காக இன உணர்வின் அடிப்படையில் இட்டு வீணடிக்கவோ விரும்ப மாட்டார்கள்.

மேற்காணும் அவர்களுடைய திட்டங்களை விட பலமடங்கு கவர்ச்சிசகரமான திட்டங்களுடன் மற்ற சமுதாயத்து வேட்பாளர்கள் அறிவிக்கின்றார்கள்.

இவர்கள் சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் சென்றால் ஒருக்காலும் முஸ்லீம்களுடைய கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக குரல் எழுப்பவே மாட்டார்கள் கூட்டணி கட்சிக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு தங்களது பதவியை தக்கவைத்துக் கொள்வார்கள் என்பதற்கு இன்னும் அவர்களுடைய கடந்த கால சமுதாய தொண்டினை (?) அலசி ஆராய வேண்டியதும் அவர்களை தேர்ந்தெடுக்க நினைக்கும் முஸ்லீமகளுக்கு அவசியமாகும்.

மூதறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் சமீபத்தில் மன்னடியில் பேசிய உரையை டவுன் லோடு செய்து கேளுங்கள்.

http://tntj.net/Video/Mannady_PJ_Speech_19-4-2009_whyDMK.asp

இதற்கு என்ன தான் தீர்வு ?

ரிசர்வ தொகுதியைப் போராடிப் பெறும் வரை ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் முஸ்லீம்கள் ஓரணியில் திரண்டு குறிப்பிட்ட ஒருக் கட்சியை ஆதரித்தால் அவர்களை வெற்றி பெறச் செய்ய முடியும், அதேப் போன்று குறிப்பிட்ட ஒருக் கட்சியை தோற்கடிக்க முடியும். முதலில் இந்த மனநிலைக்கு முஸ்லீம்களை மாற்றியாக வேண்டும் அதுவரை சட்டமன்ற, பாராளு மன்றக் கணவுகளைக் களைய வேண்டும், மீறி ஆசைப்படுகின்றவர்களை ஃபீல்டிலிருந்தே துடைத்தெறிய வேண்டும் இவர்களை ஓரம் கட்டினால் மட்டுமே மக்களை ஓரணியில் கொண்டுவர முடியம்.

மேற்காணும் இந்த மெகா திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முறையாக மார்க்கம் பேசும் இளைஞர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

அவர்களைக் கொண்டே சடைவடையாமல் தொடர்நது நடத்திய தொடர் முழக்கப் போராட்டங்களாலும், பிரமிக்கத் தக்கப் பேரணிகளாலும் சமீபத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீடும் கிடைக்கப்பெற்றது, எதிர் காலத்தில் அதை இரட்டிப்பாக்குவதற்காகவும் இன்றே அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அடித்தளம் இடப்பட்டு விட்டது அதையும் இன்ஷா அல்லாஹ் கடந்த காலத்தினைப் போன்றே தொய்வில்லாத போராட்டங்கள் மூலம் அடையாமல் ஓயமாட்டோம்.

அதனால் தமிழ்நாடு தவஹ்த் ஜமாஅத் வீதியில் இறங்கி போராட்டம் செய்து வைத்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த திமுகவிற்கு நம்முடைய வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் செலுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது ஒவ்வொரு முஸ்லீமுயைட கடமையாகும்.

மக்களை வற்புருத்தலாமா ? நீங்கள் அரசியல் பண்ணலாமா ?

திமுகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று மக்களை வற்புருத்தலாமா ?

அது அவர்வர்களுடைய விருப்பமில்லையா ?

இதை வலுக்கட்டாயமாகத் திணிக்கலாமா என்றெல்லாம் நினைக்கலாம்,

மார்க்கம் நலன் நாடுகிறது, யாருக்காக ? என நாங்கள் வினவினோம், அப்போது நபியவர்கள், அல்லாஹ்விற்காகவும், அவனது வேதத்திற்காகவும், அவனது தூதருக்காகவும், முஸ்லிம் தலைவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் என்று நபி(ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள். அறிவிப்பாளர்: தமீமுத்தாரீ நூல்: முஸ்லிம்

மேற்காணும் விதமாக சமுதாயப் பணிகள் செய்வதற்கு மார்க்கம் தூண்டுகிறது நன்மையை ஏவினால் மட்டும் அழைப்புப்பணி பூரணமாகியதாக கருதப்படாது, தீமையிலிருந்து தடுப்பதும், நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு ஆலோசனை வழங்குவதுமே அழைப்புப் பணியின் முழுமையான சேவையாக கருதப் படும்.

சுதந்திரம் அடைந்த அரை நூற்றாண்டு காலமாக அரசியல் நடத்திய முஸ்லீம் லீக்கினால் சமுதாயத்திற்கு சாதிக்க முடியாததை,

முஸ்லீம் சமுதாயத்தைக் கொண்டு ராதாஸை அரியனையில் அமர்த்தி அழகுப் பார்த்து அரசியல் செய்த ஜிஹாத் கமிட்டியால் சமுதாயத்திற்கு சாதிக்க முடியாததை,

எந்தக் கட்சியுடனும் கூட்டு சேர்ந்து அரசியல் பண்ணாமல் வீதியில் இறங்கிப் போராடி இடஓதுக்கீடு, இன்னும் பல தேவைகளை சமுதாயத்தி;றகு பெற்றுக் கொடுத்து சாதனைப் படைத்தது தவ்ஹீத் ஜமாத்.

அது மட்டுமல்லாமல்

இன்ன கட்சிக்கு வாக்களிப்பது இரத்தத்தில் ஊறிப் போனது என்றிருந்த முஸ்லீம் சமுதாய மக்களின் பழக்கத்தை உடைத்தெறிந்து நமக்கு நல்லது செய்யும் கடசியை மட்டும் ஆதரித்து வாக்களிக்கும் மனநிலையை மாற்றியமைத்ததும் தவ்ஹீத் ஜமாத் தான்.

அதனால் கடந்த குடந்தை மாநாட்டில் வைக்கப்பட்ட தீர்மாணத்தையும், அதை நிறைவேற்றினால் அதற்கு பிரதிபலனாக நமது வாக்குகளை வழங்குவது என்ற வாக்குறுதியின் அடிப்படையிலும் சமுதாய மக்களுடைய வாக்குகளை சிதறடிக்காமல் வழங்;கத் தூண்டுவது நிர்பந்திப்பதாகாது.

ஆட்சியாளர்கள் நமது கோரிக்கையை நிறைவேற்றினார்கள்.

நாம் நமது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு கடமைப் பட்டுள்ளோம்.

மாறு செய்தால் வாக்குறுதி மீறியப் பாவத்துக்காக மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.

...தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.2:177

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP