சனி, 2 மே, 2009

வாசகர்கள் பயன் பெறுவதற்காக நமது இனையதளதில் புதிய வசதி தினமும் Update செய்யப்படும் நமது இனையதில் பல விடியோ அடியோ மற்றும் இஸ்லாமிய கட்டுரைகளை டவுன்லோட் செய்துகொள்ளலாம் Click Here to Visit


நேர்காணல் என்ற போர்வையில் அரங்கேறிய நாடகம் !
கடந்த 23.04.2009 வியாழன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பொருளாதார மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அமைப்புக்கு எதிராக சதிவேலை செய்ததன் காரண‌மாக தூக்கி எறியப்பட்டவர்கள் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அவர்களது புதிய சகாக்களின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலியை அழைத்து நேர்காணல் என்ற போர்வையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.

கடந்த 19.04.2009 அன்று மண்ணடியில் பி.ஜே. அவர்கள் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் நடத்திய நாடகம் தெருக்கூத்தைவிட கேவலமாக முடிவுற்றது.

தயாநிதிக்கு ஓட்டுபோடச் சொன்ன ஹைதர் அலி ?

"நீங்கள் வக்ஃப்பு வாரியத்திற்க்கு ஒரு பிராமண வழக்கறிஞரை நியமித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே ? என்று அவரிடம் கேட்ட கேள்விக்கு ஹைதர் அலி சொன்ன பதில், "யாரும் எனக்கு ஓட்டு போடாதீர்கள் ! திறமை எங்கு உள்ளதோ அந்த திறமைசாலிக்குத்தான் ஓட்டு போட வேண்டும். இதில் இந்து முஸ்லீம் என்றெல்லாம் பார்க்க கூடாது " என்ற கருத்தை மறைமுகமாக அவரே ஒப்பு கொண்டார்.

அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா.. ?

"வக்ஃப்பு வாரியத்தில் நான் ஒரு பிராமண வழக்கறிஞரை நியமித்திருக்கிறேன். இந்த நியமனத்தில் இந்து முஸ்லிம் என்று மதத்தை பார்க்கக் கூடாது. நாம் இங்கிருந்து டெல்லிக்கு போகிறோம் விமானத்தில் செல்லும்போது விமான ஓட்டி ஒரு முஸ்லிமா ? இந்துவா ? என்று பார்ப்போமா ? அல்லது திறைமையானவரா ? என்று பார்ப்போம ? அதுபோலதான் நான் நியமித்த பிராமண வழக்கறிஞர் திறமையானவர் " என்று பதில் கூறினார்.

இதன் மூலம் ஹைதர் அலி சொல்லவருவது என்னவென்றால் மத்திய சென்னையில் நான் போட்டியிடுகிறேன். எதிரணீயில் திறமை மிகுந்த ஏற்கெனவே மத்திய அமைச்சராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற தொலைதொடர்புத் துறையில் பல புரட்சிகளை செய்த திறமைசாலி தயானிதிமாறன் போட்டியிடுகிறார்.

எனவே முஸ்லிம் என்பதற்காக எனக்கு வாக்களிக்காதீர்கள் திறமை சாலியான தயானிதிக்கு வாக்களியுங்கள் ! எப்படி திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து வக்ஃப்பு வாரியத்தில் நான் பிராமண வழக்கறிஞரை நியமித்தேனோ அதைபோல.."இது தான் இவர், இவருக்கு எதிராக வைக்கக்கூடிய வாதம்.

மதுரை வக்ஃப்பு வாரியக் கல்லூரியில் செய்த துரோகம் !

இப்படி பதில் கூறிய அடுத்த நிமிடமே அவருடைய பேச்சுக்கு அவரே முரண்படுகிறார்.
வக்ஃப்பு வாரியத்தில் மாற்று மத வழக்கறிஞரை நியமித்து சரிதானாம். அதே நேரத்தில் மதுரை வக்ஃப்பு வாரிய கல்லூரியில் 9 பேராசிரியர்களின் நியமன விஷயத்தில் முஸ்லிம் பேராசிரியகளை நியமிப்பதுதான் சரி, முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கவிடாமல் அழகிரிக்கு எதிராக நின்று இவர் தான் தடுத்தாராம் !

இப்படி தார்ப்பாயில் வட்கட்டிய பொய்யை ஹைதர் அலி அந்த நிகழ்ச்சியில் அவிழ்த்துவிட்டார். அரசியல்வாதிக்குரிய அனைத்து தகுதியும் (?) அவரிடம் வந்துவிட்டது என்பதை இந்த சம்பவங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது.

மதுரை வக்ஃப்பு வாரியக் கல்லூரியில் 9 பேராசிரியர்கள் நியமனத்தில் பெருவாரியாக முஸ்லிம் அல்லாதவர்களை நியமனம் செய்வதற்க்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதே நேரத்தில் தகுதி அடிப்படையில் அந்தப் பதவியை பெற தகுதியான நிலையில் காத்திருந்தவர்களிடம் நான் உங்களுக்கு அனீதி இழைக்கவிடமாட்டேன் என்று இரட்டை வேடம் போட்டவர்தான் இந்த ஹைதர் அலி.

மேலும் பணி மூப்பின் அடிப்படையில் பேராசிரியர்களாக நியமனம் செய்ய தகுதி பெற்ற நிலையில் இருந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த சகோதர, சகோதரிகளை புறந்தள்ளிவிட்டு, இவர் செய்த சதிவேலையை அறிந்து சமுதாய துரோகம் செய்ய காத்திருந்த ஹைதர் அலியை சந்தித்து நியாயம் கேட்க சென்றவர்களிடத்தில் "உங்கள்து இந்த ஒரு காரியத்தி பார்த்தால் நான் செய்ய இருக்கின்ற நாலு நல்ல காரியம் கெட்டுவிடும். இதை கேட்க நீங்கள் யார் ? வெளியே போங்கள்..! உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து பாருங்கள்..! உங்களிடம் நான் பணம் கேட்ட விஷயத்தை சொல்லி என் மீது வழக்கு போடுவதாக இருந்தாலும் போட்டுக் கொள்ளுங்கள். உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது " என்று மிரட்டினாரே இதை ஹைதர் அலி மறக்க முடியுமா ?

அதை தொடர்ந்து அவரை கண்டித்து டி.என்.டி.ஜே நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமும் ஒரு பெரும் நடுக்கம் அவருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த முஸ்லீம் சகோதர சகோதரிகள் இந்த சமுதாயத் துரோகத்துக்கு எதிராக வழக்கு போட்டதால்தான் இவரால் நம் சமுதாயத்திற்க்கு எதிரான துரோகத்தை செய்ய முடியவில்லை தவிர இவராக தடுக்கவில்லை.

பிற சமுதாயத்தினரை நியமன்ம் செய்ய விடாமல் நாம் தடுத்து வைத்துள்ளோம் என்பதே உண்மை. இவர் சமுதாயத்திற்கு செய்யத் துடித்த துரோகத்தையே பெரும் தியாகமாக காட்ட துடிக்கிறார் ! எவ்வளவு பெரிய நாடகம் நடிப்பு என்பதை மக்கள் விளங்கிக் கோள்ள வேண்டும்.
வக்ஃப்பு வாரிய ஊழல்கள்

வக்ஃப்பு வாரியத்தில் இவர் செய்த ஊழல்களில் ஒரு சிலவற்றை சகோதரர் பி.ஜே. மண்ணடியில் பொதுக் கூட்டத்தில் பட்டியல் போட்டார்.
1. பரங்கிப்பேட்டை வக்ஃப்பு நிலத்தை அடிமாட்டு விலைக்கு குத்தகைக்கு விட்டது.
2. திருச்சி வக்ஃப்பு நிலத்தை திமுகவின் அறிவாலயத்திற்க்கு தாரை வார்த்தது.
3. கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பள்ளிவாசல் வக்ஃப்பு நிலத்தை மாயாஜால் பூங்காவினர் மாயாஜாலம் செய்து அபகரித்ததை அங்கிகரித்தது.
4. திருவண்ணாமலை மாவட்டம் போரூர் கிராம வக்ஃப்பு வாரிய சொத்து விஷயத்தில் பண முதலைகளிடம் பலியானது.
5. பூந்தமல்லி வக்ஃப்பில் முறைகேடு செய்ததாக நிருபிக்கபட்ட ஒருவரை மாங்காடு கபரஸ்தான் நிர்வாகியாக நியமித்தது.. என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஆனால் வக்ஃப்பு வாரியத்தில் பெரும் ஊழல் செய்து விட்டீர்களாமே ? என்று கேட்க்பட்ட கேள்விக்கு, " பரங்கிப்பேட்டையில் சொத்தை மீட்டுள்ளேன். திருச்சியில் திமுகவிற்க்கு அறிவாலயத்திற்க்கு பல கோடி மதிப்புள்ள நிலத்தை 10,000 வாடகை வாங்கியதை, 30,000 வாடகை வாங்கி மூன்று வருடதிற்க்கு குத்தகைக்கு விட்டுள்ளேன் " என்று சொத்தை பதில் அளித்தவர்.

மற்ற குற்றசாட்டுகளை பற்றி வாய் திறக்காமல் பவ்வியமாக பம்மிக் கொண்டார். ஊழல் செய்ததை நிருபித்தால் பொது வாழ்விலிருந்து விலக தயார் என்ற கூவல் வேறு!

அவரை நோக்கி வைக்கப்பட்ட மற்ற ஊழல்கள் குறித்து வாய் திறக்காததே "எங்க் அப்பன் குதிருக்குள் இல்லை" என்ற ரீதியில் உண்மையை ஒப்புக் கொண்டதாகிவிட்டது. இதை இனி நிருபிக்க வேறு வேண்டுமா ?

பொய்யர் யார் ? வாத்தியாரா ? ஹைதர் அலியா ?

அடுத்ததாக, அந்த பேட்டியில் அதிமுகவுடன் கூட்டனி பேச்சுவார்த்தை நடத்தினோம். இரண்டு சிட்டுகள் தருவதாக கூறினார்கள். ஆனால் இரட்டை இலையில் நிற்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் இரட்டை இலையில் நிற்க முடியாது தனிச் சின்னத்தில்தான் நிற்போம் என்று கூறி மறுத்து விட்டோம் என்ற உண்மையையும் வாய் தவறி ஒப்புக் கொண்டுவிட்டார்.

ஜவாஹிருல்லாஹ் சொன்னது:
(பி.பி.சி. தமிழோசையில்..)

திமுகவுடனும் அதிமுகவுடனும் ஒரே நேரத்தில் கூட்டனி பேரம் பேசுகின்றீர்களே ! இது சந்தர்ப்பவாதம் இல்லையா ? " என்று பி.பி.சி. நிருபர் கேட்ட கேள்விக்கு "எங்களுக்கு அதிகாரத்தை பெறுவதுதான் முக்கியம்" என்று வாத்தியார் பதிலளித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் வாத்தியார் கூறியது :

அவர்களது கூட்டனி அறிமுக பத்திரிக்கையாளர் கூட்டத்தில், அதிமுகவுடன் கூட்டனி தொடர்பாக பேசியது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "அதிமுகவுடன் எந்த பேச்சு வார்த்தைய்ம் நாங்கள் நடத்தவில்லை. அனைத்தும் தவறான தகவல்" என்று தா ஒரு பொய்யன் என்பதை ஜவாஹிருல்லாஹ் நிருபித்தார்.

அதிகாரப்பூர்வ நாளேட்டில் பொய் :

இதே கருத்தையே தங்களது பத்திரிக்கையில் ஏப்ரல் 17 23 தேதியிட்ட (தொகுதி 5 : இதழ் 18) இதழில் பக்கம் 6ல் "அதிமுகவோடு பேச்சு வார்த்தை நடத்தவில்லை " என்ற பொய்யைக் கூறி, இது பொய்யான பத்திரிகை என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.

நேர்காணல் நாடகத்தில்.. !

தங்களது அமைப்பின் தலைவர் அதிமுகவுடன் கூட்டணி குறித்து முன்னுக்குப் பின் முரணாக உளறீ தான் ஒரு பொய்யர் என்று நிருபித்த நிலையில், 24.04.2009 அன்று நடத்தப்பட்ட நேர்கானல் நாடகத்தில் 'அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம் இரண்டு சீட் தருவதாக கூறினார்கள்' என்று ஹைதர் அலி கூறுகிறார் என்றால்.. பொய்யர் யார்? ஜவாஹிருல்லாவா? ஹைதர் அலியா? அல்லது இருவருமா ?
இன்ஷா அல்லாஹ் தொடரும்....

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP