செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

கதையல்ல நிஜம் தாயினாலேயே நிர்வாணப்படுத்தப்பட்ட மகள்.

கதையல்ல நிஜம்
தாயினாலேயே நிர்வாணப்படுத்தப்பட்ட மகள்.
விஜய் டிவியில் பரபரப்புப் பேட்டி. கலத்தில் தவ்ஹீத் ஜமாத்.

தொகுப்பு Rasmin M.I.Sc

வீடியோ மற்றும் பின்னனித் தகவல்கள்.





கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற ஊரில் ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட கொடுமை ஊரையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது கடந்த 9.08.2010 அன்று விஜய் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரி தனக்கு நடந்த அவலத்தை அந்த நிகழ்சியில் தெரிவித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை அடைய முயற்சிப்பதாகவும் அவர் தன்னை துன்புருத்துவதாகவும் அந்த நிகழ்சியில் தெளிவாக குறிப்பிட்டதுடன் இதற்கு தனது தாயும் தந்தையும் கூட உடந்தை என்பதை பகிரங்கமாக தெரிவித்தார்.

நடந்தது என்ன?

விஜய் டிவியின் நிகழ்சிக்கு முன் இந்த சகோதரிக்கு நடந்தது என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது கடந்த 19.02.2010 அன்று கோவை குனியமுத்தூர் போலிஸ் நிலையத்தில் சபிய்யா பானு என்ற சகோதரி தனது தாய் மாமனுடன் சென்று ஒரு வழக்குப் பதிவு செய்தார்.

ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை மானபங்கப் படுத்த முயல்வதாகவும்.அதற்கு தனது தாயும் தந்தையும் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் தன்தை ஆரச்சாமிக்கு திருமணம் முடித்துக் கொடுக்க முயல்வதாகவும் இதனைத் தடுத்து நிருத்த காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் அவர் புகார் பதிவு செய்தார்.

அததைத் தொடர்ந்து கோட்டின் மூலம் ஆரச்சாமி ஜாமினில் வெளிவந்து விடுகிறான் அந்த வழக்கு இன்னும் நிழுவையில் உள்ளது.

அந்தச் சகோதரியின் தாய் மாமா பாட்டி அனைவரும் இவரை அவரின் வீட்டிட்கு அனுப்ப வேண்டாம்.இந்தப் பெண்ணை அங்கு அனுப்பினால் அவர்கள் மீண்டும் அவருக்கு துன்பம் கொடுப்பார்கள் என்று போலிஸில் சொல்லியும் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தச் சகோதரி மீண்டும் அவருடைய பெற்றோருடனே அனுப்பப் பட்டார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் பழைய பிரச்சினைகள் தலை தூக்குகிறது.

மீண்டும் 02.07.2010 அன்று வெள்ளிக்கிழமை ஸ்கூல் சென்ற அந்தச் சகோதரி அங்கிருந்து திருப்பூரிலிருக்கும் தனது தாய் மாமாவின் வீட்டிட்கு செல்கிறாள்.

அந்த மாமா குறிப்பிட்ட சகோதரியை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டத்தை அனுகினார்.

பிரச்சினையை கையிலெடுத்தது தவ்ஹீத் ஜமாத்

07.07.2010 அன்று இந்தச் சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் அவருடைய தாய் மாமா மூலமாக தெரியப் படுத்துகிறார்.

பிரச்சினையை கையில் எடுத்த தவ்ஹீத் ஜமாத் உடனே கலத்தில் குதித்தது.

07.07.2010 அன்று தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்;ட நிர்வாகம் கமிஷ்னரை சந்திக்கிறார்கள்.

குறிப்பிட்ட சகோதரிக்கு நடந்த கொடுமைகள் கமிஷ்னரிடம் தெளிவாக விளக்கப் பட்டது.அதனைத் தொடர்ந்து கமிஷ்னரின் வேண்டுதலுக்கிணங்க அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்தச் சகோதரியுடன் மாவட்ட நிர்வாகம் சென்றது.

மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டவுடன் 09.07.2010 அன்று மீண்டும் அந்தச் சகோதரியை அழைத்துக் கொண்டு விசாரனைக்கு வரும் படி அனைத்துக் மகளிர் காவல் நிலையம் தவ்ஹீத் ஜமாத்தை கேட்டுக் கொண்டது.
அதுவரை தவ்ஹீத் ஜமாத்தின் பாதுகாப்பில் அந்தச் சகோதரியை வைத்துக் கொள்வதாகவும் முடிவு செய்யப் பட்டது.

09.07.2010 அன்று மகளிர் காவல் நிலையத்தில் வைத்து குறிப்பிட்ட சகோதரியின் தாயிடத்தில் விசாரனை செய்யப் பட்டபோது தாய் தனது மகள் என்று கூடப் பார்க்காமல் காரசாரமாக அந்தச் சகோதரியை திட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் மகளிர் காவல் நிலையம் 12.07.2010 அன்று விசாரனைக்கு வரும்படி சொல்ல அழைத்து சென்றது தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம்.

மீண்டும் விசாரனையின் போது தனது மகளை காரசாரமாக வாய்க்கு வந்தபடி திட்டுகிறார் அந்தப் பெண்ணின் தாய்.

அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தின் உத்தரவின் பேரில் தவ்ஹீத் ஜமாத்தின்; பாதுகாப்பில் குறிப்பிட்ட சகோதரி ஒப்படைக்கப் படுகிறார்.

தந்தையின் தீக்குழிப்பு நாடகம்.

19.07.2010 அன்று சாதிக் பாஷா(இவர் இந்துவாக இருந்து இஸ்லாத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.) என்ற அந்தச் சகோதரியின் தந்தை கலக்டர் அலுவலகத்தின் முன் தீக்குழிக்கச் முயன்றார்.

அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலைய வேண்டுதலின்படி நீதிபதி விசாரனைக்கு அந்தச் சகோதரி அழைத்துச் செல்லப் படுகிறார்.

கிட்டத் தட்ட 3 மணிநேரங்கள் விசாரனை நடத்தப் பட்ட பின் அந்த சகோதரியின் தாய் மற்றும் தந்தையை கடுமையாக கண்டித்து அதன் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோவை மாவட்ட கட்டுப் பாட்டில் அந்தச் சகோதரி விடப்பட்டார்.

விஜய் டிவி நிகழ்ச்சி.

நீதிபதி விசாரனையில் தான் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டதை மறைப்பதற்காக விஜய் டிவியின் கதையல்ல நிஜம் நிகழ்ச்சிக்கு அந்தப் பெண்ணின் தாய் தெரியப் படுத்தினார் அதனைத் தொடர்ந்து விஜய் டிவி நிர்வாகம் தவ்ஹீத் ஜமாத்தை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தச் சகோதரியை குறிப்பிட்ட நிகழ்சியில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றது தவ்ஹீத் ஜமாத்.

கதையல்ல நிஜம்.

குறிப்பிட்ட சகோதரி பொய் சொல்கிறார் என்று செய்தி பரப்பிய தாய் தந்தை உற்பட ஆரச்சாமி என்ற காமுகனையும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் சகோதரி அவர்கள் தான் இந்த ஆரச்சாமியால் பாதிக்கப் பட்ட முறையை தெளிவாக விளக்கினார்.

நிகழ்சியை நடத்திய லக்ஷ்மி என்ற பெண்ணே இந்தச் சகோதரியின் செய்தியைக் கேட்டு ஆச்சரியப் பட்டார்.

சகோதரி ஆரச்சாமியைப் பற்றி சொன்ன சில செய்திகள்.

இவன் என்னுடைய தாயுடன் தவறான தொடர்பை வைத்திருக்கிறான்.

இது என் தந்தைக்கும் தெரியும்.

இவன் என்னை அடைவதற்கு பல முறை முயன்றான்.

என்னுடன் யார் பேசினாலும் அவர்களை கடுமையாக தாக்குகிறான்.

என்னை யாருடனும் பேசக்கூட விடுவதில்லை.

நான் வெளியில் சென்று விடாமல் இருக்க என் தாயும் இவனும் சேர்ந்து என்னை நிர்வாணப் படுத்தினார்கள்(சொல்லும் போதே விம்முகிறார்)

எனது தாய் தந்தையின் கண்முன்னே என்னை கடுமையாக தாக்குவான்.

இருவரும் அதனைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்

இவனுக்கும் எனக்கும் எந்தத் உறவு முறைச் சொந்தமும் இல்லை ஆனாலும் இவன் என்மேல் என் தந்தையை விட அதிகமான அதிகாரம் செலுத்துகிறான்.

இப்படி பல செய்திகளை ஆரச்சாமி என்ற அந்த ஆசாமியைப் பற்றி சகோதரி எடுத்து வைத்தார்.

லக்ஷ்மியின் கேள்வியும் சகோதரியின் பதிலும்.

நிகழ்சியை நடத்திய லக்ஷ்மி அவர்கள் இப்படியெல்லாம் உன்னை இவன் துன்புருத்தக் காரணம் என்ன என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சகோதரி நான் இப்படி இவனிடமும் என் தாய் தந்தையிடமும் கஷ்டப் பட காரணம் என்னுடைய அழகு இதன் காரணமாகத் தான் இந்தக் காமுகன் என்னை இப்படி கஷ்டப் படுத்துகிறான் என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ஆரச்சாமியும் லக்ஷ்மியின் எச்சரிக்கையும்.

நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் லக்ஷ்மி அந்த நிகழ்சியில் ஆரச்சாரமியை விசாரனைக்கு உட்படுத்தினார்.

அந்த விசாரனையில் நீங்கள் ஏன் இந்தப் பெண்னை இப்படி கஷ்டப் படுத்துகிறீர்கள் உங்களுக்கு இவர் என்ன உறவு இவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க.

அரண்டு போன ஆரச்சாமி தனக்கும் குறிப்பிட்ட அந்த சகோதரிக்கும் எந்த ஒரு உறவும் இல்லை.

அவருடைய தாயாருடன் நான் வியாபாரம் செய்கிறேன்.அதனால் இந்தப் பெண்ணையும் எனக்குத் தெரியும் வீட்டிட்கு போய் வருவேன்.

அவருடைய நல்லது கெட்டதுகளை பார்த்துக் கொள்வேன் என்று சொன்னார்.

அதற்கு பின் பேசிய லக்ஷ்மி இவர் சொல்வதில் என்ன உண்மை இருக்கிறது என்று சகோதரியிடம் கேட்க இவருக்கும் எனது தாய்க்கும் வேறுவிதமாக தொடர்பு இருக்கிறது.

அத்தோடு இவர் என்னையும் அடைய முயற்சிக்கிறார் என்பதை அந்தக் காமுகனுக்கு முன் விஜய் டிவியில் தெளிவாக தெரிவித்தார்.

இதனை மறுத்த ஆரச்சாமிக்கு பதில் கூறிய லக்ஷ்மி எந்தப் பெண்ணும் இல்லாத ஒன்றை தன்மேல் சொல்லி தனது எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ள மாட்டார் நீங்கள் இப்படி நடந்ததால் தான் இவர் இப்படி குறிப்பிடுகிறார் என்பதை விளக்கி சொல்ல தான் அப்படி நடந்தேன் என்பதற்கு சாட்சியாக ஆரச்சாமி அமைதியாக இருந்தார்.

வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

விசாரிக்கப் பட்ட தாயும் தந்தையும்.

இருதியாக தாயையும் தந்தையையும் விசாரித்தார் லக்ஷ்மி அப்போது தாய் மாறி மாறி பேசியது அவர் ஒரு குற்றவாளிதான் என்பதையும் தந்த ஒரு கையாலாகாத ஆரச்சாமியின் பணத்திற்கு அடிமையான ஒருவன் என்பதும் தெளிவாக விளங்கியது.

தீக்குழிப்பு என்று கூறியதெல்லாம் நாடகம் என்பதும் அந்த வீடியோவில் நிரூபிக்கப் பட்டது.

அதே போல் இனிமேல் எந்தவிதமான கஷ்டமும் இந்தப் பெண்ணுக்கு கொடுக்கக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப் பட்டது.

தந்தையை எச்சரித்த லக்ஷ்மி.

சம்பந்தமே இல்லாத ஒருவன் உங்கள் பிள்ளையை அடித்து துன்புருத்தியுள்ளான் இதையெல்லாம் பார்த்து நீங்கள் சும்மா இருந்துள்ளீர்கள்.

இனிமேலாவது ஒரு ஆண்மகனைப் போல் நடந்து கொள்ளுங்கள் என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

தகவல் :

சகோதரர் நவ்ஷாத்
செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டம்.
Ph : 00919150125002


Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP