வெள்ளி, 29 மே, 2009

கல்வி உதவி

கல்வி உதவி செய்யும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்

1.MUSLIM EDUCATIONAL INSTITUTION AND ASSOCIATION IN TAMILNADU
OMEIAT Anjuman Campus,
#16,B.N. Reddy Road, T.Nagar,Chennai – 600017
2.BAITULMAL TAMILNADU
New No: 100(Old No: 314)
Wallajah Mosque Compond, Triplicane, Chennai – 600005
Phone: 91-044-28512947 / 28411145
3.ISLAMI BAITULMAL
Hajee Abdul Raheem Sahib Street,
Fort, Vaniyambadi- 635751. Tamilnadu
Email: tahmed.iftikhar@gmail.com
Contact: Pudupet Abdullah Basha
Phone: 04174-225481
4.SEETHAKATHI TRUST
688,Anna Salai,Greams Road,
Chennai- 600006. Tamilnadu
Phone No 28522982
WEB: www.crescentcollege.org
6.FATHIMA EDUCATIONAL TRUST
16/298, LIC Colony, Hotal Vasantham Road,
New Bus Stand, Salem – 636004. Tamilnadu.
WEB: www.fathimaedutrust.org
Phone: 0427 – 4041899, 98659-78889,93606-84974
7.MUSLIM EDUCATIONAL ASSOCIATION
87,Peters Road, Royapettah,
Chennai – 600014 Tamilnadu. Phone No 28267318
8.NOORUL ISLAM EDUCATIONAL TRUST
Kumaracoil, Kanyakumari District – 629180
Tamilnadu, INDIA, Web: info@niceindia.com
9.SULAIMAN ALIM CHARITABLE TRUST
Suite 4, 4th Floor, Jhaver Plaza, 1-A,
Nungambakkam High Road, Chennai – 600034
Phone : 28115935
10.THE CHILDREN FOUNDATION
Post Box No – 5007, Chennai – 600090
Tamilnadu
Email: info@childrenfoundation.net
Web: www.childrenfoundation.net
Students studying from the Vth to XII standard
11.ALL INDIA CARAVAN-E-INSAAF
Mr.Mushtaq Ahmed
21,Royapettah, High Road, Chennai – 14,Tamilnadu
Mob:09444052530, Web: www.caravan-e-insaaf.com
12.SOUTH INDIAN EDUCATIONAL TRUST
Coimbatore No44 Divine, Ganapathy Coimbatore.
Mobile : +919894619874
Email: sietcbe@southindianedu.org
Chennai Mobile : +919840314436
Email: sietchn@southindianedu.org
12.TAMAM
P.O.BOX: 1263, MUTTRAH-114, SULTANATE OF OMAN

கல்விக்காக அரசு உதவிகள்

1.Directorate of Minorities Welfare
807,Anna Salai, Chennai 600002
Tamilnadu Minorities Economic Development Corporation Ltd
5th Floor, Anna Salai, Chennai 600002
2.National Commission for Minorities,
5th Floor Lok Nayak Bhavan, Khan Market,
New Delhi 110003, Tel. 24618349, Fax 24693302,24642645.
Email: ncm-mma@nic.in , www.ncm.nic.in
3.National Minorities Development and Financial Corporation.
Taimoor Nagar, New Friends Colony Nehru Nagar Delhi – 110065
Landmark : Near S.R.R.I Staff Quaters
Phone: 011-26326051

வெளி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் நிறுவனங்கள்

1.ALL INDIA MUSLIM MAJLIS-E-MUSHAWARAT
D-250, ABDUL FAZAL ENCLAVE-I, JAMIA NAGAR NEW DELHI – 110025.
TEL: ++91-11-26946780, FAX: 26947346
EMAIL: mushawarat@mushawarat.com
2.SOUTH INDIAN EDUCATIONAL TRUST
Banglore Branch
3/10,DGQA Complex,
J.C.Nagar, Banglore
Ph: 080 23535731
Mobile : +91 9846601211
sietbglr@southindianedu.org
3.Aamir Mustafa Kidwai Trust
Contact: Mrs Aziza Kidwai
B-28 West End Colony, New Delhi – 110021;
Tel. 011-24670009, Mob: 09868679107
4.Central Wakf Council
14/173, Jam Nagar House, Shahjahan Road,
New Delhi – 110011; Tel: 23384465: Fax: 23070881;
Email: central.wakf.council@vsnl.net
Web: www.wbmdfc.org/wakf/index.html
Criteria: Father’s Annual income not more than Rs. 75000.00 per annum Scheme: Scholarship to students of BE, MBBS, BDS, B.Sc, A.M.D.Sc(Alig), MBA, M.Sc, L.L.B, Scholarship Rs 6000.00 per annum
5.Aamir Mustafa Kidwai Trust
Contact Person: Mrs Aziz Kidwai
B-28, West End Colony; New Delhi – 110021;
Tel. 011-24670009, Mob: 09868679107
Scheme: Financial assistance & scholarship for pursuing higher studies to needy and meritorious persons belonging to educationally backward minorities.
6.Al-Ameen Charitable fund Trust super tannery(I) Ltd.
Jajmau Road, Jajmau, Kanpur-208010(UP)
Scheme: Post Metric Scholarship for higher education.
7.Dawodbhoy Fazalbhoy Muslim Educational Trust
42,Ibrahim Md, Merchant Road, Dhadah Khadak, Mumbai 400029
Email : assurfam@vsnl.com
8.GBK Charitable Trust
Giyasuddin babukhan, Chairman and Managing Trustee, GBK Charitable Trust,Begum pet, Hyderabad.
Scheme: Poor Student studying MBBS, BDS, Pharmacy, BE, B.Tech, LLB, BCA, MCA,MA,M.com, B.com, B.Ed, M.Ed, Ph.D (for research meterial), nursing, polytechnic, graduation, inter, TTC, ITI, Distance education, post
9.Foundation for Social Care Director.
Scholorship programe : Ziaur-Rahman Siddiqul
185/A Johari Farm, Jamia Nagar, New Delhi 110025
Tel: (011) 26317311, Email : fsc_admin@rediffmail.com
Email: fscscholarship@yahoo.co.in; www.fscwecare.org
10.Hamdard Educational Society
Talimabad,Sangam Vihar New Delhi 110062;
Tel: (001)6085063 – 6085064,
Email: inquiry@jamiahamdard.edu
For Science At Secondary level
11.Jamiat-Ulama-e-Hind
No1, Bahadur Shah Zafar Marg, New Delhi – 110002;
Ph:23311455,3317729 Criteria: Needy and meritorious student
Scheme: Mujahid Millat Educational Scholarship to meritorious student seeking admission to Engineering(civil, Elec., Electronics, Computer), MCA, Chartered Accountant.
12.Sir Syed Scholarship Trust(Regd.)
Samreena Lodge, Muzammil Manzil, ADM Compound Road,
Aligarh, U.P. 202002; Phone 0571-2706418
Person to Contact: Prof.Ziaul Hasan or Mr.Usman Ansari
Email: zhsst@hotmail.com, mosul1968@yahoo.com
13.Muslim India Educational and Cultural Trust(MIECT)
D-250, Abdul Fazal Enclave, Jamia Nagar, New Delhi- 110025
Tel: 26326780 Fax: 26327346
Email: muslim@del3.vsnl.net.in
www.mushawarat.com

வெளி நாட்டில் படிக்க முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் நிறுவனங்கள்

1.Aga Khan Foundation(UK)
Sarojini House, 6 Bhagawan Das Road, New Delhi 110001
Scheme: University study in the UK for grad and post grad programmes.
2.INTREST FREE LOAN & GUIDANCE
President, Indian Fishermen Charity, 17, Wellington Estate,
24,Ethiraj Salai, Chennai(Tamilnadu) – 600105
Interest Free Loan and Guidance for School & College students for studies in abroad with visa

முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள்

1.AIMAN SANGAM
PO BOX 3207, Abu Dhabi, United Arab Emirates
www.aimansangam.com
2.The Barakat Trust(UK)
The Oriental Institute, The University of Oxford
Oxford OX1 2LG, Tel: 00 44 (0) 1865278069
Fax:00 44(0) 1865278228, www.barakat.org/grants.php
Basic Research, Education and Developement(BREAD)
3.Fadel Educational Foundation, Inc
FEF, Inc., PO Box 212135, Augusta, GA 309172135 USA
Toll-Free Fax: 866-705-9495(US Only)
www.fadelfoundation.org
a non-profit educational foundation supporting education for Muslim US citizens and permanent residents. The awards are distributed on a need/merit basis.
4.KINGS FAISAL FOUNDATION PROGRAMS & RESEARCH DEPT.
Physical Address: KFF Building, Kings Fahed road Olaya,
Riyadh, Kingdom of Saudi Arabia; Tel: +966-1-465-2255
Fax: +966-1-465-6524 Postal Address: PO Box 352 Riyadh 11411 Saudi Arabia
info@kff.com www.kff.com/english/kff/ea/ss/ssterms_cond.html
5.Muslim Hands
148-164 Gregory Boulevard, Nottingham NG7 5JE; United Kingdom;
www.muslimhands.org contact@muslimhands.org
Application from overseas Muslim students to study in the UK are occasionally considered by the Trust. Please note that the trust does not have a particular focus on this area of grant-making. Application in writing to S Bashir at the address.
6.Muslim World League Secretariat General Education Affair
No.40, PO Box 537, Makkah-Al-Mukarramah, KSA
Tel: 5422733 Fax: 5436619/5444787
Criteria: Recommendation from either a person or a organization trusted by Rabita. Non-receipt of scholarship from any other institution
Scheme: Scholarship for B.Sc Programme in Arabic or Islamic Course holding a general secondary school certificate or it’s equivalent.
7.Islamic Research Foundation International, Inc.
Ibrahim B.Syed, Ph.d president 7102 W.Shefford Lane, Louisville, KY 40242-6462,USA
IRFI@INAME.COM www.irfi.org

முஸ்லிம் பெண்களுக்கு கல்வி உதவி செய்யும் நிறுவனங்கள்

1.Muvattupuzha Islamic Education Trust
Market PO, Muvattupuzha, Kochi – 686673, Kerala, India
Phone : +91-485-2833125, 3256056, +91-9447814250
Email: mail@mietorphanage.com
2.Maulana Azad Education Foundation
Social Justice Service center, Mahila Imdad Committee,
Opposite New Delhi Railway Reservation Center,
Chelmsford Road, New Delhi – 110055;
Phone/Fax : 011-23583788, 23583789
Application for Maulana Azad national scholarship for girls can be submitted in between 1st July to 30th September every year
3.Waqf women Foudation
No.530, 5th Floor, MS Building, Vidhan Vidhi, Banglore, Karnataka
Scheme: Scholarship for female Muslim students for medical courses(MBBS,BUMS), Dental engineering and Ded(TCH).
4.Kerala Govt. Scholarships
Apply to: Director of Collegiate education,
Trivandrum – 695033
Director of Collegiate Edn Floor, Vikas Bhavan,
Trivandrum-695033,Kerala
Merit Scholarship(based on SSLC marks)
Kerala govt. Scholarship(+2,degree,PG)
Cultural Scholarship
மேலும் விவரங்களுக்கு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி
30,அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை 600001
கல்வி:
tntjedu@gmail.com, 9840684403
கல்வி உதவி:
tntjaid@gmail.com, 9841069924
வேலை வாய்ப்பு:
tntjjobs@gmail.com, 9894658355
போன்: 044-25215226,044-25241470
www.tntj.net
www.onlinepj.com
www.tntjsw.blogspot.com
www.tntjjobs.blogspot.com

Read more...

செவ்வாய், 26 மே, 2009

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

>>முதல் முறையாக லண்டனில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

>>பி.ஜே அவர்கள் ஆன்லைனில் கான்ஃபிரன்ஸிங் மூலம் பதில்! புகைப்படங்களுடன் செய்தி..

Read more...

சனி, 23 மே, 2009


கடமையான தொழுகைக்கு பிறகு ஓதும் திக்ருகள்

அல்லாஹ் கூறுகின்றான்:
என்னை நினைவுக் கூறுங்கள். நான் உங்களை நினைக்கின்றேன். மேலும் எனக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள்; என்னை நிராகரித்து விடாதீர்கள்.

(அல்குர்ஆன் 2:152)

அன்பிற்க்கினீயவர்களே !
அல்லாஹ்தாலாவினால் உலக மாந்தருக்கு கொடுக்கப்பட்ட உண்னதமான மார்க்கம் இஸ்லாம். அந்த இஸ்லாத்தின் தூய வாழ்வு, இறை வழிபாடுகள் எப்படி என்பதை நபி(ஸல்) அவர்கள் தனது சொல், செயல், அங்கிகாரம் என்ற அடிப்படையில் மார்க்கத்தை நமக்கு கற்றுத் தந்துள்ளனர்.அதன் அடிப்படையில் நாம் நாமது இறைவழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்களின் ஒரு சுன்னத் நமக்கு தெரியாமல் இருக்கும் நிலையில், அந்த சுன்னத் தெரிய வரும் நிலையில் அதை ஹயாத்தாக்கினால் அல்லாஹ் நமக்கு நன்மையை கூலியாக தருகின்றான். ஆகவே

கடமையான தொழுகைக்குப் பிறகு அதாவது இமாம் ஸலாம் கொடுத்தவுடன் உடனே கூட்டு துவா ஓதுவதற்க்கும், அதை பின் தொடர்பவர்கள் ஆமீன் சொல்வதற்க்கும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையில் ஆதாரம் இல்லாத நிலையில் துவாவிற்க்கு முன் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடி தஸ்பிஹ், திக்ருகளை ஓதி நாம் நமது இறைவழிபாட்டினை தூய்மையாக்கி கொள்வோமாக !

இதோ நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் நபி(ஸல்) அவர்களின் ஹதீத்துகளின் துனையோடு

கடமையான தொழுகைக்குப்பின் ஓதவேண்டிய திக்ருகள்

அஸ்தக்ஃபிருல்லாஹ் ‍ ----- > 3 முறை

பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்.

அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம், வ மின்கஸ்ஸலாம், தபாரக்த்த யாதல் ஜலாலி வல் இக்ராம்.

பொருள்: யா அல்லாஹ்! நீயே சாந்திக்குரியவன். உன்னிடமிருந்தே சாந்தி கிடைக்கிறது. மேன்மைக்கும் கண்ணியத்திற்க்கும் உரியவனே! நியே மகத்துவ மிக்கவனாகி விட்டாய்!

அறிவிப்பவர்: ஸவ்பான்(ரலி)
ஆதாரம் : முஸ்லீம்

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்க லஹுலஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவா ஆலா குல்லி ஷையின்கதிர். லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹ் வலாநஃபுது இல்லா இய்யாஹ். லஹுன் நிஃமத்து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாஉல்ஹஸன். லாயிலாஹ இல்லல்லாஹ் முக்லிஸீன லஹுத்தீன் வலவ்கரிஹல் காஃபிரூன்.

பொருள்:வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எந்த இனையும் கிடையாது. ஆட்சி அதிகாரங்களும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடைடையவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ; நன்மையை செய்யவோ முடியாது. வணக்கத்திற்க்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நாங்கள் வணங்கமாட்டோம். அனைத்து அருட்கொடையும் சிறப்பும், சிறந்த புகழும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மார்க்க (வணக்க)த்தை அவனுக்காக மட்டுமே தூய்மையாக்கியவர்களாக அவனை மட்டுமே வணங்குவோம். இதனை இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே!

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா(ரலி)
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்

ஸுப்ஹானல்லாஹ் - 33 முறை

பொருள்: அல்லாஹ் தூய்மையானவனாவான்

அல்ஹம்துலில்லாஹ் - 33 முறை
பொருள்:அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே!

அல்லாஹு அக்பர் - 33 முறை

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதிர்

அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லீம்

அல்லாஹு லாஹிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸினதுன் வலா நவ்ம். லஹு மா ஃபிஸ் ஸமாவாத்தி வமா ஃபில் அர்ழ் மன் தல்லதீ யஷ்ஃபஉ இன்தஹு இல்லா பி இத்னிஹ். யஃலமு மா பைன யுஹீத்தூன பிஷையிம் மின் இல்மிஹீ இல்லா பிமாஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல் அர்ழ். வலா யஊதுஹு ஹிஃப்ழுஹுமா வஹுல் அலிய்யுல் அலீம்.

பொருள் : அல்குர்ஆன் 2:255 வது வசனத்தைப் பார்க்க‌

ஆதாரம் : ஸஹீஹுல் ஜாமிஃ

குல் ஹுவல்லாஹு அஹத்
குல் அஊது பிரப்பில் ஃபலக்
குல் அஊது பிரப்பின் னாஸ்
ஆகிய அத்தியாயங்களை ஓத வேண்டும்

பொருள் : அல்குர்ஆன் 112,113,114 ஆகிய அத்தியாயங்களைப் பார்க்க‌

ஃபஜர் மற்றும் மஃரிப் தொழுகைக்குப் பின் மேற்கூறப்பட்டவைகளுடன் இவைகளையும் ஓத வேண்டும்.

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதிர்
(10 முறை)

குல் ஹுவல்லாஹு அஹத்
குல் அஊது பிரப்பில் ஃபலக்
குல் அஊது பிரப்பின் னாஸ்
ஆகிய அத்தியாயங்களையும் மும்முன்று முறை

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் குபைப்(ரலி)
ஆதாரம் : திர்மித்

தொகுப்பு : ஜுலை 2004 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் பரங்கிப்பேட்டையில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்

Read more...

திங்கள், 18 மே, 2009

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் ?
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்...)

அன்பு சகோதர சகோதரிகளே "மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்" என்ற தலைப்பில் நமது இனையத்தளத்தில் செய்தி வெளியிடுவதற்க்கு காரணம் கடந்த சில நாட்களாக நமக்கு இமெயில், எஸ்.எம்.எஸ் மற்றும் தொலைபேசி மூலம் வரும் மொட்டை மனிதர்களின் மிரட்டல்களுக்கு பதிலடி தரும் நோக்கத்தோடு தான்.

இப்படி நெஞ்சில் தைரியம் இல்லாத சமுதாய விரோதிகளுக்கு ஒரு எச்சரிக்கையை இதன் மூலம் கூற உள்ளோம்.

கடலூர் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இனையத்தளம் மூலமாகவும் மற்றும் மொபைல் தாவா என்று தொடங்கி எஸ்.எம்.எஸ் மூலமாகவும் சமுதாய தலைவர்கள் என்று பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் தலைவர்களின் இஸ்லாம் மற்றும் சமுதாய விரோத போக்கை மிகவும் வெளிப்படையாக ஏக இறைவனின் உதவியோடு ஆதரத்துடன் தமிழகம் முழுவதும் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது.

இந்த முயற்ச்சி அல்லாஹ்வின் பெரும் உதவியோடும் மக்களின் ஆதரவோடும் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டு வருகின்றது..... அல்லாஹ் அக்பர் புகழ் அனைத்தும் ஏகன் இறைவனுக்கே

இதனால் பயனடையும் மக்கள் பலர் எங்களிடம் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் கருத்துக்களை பார்க்கும் நேரத்தில் இந்த பணியை மேலும் அதிகம் அதிகம் செய்ய வேண்டும் என்ற முயற்ச்சியில் டி.என்.டி.ஜே கடலூர் நகரம் இறங்கியுள்ளது இன்ஷா அல்லாஹ் துவா செய்யவும்....

நாம் ஆதரத்துடன் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விஷயங்களினால் மக்கள் தெளிவடைந்து சமுதய துரோக்கிகளை அடையாளம் காண தொடங்கியுள்ளனர்... இதனால் தங்களின் சாயம் வெளுத்துவிடுமோ என்று கவலைக்குள்ளான சமுதாய விரோதிகளிள் சிலர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒரு விஷயத்தை நாங்கள் இவர்களுக்கு தெளிவு படுத்த விரும்புகின்றோம் அல்லாஹ்விற்க்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படும் நாங்கள் உங்களை போன்ற மனிதர்களுக்கு ஒரு காலமும் பயப்படமாட்டோம் என்பதை உருதிசெய்து கொள்ளுங்கள்.....

மிரட்டல் விடுக்கும் பிணாமிகளே நாங்கள் அல்லாஹ்விற்க்கு மட்டும் அஞ்சும் கூட்டம் உங்களை போன்ற ஊர் பெயர் தெரியாத பிணாமிகளுக்கு அஞ்சுபவர்கள் இல்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்கள் போனில் கூறியதை நேரில் செய்து பாருங்கள் இப்படி கொலைத்தனமாக போனில் மிரட்டினால் நாங்கள் பயப்பட மாட்டோம் எங்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் உண்மை இருக்கின்றது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

இந்த வசனத்தின் அடிப்படையில் நாங்கள் நன்மையை மட்டும் ஏவாமல் தீமையையும் அல்லாஹ்வின் பாதையில் தடுத்து வருகின்றோம். இதனால் எங்கள் உயிர் போகும் என்றால் அதையும் இழக்க தயாராக இருக்கின்றோம் அல்லாஹ்விற்காக.

அல்லாஹ்விற்க்கு சிரிது அஞ்சாமல் தன் வாய்க்கு வந்த தீய வார்த்தைகளை கொண்டு திட்டி எங்களுக்கு வெட்டுவேன் குத்துவேன் என்று கொலை மிரட்டல் விடுக்கும் பினாமிகளே அல்லாஹ்வின் அடியான் பேசினால் நல்லதையே பேசுவன் இல்லையேல் வாய் மூடி இருப்பான் நபி மொழியை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
அடுத்ததாக இப்படி போன் போட்டு மிரட்டும் இவர்கள் தைரியம் இருந்தால் அவர்களின் ஊரையும் பெரையும் சொல்லி மிரட்டட்டும் அப்படி ஊர் பெயர் இல்லாத பினாமிகளாக இருந்தால் மிரட்டுவதை தவிர்க்கட்டும் ஏன் என்றால் கோலை தான் இப்படி ஊர் பெயர் இல்லாமல் மிரட்டுவான்....

கடைசியாக நீங்கள் எப்படி மிரட்டினாலும் நாங்கள் எங்கள் பணியை நிருத்திவிட போவதில்லை அதனால் உங்கள் தொலைபேசி கட்டனங்களை வீணாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்....
நீங்கள் மிரட்டுவது தான் அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த முதல் வெற்றி என்பதை நீங்களே சிந்தித்து உணர்ந்து கொள்ளுங்கள்

அழைப்பு பணியில் என்றும் அன்புடன்
கலீல்லூர் ரஹ்மான்

Read more...

வெள்ளி, 15 மே, 2009

பாகிஸ்தானிடம் இந்தியா பாடம் படிக்க வேண்டும்

கடந்த 1992 டிசம்பர் 6 மறக்க முடியாத, இந்தியாவின் இறையாண்மை கப்பலேறிய நாள்; சில தீவிரவாதிகள் காவி கொடியேந்தி பகிரங்கமாக முஸ்லிம்கள் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கினர். அதற்க்காக கோபம் கொண்டு எந்த ஒரு முஸ்லீமும் எந்த ஒரு கோவிலையும் இடித்து விடவில்லை நங்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் , நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று கொள்வோம் என்று கூறி காத்துக் கிடக்கின்றனர்.

ஆண்டுகள் 16 ஆகிவிட்டது தீர்ப்பு வெளியானபாடில்லை. ஆனால் முக்கிய குற்றவாளியான எல்.கே. அத்வானியோ நாட்டின் பிரதமராவதற்காக வேட்பாளராக நிற்கிறாராம்.இது இந்தியாவின் தலையெழுத்து ! ஆனால் இந்தியாவில் எந்த ஒரு காரணமுமின்றி பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் பாகிஸ்தானில் சில முஸ்லிம்கள் சில இந்துக் கோவில்களைக் கோபம் கொண்டு சேதப்படுத்தினர். பாகிஸ்தான் அரசு அவர்களைக் கைதும் செய்தது.

அந்த கோவில்களை சீரமைக்க வேண்டும் எனக் கூறி சிறுபாண்மை இந்துக்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற அரசு தற்போது லாகூரில் சேதமடைந்த 16 கோவில்களைச் சீரமைக்க ஒத்துக் கொண்டுள்ளது. இந்து கோவில்களை புனரமைக்க 60 லட்சம் ரூபாயை ஒதுக்கிய பாகிஸ்த்தான் அரசு, அதைப் புனரமைக்கும் பொறுப்பை தொல்பொருள் ஆராய்ச்சி துறையிடம் வழங்கியுள்ளது.

உணர்ச்சி வசப்பட்டு கோபத்தால் நடந்த செயலைக்கூட நியாயப்படுத்தாமல் பகிஸ்தான் நீதியுடன் நடந்துள்ளது. ஆனால் இந்தியாவில் இதற்க்கு நேர்மாறான நிலைதான் காணப்படுகிறது. இடித்த இடத்தில் பள்ளிவாசல் கட்டும் உரிமை பாகிஸ்தானைவிட இந்தியாவுக்கு அதிகம் உண்டு. அநியாயமாக அரசு ஆதரவோடு தகர்க்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்கள், போரட்டங்கள் முற்றுக்கை என நடத்தியபோதும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது.

தகர்க்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் ஆட்சியாளர்கள் கட்டித் தரவுமில்லை, அதற்க்கு நிதி ஒதுக்கவுமில்லை, முஸ்லிம்களிடம் அதைக் கட்டிக்கொள்ள அனுமதியும் வழங்கவில்லை. மாறாக அந்தப் பள்ளிவாசல் இருந்த பகுதியில் கோவில் கட்டுவதற்கான பணிகள் தான் நடந்தன.

அதோடு முஸ்லீம்களுக்கு சொந்தமான இடத்தில் கோவிலைக் கட்டுவோம் என்று பி.ஜே.பி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் இது சம்பந்தமாக ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவும் தயராக இல்லை.

குறைந்தபட்சம் மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகள் கூட நாங்கள் ஜெயித்தால் அயோதியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லும் துணிவைக்கூட பெறவில்லை அல்லது விரும்பவில்லை.

பாகிஸ்தான் நமக்கு எதிரி நாடுதான். அந்த நாட்டின் காரணமாக நமக்கு ஏராளமான தலைவலி தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது.ஆனால் பாகிஸ்தான் சிறூபான்மையான இந்துக்களை மதித்து அவர்களைப் பாதுகாக்கும் பாகிஸ்தான் அரசிடம் இந்த விஷயத்தில் இந்தியா பாடம் படிக்க வேண்டும்.

நாஞ்சிலார்
(உணர்வு)

Read more...

திங்கள், 11 மே, 2009

மாணவர்களுக்கான விழிப்புணர்வு செய்தி ?


நீங்கள் பூமியில் பரவி அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்!. திருக்குர்ஆன் 62:10

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் என்ஜினியரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கத் தொடங்கி விட்டனர் அதற்கான முழு விபரத்தை அறிய கீழ்காணும் லிங்கை சொடுக்கிப் பார்வையிடவும்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=485977&disdate=5/6/2009

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தேர்தல் நெருங்கி விட்டதால் தேர்தலுக்கானப் பணியில் மும்முரமாக ஈடுபடும் பிஸியில் பிள்ளைகளின் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விடாதீர்கள்.

இந்த மாத இறுதி 30 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்திருக்கின்றார்கள்.

புறப்படுங்கள் வறுமையை துடைத்தெறிவதற்கு



இன்று உலகம் முழுவதும் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய சமுதாயமாக நாம் இருக்கின்றோம் படித்து விட்டு கை நிறைய சம்பாதிக்க முடியாதக் காரணத்தினால் சில நேரங்களில் விரக்தி அடைந்து தவறான வழியில் பெருளீட்டும் மோசமான நிலைக்கும் தள்ளப்படுகின்றோம் இன்றும் தமிழகத்தில் இறைவன் தடைசெய்த வட்டித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பிரபல முஸ்லீம் ஊர்கள் இருக்கவேச் செய்கின்றன. முறையாகப் படித்து கைநிறைய ஊதியம் பெற்றால் தவறான வழியில் பொருளீட்டும் அவசியம் வரவே வராது.


ஒருவர் தமக்குரிய உரிமைகளைத் தேடும்போது அதை முறையாகத் தேடட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி இக்கின்றார்கள் .புகாரி 2076

இயற்கை வளம் கொழிக்கும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த நாம் முறையாக பொருளீட்ட வேண்டும் என்றால் இரண்டே வழிகள் தான் இருக்கின்றன ஒன்று படித்து விட்டு இந்திய அரசு அதிகாரிகளாக ஊழியம் செய்து கைநிறைய ஊதியம் பெற வேண்டும், அதற்கடுத்து தொழில் துறைகளில் முன்னேற வேண்டும் இவை இரண்டுக்குமே படிப்பு இன்றியமையாததாகும்.

பாஸ்போட் மோகத்தை கை கழுவுங்கள்.
கடந்த காலங்களில் 10, அல்லது 11, 12 வரைப் படித்து விட்டு அயல்நாடு சென்று பிழைப்பு தேடுவதற்காக பாஸ்போர்ட் அப்ளை செய்தோம் இனிவரும் காலங்களில் அதை கை கழுவி விடுவோம்.

காரணம் இன்று நாம் கடுமையாகப் போராடி அரசாங்கத்திடமிருந்து குறைந்த பட்ச இடஒதுக்கீட்டை அடைந்திருக்கின்றோம் இன்னும் தொடர்ந்து முயற்சி செய்து விகிதாச்சார அடிப்படையில் முறையான இடஒதுக்கீட்டை அடைந்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் அதையும் அடைந்து கொள்வதற்காக வல்ல இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம் இறைவன் நிறைவேற்றித் தருவான்.

மேற்காணும் இடஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவதற்கு அதற்கானப் படிப்பும், சான்றிதழும் அவசியம் தேவை என்பதை நாமறிந்து வைத்திருக்கின்றோம் அதனால் மேற்காணும் அண்ணா பால்கலைக்கழக விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உயர் கல்விப் பயிலுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

பிள்ளைகள் அதிகமான மார்க்குகள் எடுப்பதற்கு ஆர்வமூட்டுங்கள் படிப்பிற்கு தடையாக வீட்டில் இருக்கக் கூடிய பொழுது போக்கு அம்சங்களை தடுத்துக் கொள்ளுங்கள். ( நியூஸ், பயான் போன்ற நிகழ்ச்சிகளுக்காக குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்குங்கள் )

விரக்தி அடையாதீர்கள்
சிறு வயதில் சிலப் பிள்ளைகள் விளையாட்டில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள் படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் அதை மட்டும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இவன் மேல்படிப்பில் கோட்டை விட்டு விடுவான் இவனை நம்பி பெரிய தொகையை செலவிட முடியாது என்று ஆரூடம் கூறி பிள்ளைகளுடைய எதிர் காலத்தை தொலைத்து விடாதீர்கள்.

சிலக் குழந்தைகள் சிறு வயதில் அவ்வாறு படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டில் கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பவர்கள் கல்லூரிப் பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்தி சாதனைப் படைக்கக் கூடியவர்களாக மாறி விடுவார்கள் குழந்தைப் பருவத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வாலிபப் பருவத்தை கணிக்காதீர்கள் நமது கணிப்பு எப்பொழுதுமே பிழையானது விதியின் அமைப்பே உறுதியானது.

ஏழ்மை தடை இல்லை
நாம் ஏழையாக இருக்கின்றோம் நம்முடையப் பிள்ளகளை அதிக செலவு செய்து படிக்க வைக்க இயலாது என்றெண்ணி விரக்தி அடைந்து மேல்படிப்புக்கான முயற்சியை கை விட்டு விடாதீர்கள்.

அதேப் போன்று நமது பெற்றொர் ஏழையாக இருக்கின்றனர் அதனால் நாம் விரும்புகின்ற துறையில் படித்து முன்னேற முடியாது என்றெண்ணி மானவர்கர்கள் விரக்தி அடைந்து விடாதீர்கள்.

நாம் விரும்புகின்ற துறையில் படித்து முன்னேற முடியும் என்ற வேட்கை ஒவ்வொரு மானவனுக்கும் வரவேண்டும் அவ்வாறு வந்து விட்டாலேப் போதும் அதற்கு பெருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதற்கு சமீபத்தில் ஏழை தாய் தகப்பனுக்குப் பிறந்து ஐ.ஏ.எஸ் ஸில் தேர்வு எழுதி வென்ற வீரபாண்டியன் அவர்களின் விடா முயற்சி ஒருப் பெரிய எடுத்துக் காட்டாகும். நல்வழியில் முன்னேற வேண்டும் என்று நினைத்த எவரும் சருக்கியதாக வரலாறேக் கிடையாது.

மார்க்க அறிவுக்கும் தடை இல்லை.
எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்காக முழு நேரத்தையும் செலவிடுவதால் மார்க்க கல்விப் பயில முடியாத நிலை எற்படுமே என்றெண்ணி அஞ்ச வேண்டாம் எந்த நிலையிலும் அதனால் பின்னடைவு ஏற்படாது.

எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில் நுட்ப கல்வி கற்பதற்காக முழு நேரத்தை செலவிட்டாலும் தொழச் செல்வதற்கு எந்த கல்லூரியிலும் தடை கிடையாது, அவ்வாறு தடைவிதிக்கப் பட்டாலும் கிளாஸ் நடக்கும் வரை தான் தடுக்க முடியும், கிளாஸ் முடிந்தப் பிறகு அதற்கு முன் லஞ்ச் டயம் போன்ற இடைவேளையின் போது முஸ்லீம் மானவர்கள் இணைந்து ஜமாத்தாக தொழுது கொள்ள முடியும், விடுமுறை நாட்களில் மார்க்க அறிவை தேடிக் கொள்ள முடியும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

''அன்றைய மக்கள் கொடுக்கல், வாங்கலும் வியாபாரமும் செய்து வந்தார்கள். ஆயினும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய ஒரு கடமை அவர்கள் முன்னே வரும்போது அதை நிறைவேற்றி முடிக்கும் வரை அவர்களின் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அவர்களை திசை திருப்பவில்லை!'' என்று கதாதா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். புகாரி 2059

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் மாணவரணி உருவாக்கப்பட்டு அவர்கள் மாணவர்களிடத்தில் சென்று கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதுடன் கல்லூரி விடுதிகளில் சென்று பயான் செய்யவும் செய்கின்றனர். மேற்காணும் அரும் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும், அதிகபட்சம் பட்டதாரிகளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tntj.net/Adds/Advt_ManaverAni_Porgram_12-4-2009.asp

http://tntj.net/Adds/Advt_ManaverAni_Porgram_Nagoor_Valuthoor_Karaikkal_Kovai_Aanaimalai_Maduravayal.asp

http://tntj.net/Event/Sivagangai/Ilyangudi_Kelvi_Mugam_8-2-2009.asp

http://www.tntj.net/Event/Krishnagiri/Kelvi_Mugam_12-4-2009.asp

வேலை செய்து கொண்டு, அல்லது படித்துக் கொண்டே அவர்களது ஓய்வு நேரங்களில் இந்த மனிதாபிமான சேவையை இளைய தலைமுறை மானவர்களுக்காக செய்து வருகின்றனர்.

5:119... அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

மார்க்கம் பயிலுவதற்கும் அதைப் பரப்புவதுதற்கும் மருத்துவம், எஞ்சினியரிங் போன்ற தொழில் நுட்பக் கல்விப் பயிலுவது எந்த வகையிலும் தடையாக இருக்காது,

அதனால் தேர்தல் நெருங்கி விட்டதால் தேர்தலுக்கானப் பணியில் மும்முரமாக ஈடுபடும் பிஸியில் பிள்ளைகளின் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விடாதீர்கள்.

இந்த மாத இறுதி 30 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்திருப்பதால் காலதாமதம் செய்யாமல் பிள்ளைகளை உயர் கல்விப் பயில கல்லூரிகளில் சேர்ப்பதற்கு தயாராகுங்கள். இல்லை என்றால் இடஒதுக்கீடுப் பெற்று அரத்தமில்லாமல் போய்விடும்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Read more...

சனி, 9 மே, 2009


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள தேர்தல் நோட்டிஸுகள்:




1. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக..
Page-1
Page-2

2. தமுமுக அன்று சொன்னது என்ன?
Page-1
Page-2

3. திமுக வை ஏன் ஆதரிக்க வேண்டும்?
Page-1
Page-2

4. மமக என்ற தமுமுக விற்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?
Page-1
Page-2
Page-3
Page-4

Read more...

சந்தனமாக்கப் போனது சாக்கடையானது!



அரசியலை சந்தனம் ஆக்கப்புறப்பட்டோர் வெகுவிரைவிலேயே சாக்கடையானதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.
மானம் காக்க புறப்பட்ட மம கட்சி மானம் இழந்து நிற்கும் காட்சி



தினமணி (9-5-2009) பத்திரிக்கையில் வெளியான செய்தி




ஏகத்துவம் வேடம் போடும் இவரை இனி ஏகத்துவ வாதிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளுவார்கள்

Read more...

செவ்வாய், 5 மே, 2009

Align Center

தங்கள் ஊர்களில் தேர்தல் பிரசாரத்திற்காக விநியோகிக்க வேண்டிய துண்டு பிரசுரங்கள்

Click here to download Page 1

Click here to download Page 2

நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான பி.ஜே அவர்களின் பேட்டி

முழு விபரம் >>

நேர்காணல் என்ற போர்வையில் அரங்கேறிய நாடகம் !

(இரண்டாம் பாகம்)

சுனாமி திருடர்கள்
"அடுத்ததாக உங்களுக்கு சுனாமி திருடர்கள் என்ற ஒரு பெயர் உள்ளதே ! " என்று கேள்வி கேட்க திருடியவந்தான் திருடன் திருடன் என்று கத்துவான். நாங்கள் மக்கள் மன்றத்தில் கண்க்குகளை படம் ஒட்டிக் காண்பித்துவிட்டோம் என்று 'படம் ' காட்டினார்.
மொத்த வரவு 68 லட்சம் செலவு 33 லட்சம் மீதி இருப்புத் தொகை 35 லட்சம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூலிக்கப்பட்ட தொகையில் 35 லட்சம் ரூபாயை செலவழிக்காமல் நீங்கள் இருப்பு வைக்க அதிகாரம் கொடுத்தது
யார் ? மீதி இருந்த 35 லட்சத்தை என்ன செய்தீர்கள் ? இதுவரை கணக்கு காட்டினீர்களா ? ( ஏற்கெனவே காட்டியது போன்று கள்ளக் கணக்காவது காட்டியிருக்கணுமா ? இல்லையா ?
பேரிடர் பாதுகாப்பு மையம் கட்டப் போகிறார்களாம் ! ஒரு திறந்த பொட்டல் வெளியில் ஒரு பெரிய தகரத்தை ஊன்றி திறந்து வைத்துவிட்டு 35 லட்சம் தீர்ந்து போய் விட்டது என்பது தான் நீங்கள் காட்டும் கணக்கா ?
மாறாக டி.என்.டி.ஜேவை திருடன் என்று சொல்கிறீர்களே.... டி.என்.டி.ஜே வை விமர்சனம் செய்யும் அத்தனை இயக்கங்களையும் பட்டியல் போட்டு அவர்களது அவர்களது விசாரனைக்குத் தயார் என டி.என்.டி.ஜே மற்றும் தமுமுக சுனாமி மற்றும் ஃபித்ரா வசூலை விசாரனை செய்ய முன் வந்தார்களே, நீங்கள் ஏன் ஓடி ஒளிந்தீர்கள் ?
டி.என்.டி.ஜே சுனாமியில் திருடியிருந்தால் நீங்கள் நிருபிக்க சரியான வாய்ப்பாக அது அமைந்ததே ! ஏன் முன் வரவில்லை ? ஏனெனில் நீங்கள் தான் திருடர்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
தனது தணித்தன்மையை பறைசாற்றிய டி.என்.டி.ஜே சுனாமி வரவு செலவை பகிரங்கமாக ' உணர்வு ' இதழில் வெளியிட்டது.
மொத்த வரவு 75,98,385 செலவு 75,98,385 மீத இருப்பு 00,00,000 என்று கணக்கை வெலியிட்டு தனது தூய்மையை நிருபித்தது. இனிமேல் வரவிருக்கும் சுனாமிக்கு இப்போதே பேரிடர் பாதுகாப்பு மையம் அமைக்க போகிறோம் என்று டி.என்.டி.ஜே சீன் காட்டவில்லை. இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் பெரும் பணத்தை திருடிவிட்டு திருடன் திருடன் ! என்ற சப்தம் போடாமல் கமுக்கமாக செல்லும் சுனாமி திருடர்கள் நீங்கள் தான் என்பதை நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் !
ஃப்த்ரா வசூலில் நீங்கள் திருடியதையும் குற்றச்சாட்டாக வைத்தோமே அதை பற்றி வாய் திறக்காதது ஏன் ?

கடைந்ந்தெடுத்த சந்தர்ப்பவாதம்

திமுக மணல் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று தற்போது அவர்களது துண்டு பிரசுரங்களிலும், இனையத்தளத்திலும் பாலம் கட்டுவதில் ஊழல், சாலை போடுவதில் மோசடி, அனைத்து காண்ட்ராக்ட்களிலும் 14 சதவிகிதம் லஞ்சம் என்று திமுகவினர் மீது குற்றம் சாட்டும் இவர்கள் இத்தனை காலமாக நீங்கள் கூட்டனியில் தானே இருந்தீர்கள் அப்போது சொல்லாமல் இப்போது ஏன் சொல்கின்றீர்கள் என்ற நியாயமான கேள்விக்கு இவர்கள் வைத்திருக்கும் ரெடிமேட் பதிலையும் அந்த நேர்காணல் நாடகத்தில் அவிழ்த்துவிட்டார்.
"மணலை கொள்ளையடிக்கிறார்களே இதுவெல்லாம் தவறு என்று ஸ்டாலினிடம் நான் நேரிலேயெ தெரிவித்துள்ளேன். வீரபாண்டி வீட்டில் போய் தெரிவித்துள்ளேன் " என்று கேட்பவர்கள் காதில் பூ சுற்றுகிறார். இதை ஏன் இப்போது வெளியில் சொல்கிறார்கள் தெரியுமா ? இதை ஏன் தற்போது மேடைகளில் பேசுகிறார்கள் தெரியுமா ? இதை ஏன் தற்போது இனையத்தளதில் போடுகிறார்கள் தெரியுமா ? இவர்கள் கேட்ட இரண்டு எம்.பி சீட் எலும்புத் துண்டு போடாததால்தான்.
இந்த இரண்டு சீட் எலும்பு துண்டை திமுகவினர் இவர்களுக்கு வீசி இருந்தால் இந்த குற்றச்சாட்டுக்ளை எல்லாம் ஸ்டாலினிடமும், வீரபாண்டி ஆறுமுகத்திடமும் காதில் போய் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
ஒருவேளை அதிமுக கூட்டனியில் இவர்களுக்கு சீட் ஒதுக்கி இடம் கொடுத்திருந்தால் தேர்தலுக்கு பிறகு அதிமுக பி.ஜே.பி யை ஆதரிக்கும்போது கேட்டால் ஜெயலிதாவிடம் நேரில் சொல்லிவிட்டேன் என்று ரெடிமேட் பதிலை அப்போதும் அவிழ்த்துவிடுவார்கள். இது எவ்வளவு பெரிய கடைந்தேடுத்த சந்தர்ப்பவாதம் என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வாரியப் பதவியில் ராஜினாமா செய்தது தியாகமா ?

அந்த நேர்காணலில் வாரியப் பதவியை ராஜினாம செய்தது பெரிய தியாகம்போல அதை ஹைதர் அலி சித்தரித்தார்.
அது தியாகமல்ல என்பதையும் அவரே விளக்கிவிட்டார். கலைஞர் பி.ஜே.பி யுடன் கூட்டனி வைத்தபோது அப்போது வக்ஃப்பு வாரியத் தலைவராக இருந்த லத்தீப் அவர்கள் வக்ஃப்பு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லையாம்.
உடனே அவர்மீது வீண் பழி சுமத்தி கலைஞர் வக்ஃப்பு வாரியத் தலைவர் பதவியை பிடுங்கினாராம். அதுபோல தனக்கு நேர்வதற்க்கு முன்னால் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் என்றுதான் தனது பதவியை ராஜினாமா செய்ததற்க்கான காரணத்தை ஹைதர் அலி தெளிவுபடுத்தினார்.
தன் பதவியை பிடுங்கி விடுவார் என்பதை தெரிந்து கொண்டு பதவியை பறிப்பதற்க்கு முன்னரே பதவியை துறப்பதுபோல் ராஜினாமா நாடகம் ஆடி அதை தற்போது தியாகம் என்று சொல்வதும் பதவியை துச்சமாக மதித்து தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறோம் என்பது மக்களை மடையர்களாக்கும் செயல்.
நீங்கள் தூக்கி எறியாவிட்டால் அவர்கள் உங்களை தூக்கி எறிந்திருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை! இப்படி செய்தது தியாகமல்ல ! ஒரு நல்ல நரித்தனம்.

வெளிச்சத்திற்க்கு வந்த உண்மைகள்

ஆகமொத்தத்தில் நேர்காணல் என்ற போர்வையில் இவர்கள் நடத்திய நாடகத்தின் எண்ணற்ற உண்மைகள் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளன. கடந்த தேர்தலில் இவர்கள் நிறுத்தச் சொன்ன நபரை வேட்பாளராக நிறுத்தாததால் தான் முஸ்லீம் லீக்கிற்க்கு கிடைத்த பாளையங்கோட்டை பறிபோனது. அதற்க்கு நாங்கள் தான் காரணம் என்பதும் கடந்த தேர்தலில் திமுகாவை ஆதரிக்க வக்ஃப்பு வாரியத் தலைவர் பதவியை பேரம் பேசிவிட்டுதான் ஆதரித்தோம் என்ற உண்மையும் இவ்வளவு நாள் பாக்கர் எதிரணியில் இருந்தபோதும் எனக்கும் அவருக்கும் சுமூகமான (கள்ள) உறவு இருந்து வந்தது என்று ஹைதர் அலி கூறியதும், இப்போது இவர்கள் செய்த அத்தனை அட்டூழியங்களையும் இந்த பொய்யன் டி.ஜே ஆமோதிக்கின்றது என்ற உண்மயை வெளிவந்துள்ளது. அல்லாஹ் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.


-- அபூ நஸ்ரின், மதுரை

Read more...

திங்கள், 4 மே, 2009



ஏக இறைவனின் திருப்பெயரால்....
மார்க்கம் நலன் நாடுகிறது, யாருக்காக? என நாங்கள் வினவினோம், அப்போது நபியவர்கள், அல்லாஹ்விற்காகவும், அவனது வேதத்திற்காகவும், அவனது தூதருக்காகவும், முஸ்லிம் தலைவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் என்று நபி(ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள்.
அறிவிப்பாளர்: தமீமுத்தாரீ நூல்: முஸ்லிம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
தேர்தல் நெருங்கி விட்டது ஒவ்வொரு ஜனநாயக நாட்டின் குடிமகனுக்கும் வாக்களித்து ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு.

அதனடிப்படையில் இந்திய முஸ்லீம்களாகிய நமக்கும் இந்தியப் பெருநாட்டின் ஆட்சியாளர்களை வாக்களித்துத் தேர்வு செய்யும் உரிமை உண்டு அதனால் நாம் ஒவ்வொருவரும் பன்முகத் தன்மைக் கொண்ட இந்தியப் பெருநாட்டை ஓரளவுக்காவது நடுநிலைத் தன்மையுடன் ஆளக் கூடிய ஆட்சியாளரை இன்ஷா அல்லாஹ் வாக்களித்து அமரச் செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செய்லபடுவோம்.

நாமே நின்று ஏன் வெற்றி பெறக் கூடாது ?

நாமே வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாவதை மார்க்கம் தடை செய்ய வில்லை.

ஆனால் சிறுபான்மை சமுதாயமாகிய நம்மால் தனித்து நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆக முடியாதவாறு நமக்கு ஏற்கனவே ஒதுக்கப் பட்டிருந்த ரிசர்வ் தொகுதி முறை பறிக்கப்பட்டு விட்டது அதனால் நம்மால் தனித்து நி;ன்று வெற்றிப்பெற்று சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக முடியாது.

இந்தியாவின் பெரும்பாண்மை சமுதாயமாகிய ஹிந்து மக்களே மேற்காணும் பொறுப்புகளில் வர வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டி சிறுபான்மை முஸ்லீம்களுக்கான ரிசர்வ் தொகுதி முறையை ரத்து செய்து விட்டனர்.

அதனால் மேற்காணும் தனித்து நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராகும் திட்டத்தை மீண்டும் ரிசர்வ் தொதியைப்போராடிப் பெறும் வரை கை விட்டு விட வேண்டும். அதுவரை நமது வாக்குகளை சிதற விடக்கூடாது.

பெரும்பாண்மை சமுதாயமாகிய ஹிந்து மக்களே மேற்காணும் பொறுப்புகளில் வரமுடியும் என்ற நிலை இருப்பதால் அவர்களில் எந்த ஆட்சியாளர் சிறுபான்மை சமுதாயமாகிய நமக்கு வாழ்வாதார வசதிகளை ஓரளவாவது செய்து கொடுக்கின்றார்களோ, அவர்களுக்கு நம்முடைய வாக்குகளை அளித்து ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும், எந்த ஆட்சியாளர் நமது வாக்குகளைப பெற்றுக் கொண்டு நமக்கு வாழ்வாதார வசதிகளை செய்து தர மறுக்கின்றனரோ அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர விடாத அளவுக்கு நம்முடைய வாக்குகளை எதிரணிக்குப் செலுத்தி அவர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும்.

இதல்லாமல் வேறு எந்த வழியை தேர்வு செய்தாலும் நம்முடைய வாக்குகள் சிதறி நமக்குப் பெரும் பிண்ணடைவை ஏற்படுத்தும்.

இன உணர்வைத் தூண்டி ஆதாயம் அடைய நிணைக்கும் வேட்பாளர்கள்.

ரிசர்வ் தொகுதி போனால் என்ன வெற்றிப்பெறும் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர்கள் மூலமாக சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் n;சன்று சமுதாயத்திற்காக குரல் எழுப்பலாமே என்ற இஉ உணர்வைத் தூண்டி சில வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள்.

சமுதாய உணர்வைத் தூண்டிவிட்டு உள்ளே செல்ல நிணைப்பவர்கள் தங்களுக்கிரும் பதவி ஆசையினால் அவ்வாறு ஆசைவார்ததைக் காட்டுவார்கள் ஆனால் அது சாத்தியப் படாது என்பது அவர்களுக்கேதெரியும்.

கூட்டணிக் கட்சிக் காரர்கள் ஒரு சீட்டை மட்டும் காட்டி மொத்த சமுதாய ஓட்டு;க்களை அறுவடை செய்வார்கள் அதனால் அவர் ஒருவர் மட்டும் உறுப்பினராகி பயன் பெறுவார் அதனால் மொத்த சமுதாயத்திற்கு ' 0 ' தான் பலனாக அமையும் காரணம் இவர் தன்னுடைய விருப்பத்திற்கு கூட்டணிக் கட்சி தலைவரிடம் அனுமதிப் பெறாமல் எதையும் பேச முடியாது, அவ்வாறுப் பேசினாலும் ஒன்றிரெண்டுப் பேர் என்பதால் முதல்வர் மற்றும் அவை உறுப்பினர்களுடைய கவனம் அதனால் ஈர்க்கப்படாது.

இதையும் மீறி ஒரு முஸ்லீம் நிற்கின்றார் என்று இன உணர்வின் அடிப்படையில் வாக்களித்தால் அந்த வாக்குகள் சிதறும் அதன் பிறகு நம்முடைய சமுதாயத்திற்கு நன்மை செய்த ஆட்சியாளரை நமது ஓட்டுகளைக் கொண்டு வெற்றி பெறச் செய்ய முடியாத நிலை எற்படும்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் அவர்களது தொகுதியில் எந்த சமுதாய மக்களிடத்திலிருந்து எத்தனை எத்தனை சதவிகிதம் ஓட்டுக்;கள் கிடைத்தது என்று துல்லியமாகத் தெரியும் அதனால் அவரிடமிருந்து மீண்டும் நமக்குத் தேவையான சலுகைகளை கேட்டுப் பெற முடியாத நிலை ஏற்படும் .

அதனால் இன உணர்வின் அடிப்படையில் வாக்களிக்க முயற்சிக்காதீர்கள்,

இரத்தத்தில் ஊறிப் போனக் கட்சி என்று நினைத்தும் வாக்களித்து வாக்குகளை சிதறச் செய்யாதீர்கள்,
சிறுபான்மை சமுதாயமாகிய நமக்கு எந்த ஆட்சியாளர் வாழ்வாதார வசதிகள் செய்து கொடுத்தார்களோ, நமது கோரிக்கையை ஓரளவாவது ஏற்று நடைமுறைப் படுத்தினாரோ அவருக்கு வாக்களித்து அவரை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

இன உணர்வைத்தூண்டி பதவி சுகம் அனுபவிக்கத் துடிக்கும் மமக.

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் மீது தனிப்பட்ட ஆசைக்கொண்டு புறப்பட்டிருக்கும் மமக சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் சென்று குரலெழுப்பினால் தான் முஸ்லீம் சமுதாயத்திற்கு சலுகைகளைப் பெறமுடியும் என்றுக் கூறுகின்றார்கள்.

தனித்து நின்று, தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, தனிப் பெரும்பான்மையுடன் சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் செல்ல முடியாது என்று அவர்களுக்கேத் தெரியும் அதற்காகத் தான் இந்த முறை அவர்கள் கூட்டணிக்காக ஏறி இறங்காத கட்சித் தலைவர்கள் வீடே இல்லை என்று சொல்லலாம் .

நாம் அவர்களிடம் கேட்போம்.

சமீபத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு தமிழக சட்டமன்றத்தில் எத்தனை முஸ்லீம் எம்.எல்.ஏக்கள் குரலெழுப்பிக் கிடைத்தது ? இதற்கு அவர்களிடத்தில் பதில் உண்டா ? எம்.பி பதவி ஆசையைத் தவிற இன உணர்வைத் தூண்டி ஓட்டு வேட்டையாட இருப்பதற்கு வேறு என்னக் காரணம் அவiர்களிடம் இருக்கு முடியும். ?

பதவி சுகத்திற்காக இரட்டை வேடமிடும் மமக.

முஸ்லீம் சமுதாயத்திற்கு குரலெழுப்புவதற்காக மட்டுமே மமக உருவாக்கப்பட்டதென்றால் அதிலாவது அவர்களிடத்தில் உறுதி இருக்கிறதா ? என்றால் அதுவும் இல்லை !

முஸ்லீம்களை சந்திக்கும் பொழுது நம்முடைய சமுதாயத்திற்காக, அவர்களுடைய கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக, அவர்களைப் பொருளாதாரத்தில் முன்N;னற்றி விடுவதற்காக, அவர்களுடைய வறுமையை துடைத்தெறிவதற்காக புறப்பட்டிருக்கி;ன்றோம் என்றுக் கூறுவார்கள்.

மற்ற சமுதாயத்து மக்களை சந்திக்கும் பொழுது அனைத்து சமுதாய மக்களுடைய கல்வி அறிறை, மேம்படுத்துவதற்காக, அவர்களைப் பொருளாதாரத்தில் முன்N;னற்றி விடுவதற்காக, அவர்களுடைய வறுமையை துடைத்தெறிவதற்காக புறப்பட்டிருக்கி;ன்றோம் என்றுக் கூறி பல்டி அடிப்பார்கள்.

முஸ்லீம்கள் மட்டும் ஓட்டுப் போடுவதினால் மட்டும் வெற்றிப் பெற முடியாது என்று அவர்கள் நன்றாக அறிந்திருந்தக் காரணத்தால் ஆரம்பத்திலேயே அவர்களுடைய அமைப்பிற்கு வித்தியாசமாக '' மனித நேய மக்கள் கட்சி '' என்று பொதுவானப் பெயரைச் சூட்டி கட்சிப் பெயரில் கூட முஸ்லீம் என்ற வார்த்தை வராமல் புத்திசாலித் தனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

நாம் இதை கற்பனையாக எழுத வில்லை கீழேப் படியுங்கள் மமக உருவாக்கப்பட்டது முஸ்லீம் சமுதாயத்தை மேம்படுத்தவா ? அல்லது மமக நிர்வாகிகளை மேம்படுத்தவா ? என்பதை விளங்கிக் கொள்வீர்கள்.

அனைத்து சமுதாய மக்களுக்கும் வட்டி இல்லாமல் கல்விஇ மருத்துவ கடன்வசதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வாக்குறுதி

ராமநாதபுரம் ஏப்.15-

தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து சமுதாய மக்களுக்கும் வட்டி இல்லாமல் கல்விஇ மருத்துவ கடன் வசதி செய்து தரப்படும் என்று ராமநாதபுரம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.

வேட்பாளர்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக சலீமுல்லாகான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் த.மு.மு.க.வின் மாவட்ட செயலாளராக உள்ளார். த.மு.மு.க. மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்விஇ சமூக சேவைஇ அம்புலன்சு வசதி மற்றும் ரத்ததான முகாம் நடத்தி வருகிறார். அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது -

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய இயக்கமாக விளங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய தேவையான அனைத்து திட்டங்களையும் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற பாடுபடுவேன். ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமான வைகை தண்ணீர் முறையாக வந்து சேர வைகை ஆற்று பகுதியில் சிமெண்டு கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

நீர்த்தேக்கம்
வெள்ளக் காலங்களில் வைகையில் இருந்து கடலுக்கு சென்று வீணாகும் தண்ணீரை தேக்கி வைக்க ராமநாதபுரம் பெரிய கண்மாய் மற்றும் சக்கரக்கோட்டை கண்மாய்களை ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்ற அரசிடம் வலியுறுத்துவேன். இதேபோல ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை சீரமைக்கவும்இ திருச்சுழி பகுதியில் கிருதுமால் நதி திட்டத்தை செயல்படுத்தவும் பாடுபடுவேன். ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலில் நிம்மதியாக மீன்பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். மாவட்டத்தில் தொழில் வளம் வேலைவாய்ப்பு பெரு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

கல்விகடன்
தொகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு கல்விக்கடன் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் மருத்துவ கடன் வட்டி இல்லாமல் வழங்க மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினத்தந்தி

இதைப் படித்தப் பிறகும் கூட யாராவது ஒருவர் மமக அமைப்பை முஸ்லீம் சமுதாயத்திற்கு மட்டும் குரல் கொடுக்கும் அமைப்பு என்று எண்ணி தங்களை பிறருடன் தேவை இல்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுத்தவோ, தங்களுடைய வலிமை வாய்ந்த வாக்குகளை அவர்களுக்காக இன உணர்வின் அடிப்படையில் இட்டு வீணடிக்கவோ விரும்ப மாட்டார்கள்.

மேற்காணும் அவர்களுடைய திட்டங்களை விட பலமடங்கு கவர்ச்சிசகரமான திட்டங்களுடன் மற்ற சமுதாயத்து வேட்பாளர்கள் அறிவிக்கின்றார்கள்.

இவர்கள் சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் சென்றால் ஒருக்காலும் முஸ்லீம்களுடைய கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக குரல் எழுப்பவே மாட்டார்கள் கூட்டணி கட்சிக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு தங்களது பதவியை தக்கவைத்துக் கொள்வார்கள் என்பதற்கு இன்னும் அவர்களுடைய கடந்த கால சமுதாய தொண்டினை (?) அலசி ஆராய வேண்டியதும் அவர்களை தேர்ந்தெடுக்க நினைக்கும் முஸ்லீமகளுக்கு அவசியமாகும்.

மூதறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் சமீபத்தில் மன்னடியில் பேசிய உரையை டவுன் லோடு செய்து கேளுங்கள்.

http://tntj.net/Video/Mannady_PJ_Speech_19-4-2009_whyDMK.asp

இதற்கு என்ன தான் தீர்வு ?

ரிசர்வ தொகுதியைப் போராடிப் பெறும் வரை ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் முஸ்லீம்கள் ஓரணியில் திரண்டு குறிப்பிட்ட ஒருக் கட்சியை ஆதரித்தால் அவர்களை வெற்றி பெறச் செய்ய முடியும், அதேப் போன்று குறிப்பிட்ட ஒருக் கட்சியை தோற்கடிக்க முடியும். முதலில் இந்த மனநிலைக்கு முஸ்லீம்களை மாற்றியாக வேண்டும் அதுவரை சட்டமன்ற, பாராளு மன்றக் கணவுகளைக் களைய வேண்டும், மீறி ஆசைப்படுகின்றவர்களை ஃபீல்டிலிருந்தே துடைத்தெறிய வேண்டும் இவர்களை ஓரம் கட்டினால் மட்டுமே மக்களை ஓரணியில் கொண்டுவர முடியம்.

மேற்காணும் இந்த மெகா திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முறையாக மார்க்கம் பேசும் இளைஞர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

அவர்களைக் கொண்டே சடைவடையாமல் தொடர்நது நடத்திய தொடர் முழக்கப் போராட்டங்களாலும், பிரமிக்கத் தக்கப் பேரணிகளாலும் சமீபத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீடும் கிடைக்கப்பெற்றது, எதிர் காலத்தில் அதை இரட்டிப்பாக்குவதற்காகவும் இன்றே அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அடித்தளம் இடப்பட்டு விட்டது அதையும் இன்ஷா அல்லாஹ் கடந்த காலத்தினைப் போன்றே தொய்வில்லாத போராட்டங்கள் மூலம் அடையாமல் ஓயமாட்டோம்.

அதனால் தமிழ்நாடு தவஹ்த் ஜமாஅத் வீதியில் இறங்கி போராட்டம் செய்து வைத்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த திமுகவிற்கு நம்முடைய வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் செலுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது ஒவ்வொரு முஸ்லீமுயைட கடமையாகும்.

மக்களை வற்புருத்தலாமா ? நீங்கள் அரசியல் பண்ணலாமா ?

திமுகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று மக்களை வற்புருத்தலாமா ?

அது அவர்வர்களுடைய விருப்பமில்லையா ?

இதை வலுக்கட்டாயமாகத் திணிக்கலாமா என்றெல்லாம் நினைக்கலாம்,

மார்க்கம் நலன் நாடுகிறது, யாருக்காக ? என நாங்கள் வினவினோம், அப்போது நபியவர்கள், அல்லாஹ்விற்காகவும், அவனது வேதத்திற்காகவும், அவனது தூதருக்காகவும், முஸ்லிம் தலைவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் என்று நபி(ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள். அறிவிப்பாளர்: தமீமுத்தாரீ நூல்: முஸ்லிம்

மேற்காணும் விதமாக சமுதாயப் பணிகள் செய்வதற்கு மார்க்கம் தூண்டுகிறது நன்மையை ஏவினால் மட்டும் அழைப்புப்பணி பூரணமாகியதாக கருதப்படாது, தீமையிலிருந்து தடுப்பதும், நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு ஆலோசனை வழங்குவதுமே அழைப்புப் பணியின் முழுமையான சேவையாக கருதப் படும்.

சுதந்திரம் அடைந்த அரை நூற்றாண்டு காலமாக அரசியல் நடத்திய முஸ்லீம் லீக்கினால் சமுதாயத்திற்கு சாதிக்க முடியாததை,

முஸ்லீம் சமுதாயத்தைக் கொண்டு ராதாஸை அரியனையில் அமர்த்தி அழகுப் பார்த்து அரசியல் செய்த ஜிஹாத் கமிட்டியால் சமுதாயத்திற்கு சாதிக்க முடியாததை,

எந்தக் கட்சியுடனும் கூட்டு சேர்ந்து அரசியல் பண்ணாமல் வீதியில் இறங்கிப் போராடி இடஓதுக்கீடு, இன்னும் பல தேவைகளை சமுதாயத்தி;றகு பெற்றுக் கொடுத்து சாதனைப் படைத்தது தவ்ஹீத் ஜமாத்.

அது மட்டுமல்லாமல்

இன்ன கட்சிக்கு வாக்களிப்பது இரத்தத்தில் ஊறிப் போனது என்றிருந்த முஸ்லீம் சமுதாய மக்களின் பழக்கத்தை உடைத்தெறிந்து நமக்கு நல்லது செய்யும் கடசியை மட்டும் ஆதரித்து வாக்களிக்கும் மனநிலையை மாற்றியமைத்ததும் தவ்ஹீத் ஜமாத் தான்.

அதனால் கடந்த குடந்தை மாநாட்டில் வைக்கப்பட்ட தீர்மாணத்தையும், அதை நிறைவேற்றினால் அதற்கு பிரதிபலனாக நமது வாக்குகளை வழங்குவது என்ற வாக்குறுதியின் அடிப்படையிலும் சமுதாய மக்களுடைய வாக்குகளை சிதறடிக்காமல் வழங்;கத் தூண்டுவது நிர்பந்திப்பதாகாது.

ஆட்சியாளர்கள் நமது கோரிக்கையை நிறைவேற்றினார்கள்.

நாம் நமது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு கடமைப் பட்டுள்ளோம்.

மாறு செய்தால் வாக்குறுதி மீறியப் பாவத்துக்காக மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.

...தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.2:177

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Read more...

ஞாயிறு, 3 மே, 2009

வாசகர்கள் பயன் பெறுவதற்காக நமது இனையதளதில் புதிய வசதி தினமும் Update செய்யப்படும் நமது இனையதில் பல விடியோ அடியோ மற்றும் இஸ்லாமிய கட்டுரைகளை டவுன்லோட் செய்துகொள்ளலாம் Click Here to Visit


இவர்களுக்கா உங்கள் ஆதரவு ?

அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரின் மீதும் அந்த ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்டும் நிலவட்டுமாக.

மே 13 நமது தமிழகத்துக்காண நாடாளுமண்ற தேர்தல் தேதி என்று தேர்தல் ஆனையத்தினால் நிர்னையிக்கப்பட்ட தேதி.

இந்நிலையில் ஒரு ஒரு சமுதாய மக்களும் தங்களுக்கு யார் சரியான வேட்பாளர்கள் என்று முடிவேடுக்க துவங்கி விட்டனர்.

நமது இஸ்லாமிய சமுதாயத்தை பொறுத்தவரை இரண்டு கட்சிகள் போட்டியிடுகின்றனர் அதில் ஒன்று முஸ்லீம் லீக் மற்றோண்டு தங்களை சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று கூறிக்கொள்ளும் தமுமுக (ம.ம.க).

நம் சமுதாய மக்களை பொறுத்தவரை முஸ்லீம் வேட்பாளர் என்று மட்டும் பார்த்து வாக்களிக்க முன்வருபவர்கள் பலர் உள்ளனர். இதனை குறை சொல்லவில்லை நமது சமுதாயத்தின் ஒரு ஒரு தனி மனிதனின் ஆசையும் ஆதங்கமும் தான் நமக்கேன்று ஒரு வழுவான அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் வேண்டும் என்பது.

அப்படிப்பட்ட ஆதங்கத்தில் தான் முஸ்லீம்களில் பலர் மனித நேய மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளனர்.மாறாக இவர்கள் பொறுப்பில் வந்தால் நமது சமுதாயத்திற்க்கு ஏதேனும் பயண் உள்ளதா அல்லது நமக்கு இவர்களால் பிரச்சனை தான என்பதை யாரும் சிந்திப்பதிலை.

எல்லாவற்றிக்கும் மேலாக இஸ்லாம் தலைவர்களை தேர்ந்தேடுப்பதில் என்ன கூறியுள்ளது என்பதையும் யாரும் யோசிப்பதில்லை.

தகுதியற்றவரை பொறுப்பில் அமர்த்துவது மறுமை நாளின் அடையாளமாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நாம் நாடு என்று இப்போழுது யோசிக்க வேண்டாம் இஸ்லாமிய அடிப்படையிலும் சமுதாய அடிப்படையிலும் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக நாம் முஸ்லீம் லீக்கை எடுத்துக் கொள்வோம் இவர்களும் நம் சமுதாயத்தை முன்னேற்றப் போகின்றோம் என்று முழக்கமிட்டு அரசியலில் களம் கண்டவர்கள் தான். ஆனால் இவர்களின் நிலையை இன்று நமது சமுதாயமே புரிந்து இவர்களை ஒதுக்கி வைத்திருப்பதை நாமே கண்கூடாக பார்கின்றோம். இருந்தாலும் இவர்கள் செய்து வரும் இஸ்லாமிய மற்றும் சமுதாய விரோத போக்கை இங்கு குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளேன்.

இவர்கள் அரசியளுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்பதை கீழே கொடுத்துள்ள படத்தை பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள்.








  • அல்லாஹ்வை மட்டும் பணிய வேண்டிய சிணம் அற்ப மனிதனுக்கு பணிகிறது...

  • அரசியல் ஆதாயத்திற்காக அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் மறந்து சமியாரை கைக் கூப்பி வணங்கும் இவருக்கா உங்கள் ஓட்டு ?

  • அடுத்ததாக காட்டப்பட்டுள்ள படத்திற்க்கு விமர்சனம் ஏதும் தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.
இன்னும் இவர்களைப் பற்றி கூற வேண்டும் என்றால் பல விஷயங்களை கூறலாம். மத்தியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு இன்னும் கிடைக்கவில்லை, குஜராத்தில் நமது முஸ்லீம் சமுதாயத்திற்க்கு எதிராக அடக்குமுரையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் இதற்க்கு எல்லாம் தனது எம்.பி பதவியை இரஜினாமா செய்யாத இவர் இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதர்க்காக எம்.பி பதவி இராஜினாம என்ற நாடகத்தை நடத்தினாரே இதை நம்மால் மறக்க முடியுமா ?

அடுத்ததாக இலங்கையில் முஸ்லிம்களை கொண்று குவிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற மனித சங்கிளியில் இவர் கலந்து கொண்டது நமது சமுதாய விரோத போக்கை படம் போட்டு காட்டுகிறது.

அடுத்ததாக நம்முடைய முன்னால் சகாக்கள் பற்றி பார்ப்போம் இவர் செய்யும் சமுதாய மற்றும் மார்க்க விரோத போக்கை நம் இனையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதால் இதுவரை நம் இனையத்தளத்தில் வெளியிடதா உண்மைகளை வெளியிடுகின்றோன்.

முதலில் கலைஞருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு என்று தா.மு.மு.க வாரிய வீரர்கள் என்னென்ன கூத்துகளை அரங்கேற்றியுள்ளனர் என்பது பற்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.

24.11.2007 சனிக்கிழமை எங்களால்தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்று மார்தட்டிக் கொள்ளும் கழகக்காரர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு என்று பல ஊர்க்ளிலிருந்து கிளம்பினார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கூனிமேட்டில் பள்ளிவாசலுக்கு அருகே வந்து நின்றது பரங்கிப்பேட்டை கிளை என்று பேனர் எழுதப்பட்ட ஒரு வேன். அந்த வேனிலிருந்து கழகத் தொண்டர்கள் 10 பேர் ஏகப்பட்ட மப்பில், போதை தெளியாத நிலையில் குதித்து அருகில் இருந்த மளிகை கடையில் சிகிரெட்டை வாங்கி புகை விட்டார்கள். அப்போழுது அவர்களுக்கிடையே நடந்த உரையாடலை அனைத்து சகோதரர்களும் அறிந்து கொள்வதற்காக அப்படியே தருகின்றோம்.......

" பாண்டிச்சேரி சரக்கு நல்லாதான் இருக்குப்பா... விலை குறைவு ‍கிக் ஜாஸ்த்தி. சரக்கு கம்மிய வாங்கிட்டு வந்துட்டோம்.... கலைஞரின் பொன் விழா அன்றைக்கு இதை விட இன்னும் ஜாஸ்த்தியா ஏத்திக்கிட்டு, வீரியமா வருவோம்..."

இது தான் அவர்கள் போதையில் நிலை தடுமாறி கூறிய வார்த்தைகள் .

இப்படி ஒரு சம்ப‌வம் நடக்கவில்லை இது பொய்யான தகவல் என்று அவர்கள் வாதிட்டால் இதை கூனிமேடு டி.என்.டி.ஜே ஆதாரத்துடன் நிருபிக்க தயாராக இருக்கிறது.

பரங்கிப்பேட்டை கிளையும் ரெடி

இந்த சம்பவத்தை கூனிமேடு டி.என்.டி.ஜே வை போல் பரங்கிப்பேட்டை டி.என்.டி.ஜே கிளையும் நிரூபிக்கத் தயாராக உள்ளது.

இரண்டாவதாக த.மு.மு.க பாலுசெட்டிச்சத்திரம் கிளை அஜீத் ரசிகர் மன்றத்தில் இனைந்த கூத்து. இந்த கூத்திற்க்கு விமர்சனம் தேவை இல்லை என்று தான் நினைக்கின்றேன்.

மூன்றாவதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் அரங்கேறிய கூத்து.

நான்ங்காவதாக முத்துப்பேட்டையில் இறைவனுக்கு எதிராகவும் கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்களோடு கைகோர்த்த கூத்து .

சகோதர ச‌கோதரிகளே சற்று சீந்தித்து பாருங்கள் அல்லாஹ் இப்படிப் பட்டவர்க்ளுடன் தான ஒற்றுமையை காக்க சொல்கின்றான் .

யாருடன் தேவை ஒற்றுமை ?

பரங்கிப்பேட்டையை சேர்ந்த இந்திய கு(டி)மகன்களுடன் ஒற்றுமையை அல்லாஹ் வலியுருத்துகின்றான.

பாலுசெட்டிச்சத்திரம் அஜீத் ரசிகர் மன்றத்தினரிடம் ஒற்றுமையை அல்லாஹ் நிலைநாட்ட கூறுகின்றான.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள இறைவனுக்கு இனைவைக்கும் இவர்க்ளுடன இனைய வேண்டும.

அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்களோடு கைகோர்த்த இறைமறுப்பாளர்க்ளுடன் கைக்கோர்க்க வேண்டுமா

தா.மு.மு.க வில் இருந்து கொண்டு தவ்ஹீத் பேசும் அன்பு சகோதரர்களே இந்த இறை மறுப்பாளர்களை எதிர்த்து குரள் கொடுப்பது இறைவனால் உங்கள் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்ட கடமையள்ளவா ?

நளைய சமுதாயமே !தா.மு.மு.க இளைஞர்களே இவர்களுடன் இருந்தாள் உங்கள் சமுதாயத்தை வரும் காலங்களில் எப்படி அல்லாஹ் கூறிய வழியில் காப்பற்ற போகிறீர்கள்.

தா.மு.மு.க விற்க்கு பொருளாதார உதவி புரியும் அன்பு நெஞ்சங்களே உங்கள் பனம் அல்டிமேட் அணியின் அற்ப்பமான நோட்டீஸ்களுக்கு செலவிடுவது உங்களுக்கு தெரியுமா.

த.மு.மு.க வின் இந்த நிலமையை பார்க்கும் போது பேராசிரியர் அன்று சொன்னது தான் நினைவில் வருகின்றது . த.மு.மு.க வின் வளர்ச்சிக்கு தவ்ஹீத்வாதிகள் தான் முட்டுக்கட்டை என்று கூரினாரே . ஒரு வேளை இதற்க்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தோம் என்று கூறினார் என்று நினைக்கின்றேன்.

அன்பு சமுதாய மக்களே சற்று சிந்தித்து பாருங்கள் ஒற்றுமை என்ற பெயரில் இவர்களை தான் நீங்கள் ஆட்சியில் ஏற்ற போகின்றீர்களா ? பதவியில் ஏற்ற போகின்றீர்களா ?
இவர்களை பதவியில் ஏற்றினால் நமது ஏகத்துவ கொள்கையும் சமுதாய நலனும் என்ன ஆகுவது.

சற்று சிந்தித்து பாருங்கள்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 3:104
என்று அல்லாஹ் நமக்கு கூறியுள்ளான் எனவே இது போன்ற மார்க்க மற்றும் சமுதாய துரோகிகளை அடையாளம் கண்டு இவர்களை பதவியில் ஏற்ற விடமல் தடுத்து இறைவன் கூறும் வெற்றி பெற்ற சமுதாயமாக நாம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக....

Read more...

சனி, 2 மே, 2009

வாசகர்கள் பயன் பெறுவதற்காக நமது இனையதளதில் புதிய வசதி தினமும் Update செய்யப்படும் நமது இனையதில் பல விடியோ அடியோ மற்றும் இஸ்லாமிய கட்டுரைகளை டவுன்லோட் செய்துகொள்ளலாம் Click Here to Visit


நேர்காணல் என்ற போர்வையில் அரங்கேறிய நாடகம் !
கடந்த 23.04.2009 வியாழன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பொருளாதார மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அமைப்புக்கு எதிராக சதிவேலை செய்ததன் காரண‌மாக தூக்கி எறியப்பட்டவர்கள் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அவர்களது புதிய சகாக்களின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலியை அழைத்து நேர்காணல் என்ற போர்வையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.

கடந்த 19.04.2009 அன்று மண்ணடியில் பி.ஜே. அவர்கள் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் நடத்திய நாடகம் தெருக்கூத்தைவிட கேவலமாக முடிவுற்றது.

தயாநிதிக்கு ஓட்டுபோடச் சொன்ன ஹைதர் அலி ?

"நீங்கள் வக்ஃப்பு வாரியத்திற்க்கு ஒரு பிராமண வழக்கறிஞரை நியமித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே ? என்று அவரிடம் கேட்ட கேள்விக்கு ஹைதர் அலி சொன்ன பதில், "யாரும் எனக்கு ஓட்டு போடாதீர்கள் ! திறமை எங்கு உள்ளதோ அந்த திறமைசாலிக்குத்தான் ஓட்டு போட வேண்டும். இதில் இந்து முஸ்லீம் என்றெல்லாம் பார்க்க கூடாது " என்ற கருத்தை மறைமுகமாக அவரே ஒப்பு கொண்டார்.

அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா.. ?

"வக்ஃப்பு வாரியத்தில் நான் ஒரு பிராமண வழக்கறிஞரை நியமித்திருக்கிறேன். இந்த நியமனத்தில் இந்து முஸ்லிம் என்று மதத்தை பார்க்கக் கூடாது. நாம் இங்கிருந்து டெல்லிக்கு போகிறோம் விமானத்தில் செல்லும்போது விமான ஓட்டி ஒரு முஸ்லிமா ? இந்துவா ? என்று பார்ப்போமா ? அல்லது திறைமையானவரா ? என்று பார்ப்போம ? அதுபோலதான் நான் நியமித்த பிராமண வழக்கறிஞர் திறமையானவர் " என்று பதில் கூறினார்.

இதன் மூலம் ஹைதர் அலி சொல்லவருவது என்னவென்றால் மத்திய சென்னையில் நான் போட்டியிடுகிறேன். எதிரணீயில் திறமை மிகுந்த ஏற்கெனவே மத்திய அமைச்சராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற தொலைதொடர்புத் துறையில் பல புரட்சிகளை செய்த திறமைசாலி தயானிதிமாறன் போட்டியிடுகிறார்.

எனவே முஸ்லிம் என்பதற்காக எனக்கு வாக்களிக்காதீர்கள் திறமை சாலியான தயானிதிக்கு வாக்களியுங்கள் ! எப்படி திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து வக்ஃப்பு வாரியத்தில் நான் பிராமண வழக்கறிஞரை நியமித்தேனோ அதைபோல.."இது தான் இவர், இவருக்கு எதிராக வைக்கக்கூடிய வாதம்.

மதுரை வக்ஃப்பு வாரியக் கல்லூரியில் செய்த துரோகம் !

இப்படி பதில் கூறிய அடுத்த நிமிடமே அவருடைய பேச்சுக்கு அவரே முரண்படுகிறார்.
வக்ஃப்பு வாரியத்தில் மாற்று மத வழக்கறிஞரை நியமித்து சரிதானாம். அதே நேரத்தில் மதுரை வக்ஃப்பு வாரிய கல்லூரியில் 9 பேராசிரியர்களின் நியமன விஷயத்தில் முஸ்லிம் பேராசிரியகளை நியமிப்பதுதான் சரி, முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கவிடாமல் அழகிரிக்கு எதிராக நின்று இவர் தான் தடுத்தாராம் !

இப்படி தார்ப்பாயில் வட்கட்டிய பொய்யை ஹைதர் அலி அந்த நிகழ்ச்சியில் அவிழ்த்துவிட்டார். அரசியல்வாதிக்குரிய அனைத்து தகுதியும் (?) அவரிடம் வந்துவிட்டது என்பதை இந்த சம்பவங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது.

மதுரை வக்ஃப்பு வாரியக் கல்லூரியில் 9 பேராசிரியர்கள் நியமனத்தில் பெருவாரியாக முஸ்லிம் அல்லாதவர்களை நியமனம் செய்வதற்க்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதே நேரத்தில் தகுதி அடிப்படையில் அந்தப் பதவியை பெற தகுதியான நிலையில் காத்திருந்தவர்களிடம் நான் உங்களுக்கு அனீதி இழைக்கவிடமாட்டேன் என்று இரட்டை வேடம் போட்டவர்தான் இந்த ஹைதர் அலி.

மேலும் பணி மூப்பின் அடிப்படையில் பேராசிரியர்களாக நியமனம் செய்ய தகுதி பெற்ற நிலையில் இருந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த சகோதர, சகோதரிகளை புறந்தள்ளிவிட்டு, இவர் செய்த சதிவேலையை அறிந்து சமுதாய துரோகம் செய்ய காத்திருந்த ஹைதர் அலியை சந்தித்து நியாயம் கேட்க சென்றவர்களிடத்தில் "உங்கள்து இந்த ஒரு காரியத்தி பார்த்தால் நான் செய்ய இருக்கின்ற நாலு நல்ல காரியம் கெட்டுவிடும். இதை கேட்க நீங்கள் யார் ? வெளியே போங்கள்..! உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து பாருங்கள்..! உங்களிடம் நான் பணம் கேட்ட விஷயத்தை சொல்லி என் மீது வழக்கு போடுவதாக இருந்தாலும் போட்டுக் கொள்ளுங்கள். உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது " என்று மிரட்டினாரே இதை ஹைதர் அலி மறக்க முடியுமா ?

அதை தொடர்ந்து அவரை கண்டித்து டி.என்.டி.ஜே நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமும் ஒரு பெரும் நடுக்கம் அவருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த முஸ்லீம் சகோதர சகோதரிகள் இந்த சமுதாயத் துரோகத்துக்கு எதிராக வழக்கு போட்டதால்தான் இவரால் நம் சமுதாயத்திற்க்கு எதிரான துரோகத்தை செய்ய முடியவில்லை தவிர இவராக தடுக்கவில்லை.

பிற சமுதாயத்தினரை நியமன்ம் செய்ய விடாமல் நாம் தடுத்து வைத்துள்ளோம் என்பதே உண்மை. இவர் சமுதாயத்திற்கு செய்யத் துடித்த துரோகத்தையே பெரும் தியாகமாக காட்ட துடிக்கிறார் ! எவ்வளவு பெரிய நாடகம் நடிப்பு என்பதை மக்கள் விளங்கிக் கோள்ள வேண்டும்.
வக்ஃப்பு வாரிய ஊழல்கள்

வக்ஃப்பு வாரியத்தில் இவர் செய்த ஊழல்களில் ஒரு சிலவற்றை சகோதரர் பி.ஜே. மண்ணடியில் பொதுக் கூட்டத்தில் பட்டியல் போட்டார்.
1. பரங்கிப்பேட்டை வக்ஃப்பு நிலத்தை அடிமாட்டு விலைக்கு குத்தகைக்கு விட்டது.
2. திருச்சி வக்ஃப்பு நிலத்தை திமுகவின் அறிவாலயத்திற்க்கு தாரை வார்த்தது.
3. கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பள்ளிவாசல் வக்ஃப்பு நிலத்தை மாயாஜால் பூங்காவினர் மாயாஜாலம் செய்து அபகரித்ததை அங்கிகரித்தது.
4. திருவண்ணாமலை மாவட்டம் போரூர் கிராம வக்ஃப்பு வாரிய சொத்து விஷயத்தில் பண முதலைகளிடம் பலியானது.
5. பூந்தமல்லி வக்ஃப்பில் முறைகேடு செய்ததாக நிருபிக்கபட்ட ஒருவரை மாங்காடு கபரஸ்தான் நிர்வாகியாக நியமித்தது.. என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஆனால் வக்ஃப்பு வாரியத்தில் பெரும் ஊழல் செய்து விட்டீர்களாமே ? என்று கேட்க்பட்ட கேள்விக்கு, " பரங்கிப்பேட்டையில் சொத்தை மீட்டுள்ளேன். திருச்சியில் திமுகவிற்க்கு அறிவாலயத்திற்க்கு பல கோடி மதிப்புள்ள நிலத்தை 10,000 வாடகை வாங்கியதை, 30,000 வாடகை வாங்கி மூன்று வருடதிற்க்கு குத்தகைக்கு விட்டுள்ளேன் " என்று சொத்தை பதில் அளித்தவர்.

மற்ற குற்றசாட்டுகளை பற்றி வாய் திறக்காமல் பவ்வியமாக பம்மிக் கொண்டார். ஊழல் செய்ததை நிருபித்தால் பொது வாழ்விலிருந்து விலக தயார் என்ற கூவல் வேறு!

அவரை நோக்கி வைக்கப்பட்ட மற்ற ஊழல்கள் குறித்து வாய் திறக்காததே "எங்க் அப்பன் குதிருக்குள் இல்லை" என்ற ரீதியில் உண்மையை ஒப்புக் கொண்டதாகிவிட்டது. இதை இனி நிருபிக்க வேறு வேண்டுமா ?

பொய்யர் யார் ? வாத்தியாரா ? ஹைதர் அலியா ?

அடுத்ததாக, அந்த பேட்டியில் அதிமுகவுடன் கூட்டனி பேச்சுவார்த்தை நடத்தினோம். இரண்டு சிட்டுகள் தருவதாக கூறினார்கள். ஆனால் இரட்டை இலையில் நிற்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் இரட்டை இலையில் நிற்க முடியாது தனிச் சின்னத்தில்தான் நிற்போம் என்று கூறி மறுத்து விட்டோம் என்ற உண்மையையும் வாய் தவறி ஒப்புக் கொண்டுவிட்டார்.

ஜவாஹிருல்லாஹ் சொன்னது:
(பி.பி.சி. தமிழோசையில்..)

திமுகவுடனும் அதிமுகவுடனும் ஒரே நேரத்தில் கூட்டனி பேரம் பேசுகின்றீர்களே ! இது சந்தர்ப்பவாதம் இல்லையா ? " என்று பி.பி.சி. நிருபர் கேட்ட கேள்விக்கு "எங்களுக்கு அதிகாரத்தை பெறுவதுதான் முக்கியம்" என்று வாத்தியார் பதிலளித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் வாத்தியார் கூறியது :

அவர்களது கூட்டனி அறிமுக பத்திரிக்கையாளர் கூட்டத்தில், அதிமுகவுடன் கூட்டனி தொடர்பாக பேசியது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "அதிமுகவுடன் எந்த பேச்சு வார்த்தைய்ம் நாங்கள் நடத்தவில்லை. அனைத்தும் தவறான தகவல்" என்று தா ஒரு பொய்யன் என்பதை ஜவாஹிருல்லாஹ் நிருபித்தார்.

அதிகாரப்பூர்வ நாளேட்டில் பொய் :

இதே கருத்தையே தங்களது பத்திரிக்கையில் ஏப்ரல் 17 23 தேதியிட்ட (தொகுதி 5 : இதழ் 18) இதழில் பக்கம் 6ல் "அதிமுகவோடு பேச்சு வார்த்தை நடத்தவில்லை " என்ற பொய்யைக் கூறி, இது பொய்யான பத்திரிகை என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.

நேர்காணல் நாடகத்தில்.. !

தங்களது அமைப்பின் தலைவர் அதிமுகவுடன் கூட்டணி குறித்து முன்னுக்குப் பின் முரணாக உளறீ தான் ஒரு பொய்யர் என்று நிருபித்த நிலையில், 24.04.2009 அன்று நடத்தப்பட்ட நேர்கானல் நாடகத்தில் 'அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம் இரண்டு சீட் தருவதாக கூறினார்கள்' என்று ஹைதர் அலி கூறுகிறார் என்றால்.. பொய்யர் யார்? ஜவாஹிருல்லாவா? ஹைதர் அலியா? அல்லது இருவருமா ?
இன்ஷா அல்லாஹ் தொடரும்....

Read more...

வலைப்பதிவு காப்பகம்

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP