கடமையான தொழுகைக்கு பிறகு ஓதும் திக்ருகள்
அல்லாஹ் கூறுகின்றான்:
என்னை நினைவுக் கூறுங்கள். நான் உங்களை நினைக்கின்றேன். மேலும் எனக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள்; என்னை நிராகரித்து விடாதீர்கள்.
(அல்குர்ஆன் 2:152)
அன்பிற்க்கினீயவர்களே !
அல்லாஹ்தாலாவினால் உலக மாந்தருக்கு கொடுக்கப்பட்ட உண்னதமான மார்க்கம் இஸ்லாம். அந்த இஸ்லாத்தின் தூய வாழ்வு, இறை வழிபாடுகள் எப்படி என்பதை நபி(ஸல்) அவர்கள் தனது சொல், செயல், அங்கிகாரம் என்ற அடிப்படையில் மார்க்கத்தை நமக்கு கற்றுத் தந்துள்ளனர்.அதன் அடிப்படையில் நாம் நாமது இறைவழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்களின் ஒரு சுன்னத் நமக்கு தெரியாமல் இருக்கும் நிலையில், அந்த சுன்னத் தெரிய வரும் நிலையில் அதை ஹயாத்தாக்கினால் அல்லாஹ் நமக்கு நன்மையை கூலியாக தருகின்றான். ஆகவே
கடமையான தொழுகைக்குப் பிறகு அதாவது இமாம் ஸலாம் கொடுத்தவுடன் உடனே கூட்டு துவா ஓதுவதற்க்கும், அதை பின் தொடர்பவர்கள் ஆமீன் சொல்வதற்க்கும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையில் ஆதாரம் இல்லாத நிலையில் துவாவிற்க்கு முன் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடி தஸ்பிஹ், திக்ருகளை ஓதி நாம் நமது இறைவழிபாட்டினை தூய்மையாக்கி கொள்வோமாக !
இதோ நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் நபி(ஸல்) அவர்களின் ஹதீத்துகளின் துனையோடு
கடமையான தொழுகைக்குப்பின் ஓதவேண்டிய திக்ருகள்
அஸ்தக்ஃபிருல்லாஹ் ----- > 3 முறை
பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்.
அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம், வ மின்கஸ்ஸலாம், தபாரக்த்த யாதல் ஜலாலி வல் இக்ராம்.
பொருள்: யா அல்லாஹ்! நீயே சாந்திக்குரியவன். உன்னிடமிருந்தே சாந்தி கிடைக்கிறது. மேன்மைக்கும் கண்ணியத்திற்க்கும் உரியவனே! நியே மகத்துவ மிக்கவனாகி விட்டாய்!
அறிவிப்பவர்: ஸவ்பான்(ரலி)
ஆதாரம் : முஸ்லீம்
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்க லஹுலஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவா ஆலா குல்லி ஷையின்கதிர். லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹ் வலாநஃபுது இல்லா இய்யாஹ். லஹுன் நிஃமத்து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாஉல்ஹஸன். லாயிலாஹ இல்லல்லாஹ் முக்லிஸீன லஹுத்தீன் வலவ்கரிஹல் காஃபிரூன்.
பொருள்:வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எந்த இனையும் கிடையாது. ஆட்சி அதிகாரங்களும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடைடையவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ; நன்மையை செய்யவோ முடியாது. வணக்கத்திற்க்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நாங்கள் வணங்கமாட்டோம். அனைத்து அருட்கொடையும் சிறப்பும், சிறந்த புகழும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மார்க்க (வணக்க)த்தை அவனுக்காக மட்டுமே தூய்மையாக்கியவர்களாக அவனை மட்டுமே வணங்குவோம். இதனை இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே!
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா(ரலி)
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்
ஸுப்ஹானல்லாஹ் - 33 முறை
பொருள்: அல்லாஹ் தூய்மையானவனாவான்
அல்ஹம்துலில்லாஹ் - 33 முறை
பொருள்:அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹு அக்பர் - 33 முறை
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதிர்
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லீம்
அல்லாஹு லாஹிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸினதுன் வலா நவ்ம். லஹு மா ஃபிஸ் ஸமாவாத்தி வமா ஃபில் அர்ழ் மன் தல்லதீ யஷ்ஃபஉ இன்தஹு இல்லா பி இத்னிஹ். யஃலமு மா பைன யுஹீத்தூன பிஷையிம் மின் இல்மிஹீ இல்லா பிமாஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல் அர்ழ். வலா யஊதுஹு ஹிஃப்ழுஹுமா வஹுல் அலிய்யுல் அலீம்.
பொருள் : அல்குர்ஆன் 2:255 வது வசனத்தைப் பார்க்க
ஆதாரம் : ஸஹீஹுல் ஜாமிஃ
குல் ஹுவல்லாஹு அஹத்
குல் அஊது பிரப்பில் ஃபலக்
குல் அஊது பிரப்பின் னாஸ்
ஆகிய அத்தியாயங்களை ஓத வேண்டும்
பொருள் : அல்குர்ஆன் 112,113,114 ஆகிய அத்தியாயங்களைப் பார்க்க
ஃபஜர் மற்றும் மஃரிப் தொழுகைக்குப் பின் மேற்கூறப்பட்டவைகளுடன் இவைகளையும் ஓத வேண்டும்.
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதிர்
(10 முறை)
குல் ஹுவல்லாஹு அஹத்
குல் அஊது பிரப்பில் ஃபலக்
குல் அஊது பிரப்பின் னாஸ்
ஆகிய அத்தியாயங்களையும் மும்முன்று முறை
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் குபைப்(ரலி)
ஆதாரம் : திர்மித்
தொகுப்பு : ஜுலை 2004 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் பரங்கிப்பேட்டையில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக