பாகிஸ்தானிடம் இந்தியா பாடம் படிக்க வேண்டும்
கடந்த 1992 டிசம்பர் 6 மறக்க முடியாத, இந்தியாவின் இறையாண்மை கப்பலேறிய நாள்; சில தீவிரவாதிகள் காவி கொடியேந்தி பகிரங்கமாக முஸ்லிம்கள் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கினர். அதற்க்காக கோபம் கொண்டு எந்த ஒரு முஸ்லீமும் எந்த ஒரு கோவிலையும் இடித்து விடவில்லை நங்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் , நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று கொள்வோம் என்று கூறி காத்துக் கிடக்கின்றனர்.
ஆண்டுகள் 16 ஆகிவிட்டது தீர்ப்பு வெளியானபாடில்லை. ஆனால் முக்கிய குற்றவாளியான எல்.கே. அத்வானியோ நாட்டின் பிரதமராவதற்காக வேட்பாளராக நிற்கிறாராம்.இது இந்தியாவின் தலையெழுத்து ! ஆனால் இந்தியாவில் எந்த ஒரு காரணமுமின்றி பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் பாகிஸ்தானில் சில முஸ்லிம்கள் சில இந்துக் கோவில்களைக் கோபம் கொண்டு சேதப்படுத்தினர். பாகிஸ்தான் அரசு அவர்களைக் கைதும் செய்தது.
அந்த கோவில்களை சீரமைக்க வேண்டும் எனக் கூறி சிறுபாண்மை இந்துக்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற அரசு தற்போது லாகூரில் சேதமடைந்த 16 கோவில்களைச் சீரமைக்க ஒத்துக் கொண்டுள்ளது. இந்து கோவில்களை புனரமைக்க 60 லட்சம் ரூபாயை ஒதுக்கிய பாகிஸ்த்தான் அரசு, அதைப் புனரமைக்கும் பொறுப்பை தொல்பொருள் ஆராய்ச்சி துறையிடம் வழங்கியுள்ளது.
உணர்ச்சி வசப்பட்டு கோபத்தால் நடந்த செயலைக்கூட நியாயப்படுத்தாமல் பகிஸ்தான் நீதியுடன் நடந்துள்ளது. ஆனால் இந்தியாவில் இதற்க்கு நேர்மாறான நிலைதான் காணப்படுகிறது. இடித்த இடத்தில் பள்ளிவாசல் கட்டும் உரிமை பாகிஸ்தானைவிட இந்தியாவுக்கு அதிகம் உண்டு. அநியாயமாக அரசு ஆதரவோடு தகர்க்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்கள், போரட்டங்கள் முற்றுக்கை என நடத்தியபோதும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது.
தகர்க்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் ஆட்சியாளர்கள் கட்டித் தரவுமில்லை, அதற்க்கு நிதி ஒதுக்கவுமில்லை, முஸ்லிம்களிடம் அதைக் கட்டிக்கொள்ள அனுமதியும் வழங்கவில்லை. மாறாக அந்தப் பள்ளிவாசல் இருந்த பகுதியில் கோவில் கட்டுவதற்கான பணிகள் தான் நடந்தன.
அதோடு முஸ்லீம்களுக்கு சொந்தமான இடத்தில் கோவிலைக் கட்டுவோம் என்று பி.ஜே.பி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் இது சம்பந்தமாக ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவும் தயராக இல்லை.
குறைந்தபட்சம் மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகள் கூட நாங்கள் ஜெயித்தால் அயோதியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லும் துணிவைக்கூட பெறவில்லை அல்லது விரும்பவில்லை.
பாகிஸ்தான் நமக்கு எதிரி நாடுதான். அந்த நாட்டின் காரணமாக நமக்கு ஏராளமான தலைவலி தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது.ஆனால் பாகிஸ்தான் சிறூபான்மையான இந்துக்களை மதித்து அவர்களைப் பாதுகாக்கும் பாகிஸ்தான் அரசிடம் இந்த விஷயத்தில் இந்தியா பாடம் படிக்க வேண்டும்.
நாஞ்சிலார்
(உணர்வு)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக