புதன், 7 அக்டோபர், 2009

காஞ்சி மாவட்டம் பட்டூரில்
ஏகத்துவவாதிகளின் மீது தாக்குதல்
!


கடந்த 13.09.2009 அன்று காஞ்சி மாவட்டம் பட்டூரில் இஃப்தார் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கல்வியின் அவசியம் பற்றி திரண்டிருந்த இளைஞர் பட்டாளம் உணரும் வகையில் எடுத்து கூறப்பட்டது.

மாலையில் நோன்பு திறந்த பின் இறைவனை நினைவு கூற மஃரீப் தொழுகையும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இஸ்லாத்தை சரியான முறையில் பின் பற்றாவிட்டால் ஏற்படும் இன்னல்களை கூறும் வண்ணம் ஸஹாபாக்களின் தியாகங்களை எடுத்து கூறிக் கொண்டிருகும் போது திடீரென மாடியில் கூட்டம் சற்று கூடியது. பின்னர் காதில் கேட்க முடியாத வார்த்தைகள் ஒலித்தது. என்ன பிரச்சினை என்று பார்க்கும்போது வீட்டின் வாயிலில் சுமார் 300க்கும் மேற்ப்ட்ட பேர் திரண்டிருந்தனர்.

வீட்டின் முன் திரண்டிருந்தவர்கள் மாடியில் ஏறத் தொடங்கினர். மாடியில் இருந்தவர்வர்கள் வெறித்தனமாக தாக்கவும் தொடங்கினர். ஒலி பெருக்கி மற்றும் அது சம்பந்தமான கருவிகளை வெறித்தனமாக அடித்து நொறுக்கினர். அதை தடுக்க சென்ற டி.என்.டி.ஜே சகோதரர்களையும் வெறித்தனமாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மது அருந்தி வந்துதான் இந்த செயலில் ஈடுபட்டனர். அதை நாம் கண்கூடாக காண முடிந்தது. அங்கு பயானில் கூறப்பட்டதோ இறைவனைப் பற்றிய போதனைகள். ஆனால் வந்திருந்தவர்கள் டி.என்.டி.ஜேவைச் சார்ந்தவர்களை தீவிரவாதிகள் எனவும் விபச்சாரம் செய்கிறார்கள் எனவும் வாய் கூசாமல் இறைவன் ஒருவன் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறான் என்பதற்கு அஞ்சாமலும், மறுமைக்கு அஞ்சாமலும் தகாத காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதுமட்டுமல்லாமல் பள்ளிவாசலில் இமாமாக இருப்பவர், மக்களிடத்தில் இஸ்லாத்தை எடுத்து கூறுபவர் பேசிய பேச்சுக்களைக் கேட்டபோது உண்மையில் இவர் இறைவனுக்கு அஞ்யவரா என்பதும், அவர் செய்த அராஜகத்தை படம் பிடிக்கும்போது தனது கீழாடையை தூக்கிக் காட்டியதும் மிகவும் கேவலமான செயலாகும். இவர்களெல்லாம் குர்ஆன் ஹதீஸுக்கு அஞ்சியவர்களா என்று கேட்கும் அளவுக்கு மது அருந்தி விட்டு மிகவும் கேவலமாக நடந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த அநியாய அக்கிரமங்களை பற்றி காவல்துறையின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்குள் வசைமாறிப் பேசியவர்கள் செங்கற்களைக் கைகளில் எடுத்துக் கொண்டு தாக்கத் தொடங்கினர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யாமல் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உங்களுக்குள் ஏன் அடித்து கொள்கிறீர்கள் என்று கூறினர்.

சுமார் நான்கு மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் இப்பிரச்சினையை ஆர்.டி.ஒ விசாரனைக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. தாக்குதல் தொடுத்த சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறப்படும் 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இவர்கள் சேக் அப்துல்லாஹ் ஜமாலி மற்றும் மேலை நாஸர் ஆகியோரின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் டி.என்.டி.ஜே தரப்பில் 15 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த பிரச்சனையில் மாநில டி.என்.டி.ஜே நிர்வாகமும் மிகவும் கவனிப்புடணும், உறுதுணையாகவும் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் இந்த ஆண்டு நமது TNTJ மாணவரணி தமிழகத்தில் 65 இடத்திலும், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2 இடத்திலும் இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளது (இடங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது), மொத்தம் 22 மாவட்டங்களில் 67 இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது (மாவட்டங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது), அல்ஹம்துலில்லாஹ்,

இப்தார் நிகழ்ச்சிகள் நடந்த இடங்களின் விபரம்

1. தாம்பரம்,
2. அறந்தாங்கி,
3. காரைகுடியில்,
4. இராம்நாடு,
5. பரங்கிப்பேட்டை,
6. பெங்களூர் (white field)
7. புது மடம் (இராமநாதபுரம் மாவட்டம்)
8. இருமேனி (இராமநாதபுரம் மாவட்டம்)
9. மண்டபம் (இராமநாதபுரம் மாவட்டம்)
10. ஆராம்பண்ணை (தூத்துகுடி மாவட்டம்)
11. வலங்கைமான் (தஞ்சை மாவட்டம்)
12. ஆடுதுரை அவனியாபுரம் (தஞ்சை மாவட்டம்)
13. புது வயல் (சிவகங்கை மாவட்டம்)
14. இராஜகம்பீரம் (சிவகங்கை மாவட்டம்)
15. தேங்காய் பட்டினம் (குமரி மாவட்டம்)
16. மந்தாரன் புதூர் (குமரி மாவட்டம்)
17. புளியந்தோப்பு (சென்னை)
18. ஆலங்குடி (புது கோட்டை மாவட்டம்)
19. கரம்பங்குடி (புது கோட்டை மாவட்டம்)
20. சிவகாசி
21. கீழக்கரை
22. KG ஹள்ளி (பெங்களூர்)
23. பனை குளம் (இராமநாதபுரம் மாவட்டம்)
24. திட்டுவிளை (குமரி மாவட்டம்)
25. நாகபட்டினம்
26. பல்லாவரம்
27. வந்தவாசி (திருவண்னாமலை மாவட்டம்)
28. கானத்தூர் (காஞ்சி மாவட்டம்)
29. கல்ப்பாக்கம்
30. செய்யுதுங்கநல்லூர் (தூத்துகுடி மாவட்டம்)
31. பட்டாபிராம் (திருவள்ளூர் மாவட்டம்)
32. ஆழ்வார்திருநகர் (திருவள்ளூர் மாவட்டம்)
33. சன்னாபுரம் (தஞ்சை மாவட்டம்)
34. ஐயம்பேட்டை (தஞ்சை மாவட்டம்)
35. இளையான்குடி
36. முக்கன்னாமலைபட்டி (புது கோட்டை மாவட்டம்)
37. போத்தனூர் (கோவை)
38. காஞ்சிபுரம்
39. புது வலசை (இராம நாதபுரம் மாவட்டம்)
40. கடையலுமூடு (குமரி மாவட்டம்)
41. MMDA காலனி (சென்னை)
42. காட்டூர் (கோவை)
43. லெப்பைகுடிகாடு (பெரம்பலூர் மாவட்டம்)
44. ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்)
45. வண்ணார பேட்டை (சென்னை)
46. திருவண்னாமலை
47. திருப்பூர்
48. கூடுவாஞ்சேரி (காஞ்சி மாவட்டம்)
49. குன்றத்தூர் (காஞ்சி மாவட்டம்)
50. முத்து பேட்டை (திருவாரூர் மாவட்டம்)
51. ஆலந்தூர், (சென்னை)52. மேலபாளையம்
53. புது கோட்டை
54. தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்)
55. சிவகங்கை
56. திருவல்லிகேணி
57. நாகூர்
58. தொண்டி (இராம நாதபுரம் மாவட்டம்)
59. தேவிபட்டிணம் (இராம நாதபுரம் மாவட்டம்)
60. தூத்துக்குடி
61. வழுத்தூர் (தஞ்சை மாவட்டம்)
62. சோழபுரம் (தஞ்சை மாவட்டம்)
63. மங்களத்தில் (திருப்பூர் மாவட்டம்),
64. ஜாம் பஜார் (சென்னை)
65. ஆசாத் நகர்(கோவை),
66. பட்டூர் (காஞ்சி மாவட்டம்)
67. சேப்பாக்கம் (சென்னை)

இப்தார் நிகழ்ச்சிகள் மாவட்ட வாரியாக விபரம்

1. இராமநாதபுரம் மாவட்டம்
2. தூத்துகுடி மாவட்டம்
3. தஞ்சை மாவட்டம்
4. சிவகங்கை மாவட்டம்
5. குமரி மாவட்டம்
6. வட சென்னை
7. தென் சென்னை
8. திருவள்ளூர் மாவட்டம்
9. காஞ்சி (கிழக்கு) மாவட்டம்
10. காஞ்சி (மேற்கு) மாவட்டம்
11. பெங்களூர்
12. புது கோட்டை மாவட்டம்
13. கோவை மாவட்டம்
14. பெரம்பலூர் மாவட்டம்
15. திருவண்னாமலை மாவட்டம்
16. கிருஷ்ணகிரி மாவட்டம்
17. கடலூர் மாவட்டம்
18. நாகை மாவட்டம்
19. திருவாரூர் மாவட்டம்
20. விருது நகர் மாவட்டம்
21. திருப்பூர் மாவட்டம்
அழைப்பு பணியில் என்றும் அன்புடன் கடலூர் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி

Read more...

வியாழன், 3 செப்டம்பர், 2009

இரவுத் தொழுகை
கடமையான தொழுகைக்கு பிறகு மிகவும் சிறப்பு வாயந்த, அதிக நன்மையை பெற்றுதரக்கூடிய தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும்
"ரமலான் மாதத்திற்க்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹ்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும் கடமையான தொழுகைக்குப்பிறகு சிறந்த தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி(ஸல்..) அவர்கள் கூறினார்கள்.”


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 2157
இரவு தொழுகையின் நேரம்:
இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜர் நேரம் வரும் வரை இத்தொழுகையை தொழலாம் நபி(ஸல்..) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி(ஸல்..) அவர்கள் இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து ஃபஜர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்ஆத்கள் தொழுதுள்ளார்கள்.


அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 1340
நபி(ஸல்..) அவர்கள் இரவின் கடைசியில் மூன்றிலொரு பகுதி நேரமானபோது 11 ரகஆத்கள் தொழுதார்கள்.


அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)
நூல் : முஸ்லிம் 7452
ரக் ஆத்களின் என்னிக்கை :
ரமலானில் நபி(ஸல்..) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) யிடம் கேட்டேன். நபி (ஸல்..) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் 11 ரக்ஆத்களை விட அதிகமாகத் தொழுததில்லை நான்கு ரக்ஆத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்ஆத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்ஆத்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள்.


அறிவிப்பவர் : அபூஸலமா(ரலி)
நூல் : புகாரி 1147 முஸ்லிம் 1344
வித்ர் தொழுகை:
வித்ரு தொழுகை அவசியமானதகும் யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்ஆத்கள் வித்ர் தொழட்டும் யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்ஆத் தொழட்டும் என்று நபி(ஸல்..) அவர்கள் கூறினர்கள்


அறிவிப்பவர் : அபூஅய்யுப்
நூல் : நஸயி 1692 அபுதாவூத் 1212 இப்னுமாஜா 1180
20 ரக் ஆத்துகளா ? :
இரவுத் தொழுகை அதாவது மக்களால் தராவீஹ் என்று அழைக்கபடும் தொழுகை 20 ரக்ஆத்கள் என்று சிலர் வாதிடுகின்றனர் ஆனால் மேல்குறிப்பிட்ட ஹதீஸும் இரவுத் தொழுகை 11 ரக்ஆத்கள் தான் என்று அறிவிக்கின்றது.

மேலும் 20 ரக் ஆத்கள் என்று சொல்ப‌வார்கள் உமர்(ரலி) அவர்களை ஆதாரமாக்குவார்கள் ஆனால் அதற்க்கு மாற்றமாக பின்வரும் ஹதீஸ் உள்ளதை காணவும்.
உபைபின் கஅப்(ரலி) தமீமுத்தாரி(ரலி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்ஆத்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர்(ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.


அறிவிப்பவர் : ஸாயிப் யஸீத்
நூல் : மு.அத்தா.232


Read more...

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

بسم الله الرحمن الرحيم
மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
Justify Full
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....

.இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள். இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது. இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள். உணவு, உடை அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, ”நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : அபூதாவூத் 1830

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள்.

அத்துடன் மட்டும் நபி (ஸல்) அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம். ”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56

சுய மரியாதையைப் போற்றுதல் மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ”நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல் : புகாரி 4942, 5204

மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும். அடுத்ததாக ‘பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள்.

அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும். மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது.

பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்! ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃலிக்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள். மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள். ”பகீஃலிக்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்” என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல் : முஸ்லிம் 1619

இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை. அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ ‘பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 1119

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, ”உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (950)

இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது? இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மனைவியின் உணவு, உடை, அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக! மாநபி வழியில் நடை போடுவோமாக!

Read more...

ஞாயிறு, 12 ஜூலை, 2009


இஸ்லாம் பெண் கல்வியை மறுக்கிறதா?


தினமணி கதிரில் (14.06.2009) 11ம் பக்கத்தில் 'அக்கரைச் சீமை' என்ற தலைப்பில் ராணி மைந்தன் என்பவர் எழுதிதியுள்ளார். அதில் சில விஷமக் கருத்துகளை கூறியுள்ளார். என்னவென்றால் 'தாலிபாகளுக்கு நம்பர் ஒன் எதிரி பெண் கல்வி' என்றும் பெண் கல்வி கூடாது என்று தாலிபான்கள் சொல்லக் காரணம் இது இஸ்லாமிய நெறி முறைகளுக்கு முரணானது என்று நினைப்பது தான் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தினமணியின் அறியாமையைத்தான் காட்டுகிறது. குர்ஆனின் முதல் வேத வெளிப்பாடான வசனமே 'இக்ராஹ்'. படிப்பீராக, கற்பீராக, ஓதுவீராக என்று தான் துவங்குகிறது. கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் வேதம் இஸ்லாம்தான். ஆண்களே கற்பீறாக என்றோ, பெண்களே கற்காதீர்கள் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது பெண்கள் கல்வி கற்ப்பது இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணானது என்று கூறும் தினமணி அதன் அறிவின் வரட்சியை வெளிக்காட்டுகிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிபுரிந்த போது போதைப் பொருள் உற்பத்தியை முற்றிலுமாக ஒழித்து கட்டியதற்காக ஐ.ந. சபையின் பாராட்டுதலைப் பெற்றிருந்தது என்பதை தினமணி மட்டுமல்ல வேறு யாரும் மறுக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் குற்றங்கள் ஒழுக்கக்கேடுகள் குறைந்திருந்ததையும் மறுக்க முடியாது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து மேலை நாட்டு அரைகுறை ஆடைகளுடன் படிப்பதை தான் தாலிபான்கள் வெறுக்கின்றனர். உலக முஸ்லீம்கள் மத்தியில் தாலிபான்கள் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்காவின் தலையீட்டை ஆப்கானிஸ்தானில் தொடர வேண்டும் என்பதற்க்காகவும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஆப்கன் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காகவும், அமெரிக்க ஏஜெண்டுகள் இது போண்ற கீழ்த்தரமான காரியங்களை செய்து விட்டு தாலிபான்கள் மீதும், அல்காயிதா மீதும் பழி போட்டு கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் பெண் கல்வியை எதிர்ப்பது போண்று எழுதப்பட்ட செய்திதான் இப்போது பிரச்சினையே! ஆணும், பெண்ணூம் இரண்டறக் கலந்து கற்க வழி வகுக்கக்கூடாது; அப்படி செய்தால் பல விதமான ஒழுக்க கேடுகள் அதாவது திருமணத்திற்க்கு முன்பே உடலுறவு வைத்து பிள்ளையைப் பெற்றெடுப்பது, பெண்கள் ஓடிப்போவது, தற்க்கொலை செய்து கொள்வது போன்ற கேடுகள் விளையும்.

எனவே ஆண், பெண் சேர்ந்து பயிலக்கூடது என்று தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

தாலிபான்கள் பாகிஸ்தானில் அவர்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஜிஸ்யா வரி வசூலிப்பதாக வந்த செய்தியை கூட பாகிஸ்தான் ஹை கமிஷன் மறுத்துள்ளது.


‍எம்.ஏ.ஹாஜி முஹ்ம்மது, நிரவி

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP