செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

கதையல்ல நிஜம் தாயினாலேயே நிர்வாணப்படுத்தப்பட்ட மகள்.

கதையல்ல நிஜம்
தாயினாலேயே நிர்வாணப்படுத்தப்பட்ட மகள்.
விஜய் டிவியில் பரபரப்புப் பேட்டி. கலத்தில் தவ்ஹீத் ஜமாத்.

தொகுப்பு Rasmin M.I.Sc

வீடியோ மற்றும் பின்னனித் தகவல்கள்.





கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற ஊரில் ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட கொடுமை ஊரையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது கடந்த 9.08.2010 அன்று விஜய் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரி தனக்கு நடந்த அவலத்தை அந்த நிகழ்சியில் தெரிவித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை அடைய முயற்சிப்பதாகவும் அவர் தன்னை துன்புருத்துவதாகவும் அந்த நிகழ்சியில் தெளிவாக குறிப்பிட்டதுடன் இதற்கு தனது தாயும் தந்தையும் கூட உடந்தை என்பதை பகிரங்கமாக தெரிவித்தார்.

நடந்தது என்ன?

விஜய் டிவியின் நிகழ்சிக்கு முன் இந்த சகோதரிக்கு நடந்தது என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது கடந்த 19.02.2010 அன்று கோவை குனியமுத்தூர் போலிஸ் நிலையத்தில் சபிய்யா பானு என்ற சகோதரி தனது தாய் மாமனுடன் சென்று ஒரு வழக்குப் பதிவு செய்தார்.

ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை மானபங்கப் படுத்த முயல்வதாகவும்.அதற்கு தனது தாயும் தந்தையும் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் தன்தை ஆரச்சாமிக்கு திருமணம் முடித்துக் கொடுக்க முயல்வதாகவும் இதனைத் தடுத்து நிருத்த காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் அவர் புகார் பதிவு செய்தார்.

அததைத் தொடர்ந்து கோட்டின் மூலம் ஆரச்சாமி ஜாமினில் வெளிவந்து விடுகிறான் அந்த வழக்கு இன்னும் நிழுவையில் உள்ளது.

அந்தச் சகோதரியின் தாய் மாமா பாட்டி அனைவரும் இவரை அவரின் வீட்டிட்கு அனுப்ப வேண்டாம்.இந்தப் பெண்ணை அங்கு அனுப்பினால் அவர்கள் மீண்டும் அவருக்கு துன்பம் கொடுப்பார்கள் என்று போலிஸில் சொல்லியும் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தச் சகோதரி மீண்டும் அவருடைய பெற்றோருடனே அனுப்பப் பட்டார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் பழைய பிரச்சினைகள் தலை தூக்குகிறது.

மீண்டும் 02.07.2010 அன்று வெள்ளிக்கிழமை ஸ்கூல் சென்ற அந்தச் சகோதரி அங்கிருந்து திருப்பூரிலிருக்கும் தனது தாய் மாமாவின் வீட்டிட்கு செல்கிறாள்.

அந்த மாமா குறிப்பிட்ட சகோதரியை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டத்தை அனுகினார்.

பிரச்சினையை கையிலெடுத்தது தவ்ஹீத் ஜமாத்

07.07.2010 அன்று இந்தச் சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் அவருடைய தாய் மாமா மூலமாக தெரியப் படுத்துகிறார்.

பிரச்சினையை கையில் எடுத்த தவ்ஹீத் ஜமாத் உடனே கலத்தில் குதித்தது.

07.07.2010 அன்று தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்;ட நிர்வாகம் கமிஷ்னரை சந்திக்கிறார்கள்.

குறிப்பிட்ட சகோதரிக்கு நடந்த கொடுமைகள் கமிஷ்னரிடம் தெளிவாக விளக்கப் பட்டது.அதனைத் தொடர்ந்து கமிஷ்னரின் வேண்டுதலுக்கிணங்க அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்தச் சகோதரியுடன் மாவட்ட நிர்வாகம் சென்றது.

மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டவுடன் 09.07.2010 அன்று மீண்டும் அந்தச் சகோதரியை அழைத்துக் கொண்டு விசாரனைக்கு வரும் படி அனைத்துக் மகளிர் காவல் நிலையம் தவ்ஹீத் ஜமாத்தை கேட்டுக் கொண்டது.
அதுவரை தவ்ஹீத் ஜமாத்தின் பாதுகாப்பில் அந்தச் சகோதரியை வைத்துக் கொள்வதாகவும் முடிவு செய்யப் பட்டது.

09.07.2010 அன்று மகளிர் காவல் நிலையத்தில் வைத்து குறிப்பிட்ட சகோதரியின் தாயிடத்தில் விசாரனை செய்யப் பட்டபோது தாய் தனது மகள் என்று கூடப் பார்க்காமல் காரசாரமாக அந்தச் சகோதரியை திட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் மகளிர் காவல் நிலையம் 12.07.2010 அன்று விசாரனைக்கு வரும்படி சொல்ல அழைத்து சென்றது தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம்.

மீண்டும் விசாரனையின் போது தனது மகளை காரசாரமாக வாய்க்கு வந்தபடி திட்டுகிறார் அந்தப் பெண்ணின் தாய்.

அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தின் உத்தரவின் பேரில் தவ்ஹீத் ஜமாத்தின்; பாதுகாப்பில் குறிப்பிட்ட சகோதரி ஒப்படைக்கப் படுகிறார்.

தந்தையின் தீக்குழிப்பு நாடகம்.

19.07.2010 அன்று சாதிக் பாஷா(இவர் இந்துவாக இருந்து இஸ்லாத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.) என்ற அந்தச் சகோதரியின் தந்தை கலக்டர் அலுவலகத்தின் முன் தீக்குழிக்கச் முயன்றார்.

அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலைய வேண்டுதலின்படி நீதிபதி விசாரனைக்கு அந்தச் சகோதரி அழைத்துச் செல்லப் படுகிறார்.

கிட்டத் தட்ட 3 மணிநேரங்கள் விசாரனை நடத்தப் பட்ட பின் அந்த சகோதரியின் தாய் மற்றும் தந்தையை கடுமையாக கண்டித்து அதன் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோவை மாவட்ட கட்டுப் பாட்டில் அந்தச் சகோதரி விடப்பட்டார்.

விஜய் டிவி நிகழ்ச்சி.

நீதிபதி விசாரனையில் தான் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டதை மறைப்பதற்காக விஜய் டிவியின் கதையல்ல நிஜம் நிகழ்ச்சிக்கு அந்தப் பெண்ணின் தாய் தெரியப் படுத்தினார் அதனைத் தொடர்ந்து விஜய் டிவி நிர்வாகம் தவ்ஹீத் ஜமாத்தை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தச் சகோதரியை குறிப்பிட்ட நிகழ்சியில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றது தவ்ஹீத் ஜமாத்.

கதையல்ல நிஜம்.

குறிப்பிட்ட சகோதரி பொய் சொல்கிறார் என்று செய்தி பரப்பிய தாய் தந்தை உற்பட ஆரச்சாமி என்ற காமுகனையும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் சகோதரி அவர்கள் தான் இந்த ஆரச்சாமியால் பாதிக்கப் பட்ட முறையை தெளிவாக விளக்கினார்.

நிகழ்சியை நடத்திய லக்ஷ்மி என்ற பெண்ணே இந்தச் சகோதரியின் செய்தியைக் கேட்டு ஆச்சரியப் பட்டார்.

சகோதரி ஆரச்சாமியைப் பற்றி சொன்ன சில செய்திகள்.

இவன் என்னுடைய தாயுடன் தவறான தொடர்பை வைத்திருக்கிறான்.

இது என் தந்தைக்கும் தெரியும்.

இவன் என்னை அடைவதற்கு பல முறை முயன்றான்.

என்னுடன் யார் பேசினாலும் அவர்களை கடுமையாக தாக்குகிறான்.

என்னை யாருடனும் பேசக்கூட விடுவதில்லை.

நான் வெளியில் சென்று விடாமல் இருக்க என் தாயும் இவனும் சேர்ந்து என்னை நிர்வாணப் படுத்தினார்கள்(சொல்லும் போதே விம்முகிறார்)

எனது தாய் தந்தையின் கண்முன்னே என்னை கடுமையாக தாக்குவான்.

இருவரும் அதனைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்

இவனுக்கும் எனக்கும் எந்தத் உறவு முறைச் சொந்தமும் இல்லை ஆனாலும் இவன் என்மேல் என் தந்தையை விட அதிகமான அதிகாரம் செலுத்துகிறான்.

இப்படி பல செய்திகளை ஆரச்சாமி என்ற அந்த ஆசாமியைப் பற்றி சகோதரி எடுத்து வைத்தார்.

லக்ஷ்மியின் கேள்வியும் சகோதரியின் பதிலும்.

நிகழ்சியை நடத்திய லக்ஷ்மி அவர்கள் இப்படியெல்லாம் உன்னை இவன் துன்புருத்தக் காரணம் என்ன என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சகோதரி நான் இப்படி இவனிடமும் என் தாய் தந்தையிடமும் கஷ்டப் பட காரணம் என்னுடைய அழகு இதன் காரணமாகத் தான் இந்தக் காமுகன் என்னை இப்படி கஷ்டப் படுத்துகிறான் என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ஆரச்சாமியும் லக்ஷ்மியின் எச்சரிக்கையும்.

நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் லக்ஷ்மி அந்த நிகழ்சியில் ஆரச்சாரமியை விசாரனைக்கு உட்படுத்தினார்.

அந்த விசாரனையில் நீங்கள் ஏன் இந்தப் பெண்னை இப்படி கஷ்டப் படுத்துகிறீர்கள் உங்களுக்கு இவர் என்ன உறவு இவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க.

அரண்டு போன ஆரச்சாமி தனக்கும் குறிப்பிட்ட அந்த சகோதரிக்கும் எந்த ஒரு உறவும் இல்லை.

அவருடைய தாயாருடன் நான் வியாபாரம் செய்கிறேன்.அதனால் இந்தப் பெண்ணையும் எனக்குத் தெரியும் வீட்டிட்கு போய் வருவேன்.

அவருடைய நல்லது கெட்டதுகளை பார்த்துக் கொள்வேன் என்று சொன்னார்.

அதற்கு பின் பேசிய லக்ஷ்மி இவர் சொல்வதில் என்ன உண்மை இருக்கிறது என்று சகோதரியிடம் கேட்க இவருக்கும் எனது தாய்க்கும் வேறுவிதமாக தொடர்பு இருக்கிறது.

அத்தோடு இவர் என்னையும் அடைய முயற்சிக்கிறார் என்பதை அந்தக் காமுகனுக்கு முன் விஜய் டிவியில் தெளிவாக தெரிவித்தார்.

இதனை மறுத்த ஆரச்சாமிக்கு பதில் கூறிய லக்ஷ்மி எந்தப் பெண்ணும் இல்லாத ஒன்றை தன்மேல் சொல்லி தனது எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ள மாட்டார் நீங்கள் இப்படி நடந்ததால் தான் இவர் இப்படி குறிப்பிடுகிறார் என்பதை விளக்கி சொல்ல தான் அப்படி நடந்தேன் என்பதற்கு சாட்சியாக ஆரச்சாமி அமைதியாக இருந்தார்.

வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

விசாரிக்கப் பட்ட தாயும் தந்தையும்.

இருதியாக தாயையும் தந்தையையும் விசாரித்தார் லக்ஷ்மி அப்போது தாய் மாறி மாறி பேசியது அவர் ஒரு குற்றவாளிதான் என்பதையும் தந்த ஒரு கையாலாகாத ஆரச்சாமியின் பணத்திற்கு அடிமையான ஒருவன் என்பதும் தெளிவாக விளங்கியது.

தீக்குழிப்பு என்று கூறியதெல்லாம் நாடகம் என்பதும் அந்த வீடியோவில் நிரூபிக்கப் பட்டது.

அதே போல் இனிமேல் எந்தவிதமான கஷ்டமும் இந்தப் பெண்ணுக்கு கொடுக்கக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப் பட்டது.

தந்தையை எச்சரித்த லக்ஷ்மி.

சம்பந்தமே இல்லாத ஒருவன் உங்கள் பிள்ளையை அடித்து துன்புருத்தியுள்ளான் இதையெல்லாம் பார்த்து நீங்கள் சும்மா இருந்துள்ளீர்கள்.

இனிமேலாவது ஒரு ஆண்மகனைப் போல் நடந்து கொள்ளுங்கள் என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

தகவல் :

சகோதரர் நவ்ஷாத்
செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டம்.
Ph : 00919150125002


Read more...

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

எங்கே பதில் ?

அன்பு சகோதர சகோதரிகளே ஒரு நாள் ஆன்லைனில் எனக்கும் இரு இளைஞர்களுக்கும் ஒரு குற்றச்சாட்டை பற்றி நடந்த ஒரு சிரியா விவாதம்.... (மேலும் விவரங்களுக்கு இனைபை பார்வையிடவும் Click Here)

அன்பு சகோதர சகோதரிகளே தமிழகத்தில் முஸ்லீல் அமைப்புகளில் ஒன்றான‌ பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா "வழுவான இந்தியாவை உருவாக்கலாம்" என்ற பிரச்சாரத்தில் இரங்கியுள்ள நாம் அனைவரும் அறிவோம்....

வெளியில்லிருந்து பார்க்கும் போழுது இந்த அமைப்பை பார்க்கும் இளைஞர்கள் இது இளைஞர் சக்தி இது இளைஞர்களை இஸ்லாத்தின் அடிப்படையில் நேர்வழி படுத்தக்கூடிய அமைப்பாகவே பார்கின்றனர்.

அனால் இன்று இந்த அமைபின் நிலை இஸ்லாமிய கொள்கையில் மிகவும் கவலைகிடமாக உள்ளது என்பதை யாரும் அறிவது இல்லை.

குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையான லாஹிலாஹ இல்லல்லாஹ் முஹ்மது ரஷூலுல்லாஹ் (தவ்ஹீதை) தூக்கி எறியும் அளவிற்க்கு இவர்கள் கீழ்தரமாக இறங்கியதை நாம் யாராலும் மறுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

உதாரணத்திற்க்கு எடுத்துக் கொண்டால் இவர்கள் நடத்திய பல மாநாடுகளில் மாநாட்டு மேடைகளில் இவர்கள் இஸ்லாத்தை மறந்த கதை உங்களுக்கு தெரியுமா ?

மாநாட்டு மேடையில் தலைவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது தொண்டர்கள் கைத்தட்டி விசில் அடித்து கொண்டு இருக்கும் நேரத்தில் மேடையில் இருந்த தலைவர்கள் இஸ்லாத்தை எடுத்து கூறி தடுக்காதது ஏன் ? "ஆஆஆஆஆஆஆஓஓஓஓஓ" என்று தொண்டர்கள் சத்தமிட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில் நபி வழியை கூறி தடுக்காதது ஏன் ?

அல்லாஹ் ஹராம் என்று கூறிய இசையை தங்கள் இயக்க பாடலுடன் சேர்த்தது ஏன் ?

இதுவா கொள்கை இதுவா வழுவான இந்தியாவை உர்ய்வாக்கும் தன்மை சற்று சிந்தித்து பாருங்கள் சகோதர சகோதரிகளே...

இவர்கள் இஸ்லாத்தின் அடைப்படை கொள்கையான தவ்ஹீதை மறந்து சல்யூட் அடித்த கண்றாவி கதையை எங்கே சொல்வது.....

தவ்ஹீதை மறந்து தனி மனித வழிப்பாட்டிற்க்கு வழிவகுக்கும் வகையில் தலைவர்களுக்கு சல்யூட் அடிக்கும் கன்றாவி காட்சிகள்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அணிவகுப்பில் எடுத்த புகைப்படங்கள்


இது தான் இஸ்லாமா ? இது தான் கொள்கை பிடிப்பா ? பதில் தாருங்கள்.....சரி இப்பொழுது ஆன்லைனில் நடந்த விவாதத்திற்க்கு வருவோம்...

நான் ஆன்லைனில் இருந்த போது "பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா" நடத்தவிருக்கும் மாநாட்டை பற்றிய விளம்பரம் எனக்கு அனுப்பப்பட்டது.

நான் அதற்க்கு இவர்கள் செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்று பதில் அளித்தேன்.... அதற்க்கு அவர் இது சமூக எழுச்சி மாநாடு புறியுதா என்று கூறினார்...

பிறகு நான் இதற்க்கு முன்னால் நடந்த மாநாடுகளில் இவர்கள் நடத்திய இசை கூத்துகளை பட்டியல் போட்டு அதற்க்கு மார்க்க ரீதியான விளக்கம் கேட்டேன் அதற்க்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா ?

"உஙகள் மனசாட்சியை தொட்டு கூறுங்கள் இதற்க்கு முன்னால் நீங்கள் இசையை கேட்டது இல்லை என்று " இது தான் அவர் கூறிய பதில்.

இதுவா வழுவான இந்தியாவை உருவாக்க கிளம்பியவர்கள் கூறும் பதில் சற்று சிந்தித்து பாருங்கள் சரி நான் இசையை கேட்க்க கூடியவனாகவே இருக்கட்டும் இவர்கள் பார்க்க கூடியது எதை என்னையா அல்லது முஹ்மத் நபி (ஸல்) அவர்களையா......

இன்னும் பல இடங்களில் இவர்கள் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பை எடுத்துக் கொள்வோம் அதில் அல்லாஹ்விற்க்கு மட்டும் அடிபணிய வேண்டிய கைகள் கொடிகளுக்கும் தலைவர்களுக்கும் அடிபனிந்த அசிங்கத்தையும் பார்த்தோம் அந்த அசிங்கத்தை இவர்களின் இனையதளத்தில் போட்டதையும் பார்த்தோம்.

இந்த இசை இயக்கத்தில் இருந்துக் கொண்டு இஸ்லாத்தை பேசும் இளைஞர்களே நன்மையை ஏவி தீமையை தடுப்பது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது அல்லவா ? ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை தடுக்கவில்லை

அந்த விவாதத்தில் நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் தராமல் உங்கள் இமெயில் கொடுங்கள் பதில் அளிக்கின்றேன் என்று கூறி இருந்தார் நானும் கொடுத்தேன் இன்று வரை பதில் வரவில்லை நான் பதிலை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் இன்ஷா அல்லாஹ்...

மேலும் விவரம் வேண்டும் என்றால் Click Here......

Read more...

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010



பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 24.01.2010 அன்று காஜியார் தெருமுனையில் சகோ.ஷாபீ (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையும் ஏகத்துவத்தின் ஆடையாங்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அதிகமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

மேலும் கடந்த 06.02.2010 அன்று காஜியார் தெருமுனையில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாபீ அவர்கள் சமூக சிரழிவுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Read more...

சனி, 13 பிப்ரவரி, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)
கற்ப்புக் கொள்ளையர் தினத்தை எதிர்த்து இளைஞர் இளைஞினிகளிடத்தில் விழிப்புனர்வை ஏற்ப்படுத்தும் பணியில் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி நகர மாணவரணி களமிறங்கி செயல்பட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.....




கற்புக் கொள்ளையர் தினத்திற்க்கு முன்தைய நாள் இரவு திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள முக்கிய கடை வீதிகளில் கற்ப்புக் கொள்ளையை தடுக்கும் நோக்கத்தில் " காதலர் தினமா ? காமுகர் தினமா ? " என்ற தலைபிலான துண்டுப் பிரச்சூரங்கள் வினியோகிக்கப்பட்டன.... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி நகர மாணவரணி சார்பில் வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரச்சூரங்கள் கடை வீதிகளில் பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது.........

Read more...

வியாழன், 11 பிப்ரவரி, 2010

பிப்ரவரி 14 - கற்பு கொள்ளையர் தினம்
பிப்ரவரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வுகளை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது.

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentines day). பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளனர்.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பரிபோகும் நாளாக மாறிவிட்டது.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காம களியாட்டத்தை) ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்துகொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காம களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரமாக விஷயமாக்கிவிட்டது. கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாறி விட்டது.

உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளை‌‌ஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள்.

இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.


காதலிப்போர் கவனத்திற்க்கு :

காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுபாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியதுதான்.

பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் விவாகரத்தில்தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத்தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல, ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தைதான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன்) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்ட்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.

சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லாமல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.

காதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :

இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலையில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆன்களுக்கு எந்த நஷ்ட்டமு இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான். காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிபார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்

படிக்கும் இளைஞர்களே! காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.

இளைஞர்களே! உங்களுடைய பொருளாதாரத்தை வீணக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிறிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்பவில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விருப்பி அந்த பெண் உங்களை புறகணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோசம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.

காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்

காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று. (நூல்: புகாரி 6243)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கண்ணி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.

தன்னை பெற்ற தாய் வளார்தத தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனாவது தற்கொலை செய்து கொண்டுள்ளானா?

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்பொய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைளில் அதிகம் பார்த்திருப்பிர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட‌ சமுதாய அக்கறை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு பொய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரே காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!

பிப்ரவரி 14-ஆம் தேதி யும் டிசம்பர் 1 ஆம் தேதியும் ஒன்றே

எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமகளியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகைள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
வெளியீடு :
இளைஞர்களை நல்வழிபடுத்தும் பணியில் TNTJ மாணவர் அணி

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP