செவ்வாய், 9 ஜூன், 2009

மாணவரணியின் மாபெரும் கல்வி விழிப்புண‌ர்வு மாநாடு மற்றும் கண்காட்சி
07.06.2009 அன்று சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள மதராஸே இ அஞ்ஞும் பள்ளியில் சென்னை மண்டல மாணவரணியின் மாபெரும் கல்வி விழிப்புண‌ர்வு மாநாடு மற்றும் கண்காட்சி நடந்தது. அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையாலும் உதவியாலும் சென்னை மண்டல மாணவரணியின் மாநாடு கண்காட்சி மிகவும் வெற்றிகரமாகவும் அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் பெரும் உதவி உள்ளதாகவும் அமைந்தது.... அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.

கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சி யின் ஏற்பாடுகளை மாணவரனியின் நிர்வாகிகளான சகோ. S.சித்திக்.M.Tech- மாநில செயலாளர் அவர்களும் K.சித்திக்.DRAC மண்டல மாணவர் அணிச் செயலாளர் அவ‌ர்க‌ளும் M.நஸீர் அஹமது சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் S.ஷமீம்.M.Sc மாநில மாணவர் அணி துணை செயலாளர்(வேலை வாய்ப்பு) அவ‌ர்க‌ளும் K.பஷீர் அஹமது.MCA மாநில மாணவர் அணி துணை செயலாளர்,(கல்வி உதவி) அவ‌ர்க‌ளும் N.அல்அமீன் B.E. மாநில மாணவர் அணி துணை செயலாளர்,(பத்திரிக்கை துறை, மாணவர் பிரச்சனைகளை எதிர்கொள்வது ) அவ‌ர்க‌ளும் . முஹமது ஷபி.B.ஏ மண்டல மாணவர் அணிச் செயலாளர் (கல்வி வழிகாட்டுதல்) அவ‌ர்க‌ளும் M.அப்துல் பாசித்.B.Sc.(B.L) மாநில மாணவர் அணி துணை செயலாளர்(அரசு துறை, சட்டம்) அவ‌ர்க‌ளும் A. இம்தியாஸ் சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் O.முஹமது நூருல்லாஹ் சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் மற்றும் சென்னை மண்டல மாணவரனியின் உறுபினர்களும் மிகவும் சிறப்பாக செய்து முடித்திருந்தனர்

இந்த கண்காட்சியில் 25க்கும் மேற்ப்பட்ட அரங்குகளில் பல்வேறு துறைகளை பற்றி பல தகவல்களை தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள நமது மாணவரணியினர் ஏற்ப்பாடு செய்திருந்தனர் குறிப்பாக அங்கு அமைக்கப்பட்டிருந்த 10 மற்றும் 12 வகுப்புகள் முடித்த மாணவர்களுக்கான அரங்கம், பி.இ மற்றும் பி.டெக் போன்ற துறை பற்றிய அரங்கங்கள்,தொலை தூரக் கல்வி, முதுகளை, எம்.பி.ஏ,வேளை வாய்ப்பு, நுழைவுத் தேர்வு,சட்டக் கல்வி,பாதுகாப்புத் துறை, எம்.ஏ & எம்.காம், கலை மற்றும் வணிகம்,அறிவியல்,பொறியியல்,பத்திரிக்கைத் துறை வெளிநாட்டு படிப்புகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சம்மந்தமான அரங்குகளில் மாணவர்களும் பெற்றோர்களும் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

சகோதரர் சிவக்குமார் அவர்கள் ரேடியோகிராஃபி படிப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார் மற்றும் சகோதரர் உமர் அவர்கள் காவல் துறையில் எப்படி நுழைவது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினார். சகோதரர் சஃபி அவர்கள் நமக்கு கிடைத்துள்ள இட ஒதுக்கீடு பற்றியும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் ஒரு விளக்க உரை நிகழ்த்தினார்.
தொலை தூரக் கல்வி அரங்கில் செங்கல்பட்டை சேர்ந்த சகோ. அப்துல் வகீப் மற்றும் பைசூர் ரஹ்மான் அவர்களும் முதுகளை படிப்பு பற்றிய அரங்கில் கும்பகோணத்தை சேர்ந்த சகோ. அப்துர் ரஹ்மான் அவர்களும் எம்.பி.ஏ பிரிவில் தஞ்சையை சேர்ந்த சகோ. ஆசிக், ஜாஃபர் சாதிக் மற்றும் முஹ்மத் ரிஜ்வான் அவர்களும், வேளை வாய்ப்பு பகுதியில் சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த சகோ. ஷஜஹான், முஹ்மத் அனஸ் மற்றும் முஹ்மத் ரியாஸ் அவர்களும், சட்டக் கல்வி பகுதியில் சென்னையை சார்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக் அவர்களும் பாதுகாப்புத் துறை அரங்கில் சென்னை அசோக் நகரை சார்ந்த சகோ தமிமுல் அன்சாரி அவர்களும், எம்.ஏ & எம்.காம் படிப்புகள் பற்றிய அரங்கில் குண்றத்தூரை சேர்ந்த சகோ. முஹ்மத் உசைன் அவர்களும், கலை மற்றும் வணிகம் தொடர்பான அரங்கில் சென்னையை சேர்ந்த சகோ. முஹ்மத் இஸ்மாயில், ஜாவீத் மற்றும் முஹ்மத் யூசுப் அவர்களும், அறிவியல் துறை சம்மந்தமான அரங்கில் சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த சகோ. அப்துல் லதீப் மற்றும் சாகுல் அவர்களும் பொறியியல் படிப்புகள் சம்மந்தப்பட்ட அரங்கில் சகோ. அப்துல் கரீம் மற்றும் மீரா மொயீதீன் அவர்களும் பத்திரிக்கை துறை சார்ந்த அரங்கில் சகோ. அலமீன் அவர்களும் வெளிநாட்டு படிப்புகள் தொடர்பான அரங்கில் சகோ. ஹனீப்பா அவர்களும் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான அரங்கில் க‌டலூரை சேர்ந்த சகோ. கலீலூர் ரஹ்மான் அவர்களும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சம்மந்தப்பட்ட துறை பற்றியும் விரிவான விளக்கம் அளித்தனர்.
இதில் மிகவும் ஹைலைட் என்னவேன்றால் நமது சமுதாயத்தை சார்ந்த மாணவ மாணவிகளின் பெற்றோகள் மட்டும் இல்லாமல் மாற்று மத சகோதரர்களும் கலந்துக் கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று சென்றது தான்.




இறுதியாக நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மாணவரணி செயலாளர் சகோ. சித்திக் அவர்கள் மாணவரனியின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோ. பக்கீர் முஹ்மத் அல்தாஃபி அவர்கள் சமுதாயத்தின் கல்வியாளர்கள் நிலை என்ற தலைப்பிலேயும் வட சென்னை மாவட்ட பேச்சாளர் பெற்றோரும் மாணவர்களும்(பிள்ளைகளும்) என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தி மாணவரனியின் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியை நிறைவு செய்தனர்.

இந்த மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியின் வெற்றிக்கு முழு முதல் காரணம் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே என்பது யாரலும் மறுக்க முடியாத ஒன்று.

கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியின் புகைப்படங்கள்:

Read more...

வியாழன், 4 ஜூன், 2009


நிகழ்ச்சியின் அழைப்பிதழ்


(இன்ஷா அல்லாஹ்)

நாள் : ஜூன் 7 ஞாயிற்று கிழைமைநேரம் : காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : மதரஸாயே ஆஜம் மேல் நிலை பள்ளி, மவுன்ட் ரோடு, சென்னை ( LIC எதிரில் , ஸ்பென்சர் ப்ளாசா அருகில்)

கண்காட்சியில் இடம் பெறும் பகுதிகள்

உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்க்கான நுழைவுதேர்வுகள் பற்றி அறிய (IIT, IIM, IISc, NIT, Anna University , ect..)
வெளிநாட்டு படிப்புகள்,
வீட்டில் இருந்தே படிக்க (தொலைதூர கல்வி)
தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?
மத்திய மாநில அரசு தேர்வுகள் பற்றிய விபரம் அறிய IAS, IPS etc.. தேர்வுகள் பற்றிய விபரம் அறிய Group Exams RRB Exmans,காவல் துறை மற்றும் இராணுவத்தில் சேர்வதர்க்கான வழிமுறைகள்
பத்திரிக்கை துறையில் உள்ள படிப்புகள்
மேலும்B.E/B.Tech, M.B.B.S, M.E/M.TechB.A, B.Sc., B.Com, BBA, BCA, B.Lit etc..B.L, M.L, LLB etc..M.A, M.Sc., M.Com, etc..MBA, MCAB.Ed, M.Ed, M.Phil, PhdDiploma, ITI,B.Pharm, hotel management
போன்ற படிப்புகளை பற்றி அறிய, எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி அறியதமிழகத்தின் தலை சிறந்த கல்வியாளர்கள் பங்கு பெறுகின்றனர்
மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி
cell : 9884235802,9940205959
e-mail :
tntjedu@gmail.com visit : www.tntj.net, http://tntjsw.blogspot.com/
மாணவரணியின் இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் இன்ஷா அல்லாஹ்


Read more...

செவ்வாய், 2 ஜூன், 2009

கோடை தரும் கொடைகள்

உச்சி வெயில் அல்ல! காலை நேரத்தில் கிழக்கு சூரியனின் சுடர் முகத்தின் சிவப்பு தகத்தகாயம் தெரியத் துவங்கிய மாத்திரத்திலேயே நிலப் பரப்பில் நெருப்புச் சூடு பற்றி கொள்கின்றது அதன் பிறகு அது படிப்படியாக உச்சிக்கு வருகின்ற போது உஷ்ணத்தின் அளவும் உச்சக்கட்டத்திற்கு வந்து விடுகின்றது.

அனல் பந்தான சூரியன் அந்தி நேரத்தில் மேற்கு வானத்தில் அடைந்த பிறகும் அடக்கமான பிறகும் அது கிளப்பி விட்ட சூடு தணிந்திடவில்லை.
மின் விசிறிக்குக் கீழ் படுத்து இருந்தாலும் மேனி, வியர்வை வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கின்றது, பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் இந்த வெயிலில் சுருண்டு விழுந்தவர்களின் உயிரும் பறி போய் விடுகின்றது என்றால் இதன் உக்கிரமத்தை வர்ணிக்கத் தேவை இல்லை.

சின்னஞ்சிறு குழந்தைகளின் முகத் தாமரை மலர்களில் பொக்களங்கள்! மேனிகளில் வியர்க்குருகள்! கோடையின் இந்தக் கோரத் தாக்குதலுக்கு மாணவ, மாணவியர் பலியாகி விடக் கூடாது என்பதற்க்காக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றது.

வற்றி விடும் நீர் வறண்டு விடும் ஆறு

கோடை கால தாக்குதலின் காரனமாக நிலத்தடி நீர் வற்றி விடுகின்றது, பாய்ந்து ஓடும் ஆறுகள் காய்ந்து வறண்டு விடுகின்றன. குளம் குட்டைகள் எட்டிய தூரம் வரை தெரியும் ஏரிகள் எல்லாம் வற்றிப் பாலைவனமாகி விடுகின்றன.

இப்படிக் கோடையின் கொடூரங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம். இந்தக் கொடுமையின் ஊடே அல்லாஹ் கோடையிலும் சில அருட்கொடைகளை அருளி இருக்கின்றான்.

கோடை தரும் கொடைகள்

கொளுத்துகின்ற இந்தக் கோடையின் வெப்பத்தைத் தணிப்பதற்காக திடம் மற்றும் திரவ உணவாக இளநீர், பதநீர், நுங்கு,கிர்ணி, தர்பூசனி, வெள்ளரி போன்றவற்றை கோடை தனது கொடைகளாக தந்து கொண்டிருக்கிறது.
கோடையின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்க்காக பனை ஒலையால் முடையப்பட்ட விசிறிகளால் காற்றை வரவழைத்து வெப்பத்தை விட்டும் மக்கள் தங்களை காத்துக் கொண்டனர். இன்றைய அறிவியல் உலகம் ஒலைகளை வைத்து கிளறும் காற்று மண்டலத்தை மின் விசிறியின் இலைகளை வைத்துக் கிளறினால் என்ன? என்று கிளறியதில் பிறந்தது மின் விசிறிகள்.

கொதிக்கும் வெப்பத்தை குளித்துத் தணித்தல்

கொதிக்கும் வெயிலிலிருந்து தப்பிப்பதற்காக குளிரும் நீரில் விழுந்து குளித்து இளைப்பாறிக் கொள்கின்றான். குளிர்ந்த நீரைக் குடித்து தாகத்தை தணித்து தண்னை இதப்படுத்திக் கொள்கின்றான். தன் இதயத்தை ஈரப்படுத்திக் கொள்கின்றான்.

கொஞ்சம் காசிருந்தால் ஏ.சி யில் குளிர்ந்து கொள்கின்றான். இது செயற்க்கை! இந்த சுகத்தை இயற்க்கையாகவே அனுபவிக்க வேண்டும் என்று ஊட்டி கொடைக்கானல் என்று குடும்பத்தோடு செல்கின்றான். இதற்காக முண்டியடித்துக் கொண்டு முன்பதிவு செய்து கொள்கின்றான்.

எல்லாம் எதற்க்காக ? ஓர் இரண்டு மாத கோடையிலிருந்து தப்புவதற்க்காக!

இப்போது கொஞ்சம் நினைத்து பாருங்கள் ! இந்த உலகத்தில் வருடம் முழுவதும் கோடையாக இருந்தால் நமது பாடு எப்படியிருக்கும்? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!

கோடையை தணிப்பதற்குக் காற்று, மாலை நேரத் தென்றல் ஏ.சி. குடிக்கத் தண்ணீர், குளிக்க ஆறுகள், கோடை மழை, ஊட்டி கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்கள் என அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பயன்படுத்திக் கொள்கிறோம் இது அனைத்தும் இந்த உலகத்தில் தான். மறுமை உலகம் ஒன்றுள்ளது. அங்குள்ள நரகம், அதில் தங்குவோருக்கு அது தான் நிரந்தர உலகம். அதை பற்றி அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்.
நிரந்தர நெருப்புலகம்

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்

(அல்குர்ஆன் 78:23)

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.

(அல்குர்ஆன் 87:12,13)

அவர்களின் மேற்புறத்திலிருந்து கால்களுக்குக் கிழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாள்! " நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்காள்" என்று (இறைவன்) கூறுவான்.

(அல்குர்ஆன் 29:55)

குளிர் நீரல்ல! கொதி நீரே!

அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களை சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்

(அல்குர்ஆன் 18:29)

அதற்க்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர். தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.

(அல்குர்ஆன் 56:54,55)

அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அதை மிடறு மிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்க்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது.

(அல்குர்ஆன் 14:16,17)

இப்படி நிரந்தர உலகை நினைவுருத்துவது தான் கோடை!

"வெப்பம் கடுமையாகும் போது லுஹரைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்: புகாரி 534, முஸ்லிம் 72

இந்த கொடிய நரகத்திலிருந்து நிரந்தர சுவனபதி செல்வதற்காக இந்தக் கோடையிலிருந்து பாடம் கற்போமாக! நிரந்தர நரகத்தில் சேர்க்கும் கொடிய பாவமான இணை வைப்பு என்னும் பாவத்தை விட்டு நம்மையும் நம் சமுதாய மக்களையும் காப்பதற்க்கு நாளும் உழைப்போமாக! அதுவே நமது இலட்சீயமாகும்.

Read more...

திங்கள், 1 ஜூன், 2009

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


முஸ்லீம்களின் கல்வி பொருளாதார நிலை ஓர் ஆய்வு, தீர்வு


கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமுகங்களை விட முஸ்லீம் சமுதாயம் பின் தங்கி உள்ளது. தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லீம் சமுதாயம் பின் தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்−ம்களின் கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமூகம் கடைரிலையில் உள்ளது. 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லீம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லீம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள் 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%, +2 வரை படித்தவர்கள் 7.8%, டிப்ளோமா வரை படித்தவர்கள் 4.4% பட்ட படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே, 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்−ம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லீம்கள் தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லீம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.


இதுதான் முஸ்லீம் சமூகத்தின் தற்போதைய நிலை, இது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லீம் சமுதாயம் மிகவும் பின் தங்கிவிடும். சில பெற்றோர்கள் உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக படிக்கும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதன் அபாயத்தை அவர்கள் உணர்வதில்லை, இன்றைக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இடத்தின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது, இதனால் வீட்டு வாடைகையும் உயர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் நாம் சம்பாதிக்கும் 3 ஆயிரம், 5ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்றது இதனால் முஸ்லீம்கள் நிரந்தர நரகத்திற்கு அனுப்பும் வட்டியில் சிக்க நேரிடும், மேலும் பொருளாதார தேவையால் சமூக சீர்கேடுகள் அதிகரித்துவிடும்.


கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும் பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர், இந்தியாவில் வேலை இல்லை என்று இவர்களாக முடிவு செய்து கொண்டு வெளிநாடு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை பிரிந்து அயல் நாட்டில் கஷ்டப்பட்டு, குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், கணவன் இருந்தும் இல்லாத நிலையில் வாழும் மனைவி, தந்தை இருந்தும் இல்லாத நிலையில் வளரும் பிள்ளை, இது முஸ்லீம் சமுதாயத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகளை உருவாக்குகிறது.


ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வளர்த்தால்தான் பிள்ளைகள் அறிவுள்ள, ஆற்றல் உள்ள, ஒழுக்கமுள்ள மார்க்க அறிவுள்ளவர்களாக ஆவார்கள். அந்த பிள்ளைகள் தான் குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றக் கூடியவர்களாக ஆவார்கள்.


குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் முஸ்லீம் இளைஞர்கள் வேலைக்கு செல்வதால் இந்த சமூகம் முதுகெழும்பில்லாத பாதுகாப்பற்ற சமூகமாக மாற வாய்ப்புள்ளது. சமுதாயத்திற்கு ஒரு ஆபத்து, கலவரம் என்று வந்தால் பாதுகாக்க ஆண்கள் அற்ற அவலநிலை உருவாகின்றது, இந்த அபாயத்தை முஸ்லீம் இனைஞர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.


இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன, இந்தியா என்பது நமது நாடு இந்திய விடுதலைக்காக பெரிதும் பாடுபட்டது முஸ்லீம் சமுதாயம் இங்குள்ள அனைத்து வளங்களும் நமக்கும் சொந்தமானவை, இதை பெறுவதற்கு முறையான கல்வி அவசியம்.


மருத்துவ துறையில் முஸ்லீம்கள் 4.4% தான் உள்ளனர். சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லீம் கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லீம் சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும். மேலும் முஸ்லீம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனபடுத்த வேண்டும் என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது ஆர்.எஸ்.எஸ். இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கின்றது. அதிகமான முஸ்லீம் மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.


எனவே முஸ்லீம்களே! விழித்து கொள்ளுங்கள்! இந்த அவலநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லீம்கள் அனைத்து துறைகளிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்தியாவில் தனிமைபடுத்தப்பட்ட சமூகமாவார்கள். படிப்பறிவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல், சமூககட்டமைப்பு இல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இந்த சமூகம் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


யார் காரணம்?


இந்த அவலநிலைக்கு முஸ்−களை இழுத்து சென்றது எது? யார் இதற்கு காரணம்?


முஸ்லீம் அரசியல் வாதிகள்


முஸ்−ம்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் அரசியல் வாதிகள் இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கரை இல்லாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த சமூகத்தை அரசியல் வாதிகளிடம் அடகுவைத்தனர் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சி, இடஓதுகீடு போன்ற சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபடாமல் பெரிய அரசியல் கட்சிகளுக்கு புகழ்பாடி தங்களை மட்டும் வளபடுத்திக் கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்த முஸ்லீம் சமுதாயம் கீழ் நிலைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்து சிறிதளவும் இதன் வளர்ச்சிகாக சிந்திக்கவில்லை. இன்னும் இவர்கள் இதே நிலையில்தான் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.


இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் :


முஸ்−ம்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக முஸ்−ம்களின் நிதி உதவியால் நடத்தப்படும் மதராஸாகளில் இலவசமாக பயின்ற இந்த ஆ−ம்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை, சமூக வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை ஜும்ஆ மேடைகளில் அவ்லீயாக்களை பற்றியும், தர்ஹா, மவ்லுதுகளை பற்றியும் பேசி தங்களுடைய வயிறுகளை வளர்த்துக்கொண்டார்கள். இன்றளவும் ஆங்கிலம் படிக்க கூடாது, அது ஹாராம் என்று வாதிடும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள சில கோமாளிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முழுநேரத்தையும், μர்க், பித்அத் கொள்கையை பரப்புவதற்காக செலவழித்து, முஸ்லீம்கள் அல்லாஹ்விடம் கேட்பதை தடுத்து நிறுத்தி இறந்தவர்களிடம் கேட்கசெய்து அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும் ரஹ்மத்திற்கு பதிலாக சாபத்தை பெற உதவினர்.


சமுகத்தில் படித்த கல்வியாளர்கள்


சமுதாயத்தில் படித்து உயர்நிலையில் உள்ள சொற்பமான சிலர் சரியான மார்க்க அறிவில்லாமலும், சமூக வளர்ச்சியில் அக்கரைகாட்டாமலும் சுய நலமாக இருக்கின்றனர், சமூக பணியில் உள்ள கல்வியாளர்களும் தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமை, புகழ், பெருமையின் காரணமாக பிளவுண்டு கிடைக்கின்றனர்.


கல்விக் கூடம் நடத்துபBoldவர்கள்


அரசாங்கத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று கூறி சலுகைகளை பெறும் இவர்கள் முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த சலுகைகளையும் அளிக்காமல் பகல் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களுடைய நிறுவனங்களில் முஸ்லீம் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை ஒரு சில மாணவர்களுக்கு உதவுதாக கணக்குகாட்டி கல்வியை வியாபாரமாக்கி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.


பெற்றோர்கள்


உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பதில்லை, சிறுவயதில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது என்பது அவர்களின் கை, கால்களை வெட்டி ஊனமாக்குவதற்கு ஒப்பாகும். பிள்ளைகளை சம்பாத்திக்கும் இயந்திரமாக கருதி அவர்களின் கல்வி கற்கும் உரிமையை பரித்து எதிர்காலத்தில் அவர்களை வறுமையிலும், அறியாமையிலும் தள்ளுவது அன்பின் அடையாலமல்ல.


ஊடங்கள்

முஸ்லீம்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய சமூகத்தில் இருந்து முஸ்லீம்களை தனிமை படுத்தி முஸ்லீம்கள் மீது வெறுப்பை இந்த மீடியாக்கள் (பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி) முயன்று வருகின்றன. தொடர்ந்து செய்யப்படும் இந்த பொய் பிரசாரத்தில் முஸ்லீம்கள் மனரீதியாக பலவீனப்படுத்துகின்றனர்.


அதிகாரிகள், அரசியல் வாதிகள்


பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய விரோத போக்கையே கையாளுகின்றனர் இட ஒதுகீட்டை கொடுத்தாலும் கிடைக்காமல் செய்வதற்கான நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறனர். அரசு அதிகாரிகளும் முஸ்லீம்கள் என்றால் ஒரு வெறுப்பு மனப்பாங்கோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.


தீர்வு என்ன?


பல்வேறு முஸ்லிம் அறிஞர்களும், கல்வியாளர்களும் ஆய்வு செய்து பல்வேறு தீர்வுகளை வெளியிட்டுள்ளனர். இருந்தும் இந்த சமுதாயம் இன்னும் பின்தங்கி கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வுகளை சொல்லவதுதான். முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும், முஸ்லீம் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் போன்ற தீர்வுகள் உபயோகமற்றது, இப்படி சிலர் முயற்சி செய்து தோல்வியை தழுவி உள்ளனர். தலைவர்களிடம் காணப்படும் பெருமை, ஆதிக்க சிந்தனை, உலக ஆதாயம் போன்றவை ஒன்றுபட விடுவதில்லை.


அப்படிஎனில் இதற்கு தீர்வுதான் என்ன? டி.என்.டி.ஜே மாணவர் அணி நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வை வழங்காது, எல்லோரும் நடைமுறைபடுத்தக்கூடிய எளிதில் முன்னேற கூடிய தீர்வை பார்போம்.


அனைத்து முஸ்லீம் ஆண்களும், பெண்களும் பட்டம் படிக்க வேண்டும், உயர்கல்வி கற்ற வேண்டும், அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறவேண்டும். படித்து முடித்தவர்களுக்கு வேலை வாங்கி தரவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, பணகாரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அவர்கள் படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும்.


பெண்கல்விக்கும், கிராமப்புர மாணவர்களின் கல்விக்கும் முக்கியதுவம் கொடுக்க வேண்டும்.


இதை எளிதில் சொல்லிவிடலாம் ஆனால் எவ்வாறு எளிதில் நடைமுறைபடுத்துவது என்பதை காண்போம்.


1. இவை அணைத்தையும் சாதிக்க மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் முறையான வழிகாட்டுதல் இருந்தால் போதும்.


2. இந்த பணியை செய்யக் கூடியவர்கள் அல்லாஹ்வுக்காக மட்டும் பணியாற்றக்கூடிய ஷிர்க் வைக்காத தவ்ஹீத் வாதிகளாக இருந்தால் மட்டுமே அல்லாஹ்வின் உதவியோடு எளிதில் சாதிக்கலாம்.


3. டி.என்.டி.ஜே மாணவர் அணி படிப்பை பொருத்தவரை Prekg முதல் Phd வரை உள்ள பெரும்பாலும் எல்லா படிப்புகளை பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது.


4. வேலை வாய்ப்பை பொருத்தவரை மாதம் ரூ. 8000 இருந்து 8 லட்சம் ரூபாய் வரை இந்தியாவில் சம்பாதிக்க உள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளது.


5. உயர்கல்வி கற்க பணம் அவசியம் இல்லை, அதிக அளவு மதிப்பெண் எடுத்தால் எத்தனையோ பேர் நிதிஉதவி செய்யத்தயாராக உள்ளனர். அதிக மதிப்பெண் எடுப்பது மிக எளிதானதே, இதற்கு அதிக பணம் கொடுத்து பெரியபள்ளி கூடங்களில் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அரசு பள்ளிக் கூடங்களில் படித்தே மிகஅதிக மதிப்பெண் எடுக்க முடியும். இதற்கு கல்வியை பற்றியை சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும். இந்த நுணுக்கங்களை டி.என்.டி.ஜே மாணவர் அணி நடத்தும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அறிந்துகொள்ளலாம்.


6. முஸ்லிம் மாணவ, மாணவியர்கள் குறைந்த மதிப்பெண் எடுப்பதற்கு அவர்களின் பெற்றோகளின் கல்வி அறிவின்மைதான் காரணம். டி.என்.டி.ஜே மாணவர் அணியில் பங்கு பெருவதின் மூலம் படித்த கல்வியாளர்களைக் கொண்டு முறையான சரியான வழிகாட்டுதல் வழங்குகின்றோம்.


7. படித்து முடித்தவர்கள் வேலை பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள Spoken English, Communication Development போன்ற பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்துகின்றோம்.


8. 10ஆம், +2 தேர்வுக்கு முன்னதாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வழிவகை செய்கின்றோம்.


9. கல்வி கற்பது ஒவ்வொறு முஸ்லிமின் கடமை என்பதை போதித்து மார்க்க ரீதியாக கல்வியின் அவசியத்தை வழியுறுத்துகின்றோம்.


நீங்கள் செய்ய வேண்டியது என்ன?


மேற்சொன்ன காரியங்களை செய்ய பணம் தேவையில்லை உங்கள் ஒத்துழைப்பு போதுமானது உங்கள் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கல்வி வேலைவாய்ப்பு பற்றிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து டி.என்.டி.ஜே மாணவர் அணியை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் வழிகாட்ட தயாராக உள்ளோம்.


மாவட்டம் மற்றும் கிளைதோறும் டி.என்.டி.ஜே மாணவர் அணி இலவசமாக நடத்தும் சிறப்பு பயிற்சி முகாம்கள், வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.


உங்கள் பகுதியில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியர்களை கணகெடுத்து டி.என்.டி.ஜே தலைமைக்கு அனுப்புங்கள்.


உங்கள் பகுதி கல்வியில் மிகவும் பின்தங்கி இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் பகுதியில் முகாமிட்டு சிறப்பு பயிற்சி அளித்து கல்வி வளர்ச்சிக்கு உதவுவோம்.


கல்வியிலும் பொருளாதாத்திலும் முன்னேற பணம் அவசியமில்லை அல்லாஹ் மீது நம்பிக்கையும் ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால் போதும்.


மாணவ, மாணவியர்களே உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். உங்களை வளபடுத்திக்கொள்ள நீங்கள் தயாராகுங்கள்.


'''எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன் அறிந்தவன்.' அல்-குர்ஆன்(8:53)



மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்க,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாணவர் அணி


30, அரண்மனைக்காரன் தெரு


மண்ணடி, சென்னை - 600001.


Cell : 9884235802,


E-Mail - tntjedu@gmail.com


Web : www.tntj.net blog : www.tntjsw.blogspot.com

Read more...

வெள்ளி, 29 மே, 2009

கல்வி உதவி

கல்வி உதவி செய்யும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்

1.MUSLIM EDUCATIONAL INSTITUTION AND ASSOCIATION IN TAMILNADU
OMEIAT Anjuman Campus,
#16,B.N. Reddy Road, T.Nagar,Chennai – 600017
2.BAITULMAL TAMILNADU
New No: 100(Old No: 314)
Wallajah Mosque Compond, Triplicane, Chennai – 600005
Phone: 91-044-28512947 / 28411145
3.ISLAMI BAITULMAL
Hajee Abdul Raheem Sahib Street,
Fort, Vaniyambadi- 635751. Tamilnadu
Email: tahmed.iftikhar@gmail.com
Contact: Pudupet Abdullah Basha
Phone: 04174-225481
4.SEETHAKATHI TRUST
688,Anna Salai,Greams Road,
Chennai- 600006. Tamilnadu
Phone No 28522982
WEB: www.crescentcollege.org
6.FATHIMA EDUCATIONAL TRUST
16/298, LIC Colony, Hotal Vasantham Road,
New Bus Stand, Salem – 636004. Tamilnadu.
WEB: www.fathimaedutrust.org
Phone: 0427 – 4041899, 98659-78889,93606-84974
7.MUSLIM EDUCATIONAL ASSOCIATION
87,Peters Road, Royapettah,
Chennai – 600014 Tamilnadu. Phone No 28267318
8.NOORUL ISLAM EDUCATIONAL TRUST
Kumaracoil, Kanyakumari District – 629180
Tamilnadu, INDIA, Web: info@niceindia.com
9.SULAIMAN ALIM CHARITABLE TRUST
Suite 4, 4th Floor, Jhaver Plaza, 1-A,
Nungambakkam High Road, Chennai – 600034
Phone : 28115935
10.THE CHILDREN FOUNDATION
Post Box No – 5007, Chennai – 600090
Tamilnadu
Email: info@childrenfoundation.net
Web: www.childrenfoundation.net
Students studying from the Vth to XII standard
11.ALL INDIA CARAVAN-E-INSAAF
Mr.Mushtaq Ahmed
21,Royapettah, High Road, Chennai – 14,Tamilnadu
Mob:09444052530, Web: www.caravan-e-insaaf.com
12.SOUTH INDIAN EDUCATIONAL TRUST
Coimbatore No44 Divine, Ganapathy Coimbatore.
Mobile : +919894619874
Email: sietcbe@southindianedu.org
Chennai Mobile : +919840314436
Email: sietchn@southindianedu.org
12.TAMAM
P.O.BOX: 1263, MUTTRAH-114, SULTANATE OF OMAN

கல்விக்காக அரசு உதவிகள்

1.Directorate of Minorities Welfare
807,Anna Salai, Chennai 600002
Tamilnadu Minorities Economic Development Corporation Ltd
5th Floor, Anna Salai, Chennai 600002
2.National Commission for Minorities,
5th Floor Lok Nayak Bhavan, Khan Market,
New Delhi 110003, Tel. 24618349, Fax 24693302,24642645.
Email: ncm-mma@nic.in , www.ncm.nic.in
3.National Minorities Development and Financial Corporation.
Taimoor Nagar, New Friends Colony Nehru Nagar Delhi – 110065
Landmark : Near S.R.R.I Staff Quaters
Phone: 011-26326051

வெளி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் நிறுவனங்கள்

1.ALL INDIA MUSLIM MAJLIS-E-MUSHAWARAT
D-250, ABDUL FAZAL ENCLAVE-I, JAMIA NAGAR NEW DELHI – 110025.
TEL: ++91-11-26946780, FAX: 26947346
EMAIL: mushawarat@mushawarat.com
2.SOUTH INDIAN EDUCATIONAL TRUST
Banglore Branch
3/10,DGQA Complex,
J.C.Nagar, Banglore
Ph: 080 23535731
Mobile : +91 9846601211
sietbglr@southindianedu.org
3.Aamir Mustafa Kidwai Trust
Contact: Mrs Aziza Kidwai
B-28 West End Colony, New Delhi – 110021;
Tel. 011-24670009, Mob: 09868679107
4.Central Wakf Council
14/173, Jam Nagar House, Shahjahan Road,
New Delhi – 110011; Tel: 23384465: Fax: 23070881;
Email: central.wakf.council@vsnl.net
Web: www.wbmdfc.org/wakf/index.html
Criteria: Father’s Annual income not more than Rs. 75000.00 per annum Scheme: Scholarship to students of BE, MBBS, BDS, B.Sc, A.M.D.Sc(Alig), MBA, M.Sc, L.L.B, Scholarship Rs 6000.00 per annum
5.Aamir Mustafa Kidwai Trust
Contact Person: Mrs Aziz Kidwai
B-28, West End Colony; New Delhi – 110021;
Tel. 011-24670009, Mob: 09868679107
Scheme: Financial assistance & scholarship for pursuing higher studies to needy and meritorious persons belonging to educationally backward minorities.
6.Al-Ameen Charitable fund Trust super tannery(I) Ltd.
Jajmau Road, Jajmau, Kanpur-208010(UP)
Scheme: Post Metric Scholarship for higher education.
7.Dawodbhoy Fazalbhoy Muslim Educational Trust
42,Ibrahim Md, Merchant Road, Dhadah Khadak, Mumbai 400029
Email : assurfam@vsnl.com
8.GBK Charitable Trust
Giyasuddin babukhan, Chairman and Managing Trustee, GBK Charitable Trust,Begum pet, Hyderabad.
Scheme: Poor Student studying MBBS, BDS, Pharmacy, BE, B.Tech, LLB, BCA, MCA,MA,M.com, B.com, B.Ed, M.Ed, Ph.D (for research meterial), nursing, polytechnic, graduation, inter, TTC, ITI, Distance education, post
9.Foundation for Social Care Director.
Scholorship programe : Ziaur-Rahman Siddiqul
185/A Johari Farm, Jamia Nagar, New Delhi 110025
Tel: (011) 26317311, Email : fsc_admin@rediffmail.com
Email: fscscholarship@yahoo.co.in; www.fscwecare.org
10.Hamdard Educational Society
Talimabad,Sangam Vihar New Delhi 110062;
Tel: (001)6085063 – 6085064,
Email: inquiry@jamiahamdard.edu
For Science At Secondary level
11.Jamiat-Ulama-e-Hind
No1, Bahadur Shah Zafar Marg, New Delhi – 110002;
Ph:23311455,3317729 Criteria: Needy and meritorious student
Scheme: Mujahid Millat Educational Scholarship to meritorious student seeking admission to Engineering(civil, Elec., Electronics, Computer), MCA, Chartered Accountant.
12.Sir Syed Scholarship Trust(Regd.)
Samreena Lodge, Muzammil Manzil, ADM Compound Road,
Aligarh, U.P. 202002; Phone 0571-2706418
Person to Contact: Prof.Ziaul Hasan or Mr.Usman Ansari
Email: zhsst@hotmail.com, mosul1968@yahoo.com
13.Muslim India Educational and Cultural Trust(MIECT)
D-250, Abdul Fazal Enclave, Jamia Nagar, New Delhi- 110025
Tel: 26326780 Fax: 26327346
Email: muslim@del3.vsnl.net.in
www.mushawarat.com

வெளி நாட்டில் படிக்க முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் நிறுவனங்கள்

1.Aga Khan Foundation(UK)
Sarojini House, 6 Bhagawan Das Road, New Delhi 110001
Scheme: University study in the UK for grad and post grad programmes.
2.INTREST FREE LOAN & GUIDANCE
President, Indian Fishermen Charity, 17, Wellington Estate,
24,Ethiraj Salai, Chennai(Tamilnadu) – 600105
Interest Free Loan and Guidance for School & College students for studies in abroad with visa

முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள்

1.AIMAN SANGAM
PO BOX 3207, Abu Dhabi, United Arab Emirates
www.aimansangam.com
2.The Barakat Trust(UK)
The Oriental Institute, The University of Oxford
Oxford OX1 2LG, Tel: 00 44 (0) 1865278069
Fax:00 44(0) 1865278228, www.barakat.org/grants.php
Basic Research, Education and Developement(BREAD)
3.Fadel Educational Foundation, Inc
FEF, Inc., PO Box 212135, Augusta, GA 309172135 USA
Toll-Free Fax: 866-705-9495(US Only)
www.fadelfoundation.org
a non-profit educational foundation supporting education for Muslim US citizens and permanent residents. The awards are distributed on a need/merit basis.
4.KINGS FAISAL FOUNDATION PROGRAMS & RESEARCH DEPT.
Physical Address: KFF Building, Kings Fahed road Olaya,
Riyadh, Kingdom of Saudi Arabia; Tel: +966-1-465-2255
Fax: +966-1-465-6524 Postal Address: PO Box 352 Riyadh 11411 Saudi Arabia
info@kff.com www.kff.com/english/kff/ea/ss/ssterms_cond.html
5.Muslim Hands
148-164 Gregory Boulevard, Nottingham NG7 5JE; United Kingdom;
www.muslimhands.org contact@muslimhands.org
Application from overseas Muslim students to study in the UK are occasionally considered by the Trust. Please note that the trust does not have a particular focus on this area of grant-making. Application in writing to S Bashir at the address.
6.Muslim World League Secretariat General Education Affair
No.40, PO Box 537, Makkah-Al-Mukarramah, KSA
Tel: 5422733 Fax: 5436619/5444787
Criteria: Recommendation from either a person or a organization trusted by Rabita. Non-receipt of scholarship from any other institution
Scheme: Scholarship for B.Sc Programme in Arabic or Islamic Course holding a general secondary school certificate or it’s equivalent.
7.Islamic Research Foundation International, Inc.
Ibrahim B.Syed, Ph.d president 7102 W.Shefford Lane, Louisville, KY 40242-6462,USA
IRFI@INAME.COM www.irfi.org

முஸ்லிம் பெண்களுக்கு கல்வி உதவி செய்யும் நிறுவனங்கள்

1.Muvattupuzha Islamic Education Trust
Market PO, Muvattupuzha, Kochi – 686673, Kerala, India
Phone : +91-485-2833125, 3256056, +91-9447814250
Email: mail@mietorphanage.com
2.Maulana Azad Education Foundation
Social Justice Service center, Mahila Imdad Committee,
Opposite New Delhi Railway Reservation Center,
Chelmsford Road, New Delhi – 110055;
Phone/Fax : 011-23583788, 23583789
Application for Maulana Azad national scholarship for girls can be submitted in between 1st July to 30th September every year
3.Waqf women Foudation
No.530, 5th Floor, MS Building, Vidhan Vidhi, Banglore, Karnataka
Scheme: Scholarship for female Muslim students for medical courses(MBBS,BUMS), Dental engineering and Ded(TCH).
4.Kerala Govt. Scholarships
Apply to: Director of Collegiate education,
Trivandrum – 695033
Director of Collegiate Edn Floor, Vikas Bhavan,
Trivandrum-695033,Kerala
Merit Scholarship(based on SSLC marks)
Kerala govt. Scholarship(+2,degree,PG)
Cultural Scholarship
மேலும் விவரங்களுக்கு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி
30,அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை 600001
கல்வி:
tntjedu@gmail.com, 9840684403
கல்வி உதவி:
tntjaid@gmail.com, 9841069924
வேலை வாய்ப்பு:
tntjjobs@gmail.com, 9894658355
போன்: 044-25215226,044-25241470
www.tntj.net
www.onlinepj.com
www.tntjsw.blogspot.com
www.tntjjobs.blogspot.com

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP