செவ்வாய், 16 ஜூன், 2009

கிரிக்கெட் மோகம்
பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பலகோடி முட்டாள்கள் பார்க்கின்றார்கள் என்று ஒருவர் ஒரு விளையாட்டைப் பற்றிக் கூறினார். அது தான் கிரிக்கெட் என்ற விளையாட்டாகும்.

இன்றைக்கு நம் இந்திய நாட்டில் தேச பக்திக்குரிய அடையாளமாக இந்த விளையாட்டு மாறிவிட்டது.

இந்திய கிரிக்கெட் அணியை நேசிப்பவன் தான் உண்மையான இந்தியன். மாற்று அணியையோ, அந்த அணி வீரர்களின் விளையாட்டையோ ரசிப்பவன் இந்தியாவிற்கு எதிரானவன் என்று கருதுமளவிற்கு இந்த விளையாட்டு இந்திய மக்களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்று விட்டது. அரசியல்வாதிகள் கூட கிரிக்கெட் வீரர்களைக் காட்டி ஓட்டுகளைப் பெற்றுவிடலாம் என்ற முடிவிற்கே வந்து விட்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் துவங்கியவுடன் நம் இந்திய நாடே ஒரு வித பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்து மதத்தவர்கள் இந்தியா வெற்றி பெறுவதற்காகப் பலவிதமான யாகங்களைச் செய்து கொண்டிருக்கும் வேளையில் சில இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையும் நடத்தியுள்ளனர்.

மேலும் நம் நாட்டின் பிரதமர், இந்திய அணி வெற்றி பெற பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எங்கும் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றுமா? என்ற பேச்சு தான். இந்த கிரிக்கெட் மோகத்திற்கு பெண்களும் விதிவிலக்கல்ல..

தாங்கள் நேசிக்கும் அணி தோற்றுவிட்டால் அதற்காக மிகப்பெரும் அளவில் கவலைப்படக்கூடிய மக்களையும் பார்க்கிறோம். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்று விட்டதற்காக ஒரு ரசிகர் மாரடைப்பில் இறந்து விட்டார். விளையாட்டு வீரர்களின் உருவப் பொம்மையை எரிப்பது, அவர்களின் வீடுகளைத் தாக்குவது போன்ற வன்முறைச் செயல்களிலும் தீவிர ரசிகர்கள் ஈடுபடுகின்றனர். இந்தியா தான் ஜெயிக்கும், பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என்று இரு பிரிவாகப் பிரிந்து பலர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

இந்தக் கிரிக்கெட் மோகம் முஸ்லிம்களையும் விட்ட பாடில்லை. இறைவனைத் தொழுவதற்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களிலும் கூட இந்த கிரிக்கெட் பேச்சு தான்.

பல ஊர்களில் மார்க்கப் பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்யும் போது இன்றைக்கு மேட்ச் உள்ளது; மக்கள் நிகழ்ச்சிக்கு வருகை தர மாட்டார்கள்; எனவே வேறொரு நாளில் வைத்துக் கொள்வோம் என்ற ஆலோசனையைப் பலர் கூறுகிறார்கள்.

பலர் இந்த போட்டியைப் பார்த்து ரசிப்பதிலேயே தங்கள் தொழுகையை மறந்து விடுகிறார்கள். நல்லமல்களைத் தொலைத்து விடுகிறார்கள்.குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றாதவர்கள் அறியாதவர்கள் வேண்டுமானால் வழி தெரியாமல் இது போன்ற விளையாட்டுக்காகத் தங்கள் நேரங்களையும் காலங்களையும் வீணாக்குவார்கள். ஆனால் குர்ஆன், ஹதீஸை கொள்கையாகக் கொண்டவர்கள் கூட இது போன்ற வீணான காரியங்களில் மூழ்குவது தான் நமக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:
”(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” என கூறுவீராக!

(அல் குர்ஆன் 63:11)

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 6:32)

இந்த வசனங்களில் இறைவன் கூறுவதைப் போன்று தான் நம் சமுதாயத்தவர்களின் நிலை மாறிவிட்டது. இந்த விளையாட்டைப் பார்ப்பதற்காக பலர் தொழுகைகளைத் தொலைத்து விடுகின்றனர். இரவு முழுவதும் இதைப் பார்ப்பதற்காகக் கண் விழித்துக் காத்திருக்கின்றனர்.பொழுது போக்கிற்காக, குறிப்பிட்ட நேரம் மார்க்கத்திற்கு முரணில்லாத எந்த ஒரு விளையாட்டையும் பார்ப்பது தவறு கிடையாது. ஆனால் இந்த விளையாட்டைப் பார்ப்பதை மார்க்கக் கடமை போல் கருதி, மார்க்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் கூட புறந்தள்ளி விட்டு, தங்களுடைய காலங்களையும் நேரங்களையும் வீணாகக் கழிப்பவர்களை காலத்தின் அருமையை உணராதவர்கள் என்றே கருத வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

(அல்குர்ஆன் 104வது அத்தியாயம்)

தமக்குக் கிடைத்த மிகக் குறைந்த வாழ்நாட்களில் நல்லறங்கள் செய்து நன்மைகளை சேர்க்காமல் அவற்றை வீணாக்குபவன் மிகப்பெரும் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட அத்தியாயத்தில் இறைவன் நமக்கு உணர்த்துகிறான்.

காலத்தின் அருமை தெரியாமல் நாம் அவற்றை வீணிலும் விளையாட்டிலும் கழித்து விடக் கூடாது. நம்முடைய மரணம் வருவதற்கு முன்பாகவே நமக்கு கிடைக்கின்ற காலங்களை நல்லறங்கள் செய்வதிலே விரைவு படுத்த வேண்டும்.. இதைத் தான் இறை நம்பிக்கையாளர்களுக்குரிய பண்பாக இறைவன் கூறுகின்றான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

(அல்குர்ஆன் 3:114)

அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன் 21:90)

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 3:133)

இவ்வுலக வாழ்க்கையில் நம்மை ஈர்க்கின்ற இந்த வீணான மனோ இச்சைகளில் அளவு கடந்து வீழ்வது தான் நம்முடைய மறுமையின் தோல்விக்குக் காரணமாக அமைகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவர்க்கம் சிரமங்களால் சூழப்பட்டுள்ளது. நரகம் மனோஇச்சைகளால் சூழப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: தாரமி (2720)

நமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களை வீணிலும் விளையாட்டிலும் கழித்து விடாமல் மறுமை வாழ்வின் வெற்றிக்காக அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நபியவர்கள் பல ஹதீஸ்களில் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து நற்செயல்கள் புரிந்து கொள்ளுங்கள். (அக்குழப்பங்களின் போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறை மறுப்பாளனாக மாறி விடுவான். மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இû றமறுப்பாளனாக மாறி விடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்று விடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் (186)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கி விடும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி (6514)

மேலும் பலர் தமக்குரிய ஒய்வு நேரங்களை சரியாகப் பயன்படுத்தாததால் இழப்புக்குள்ளாகி விடுகின்றனர் எனவும் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம்
2. ஓய்வு
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி (6412)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் எங்களுக்குரிய மூங்கிலாலான ஒரு குடிசை வீட்டைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் நபியவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, ”இது என்ன?” என்று கேட்டார்கள். ”வீடு பாழடைந்து விட்டது. அதைச் சரி செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள், ”(மரணம் என்ற) அக்காரியம் இதை விட மிக விரைவானது” என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதி (2257)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தை செலவிடு. உனது இறப்புக்குப் பிந்திய நாளுக்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு.

நூல்: புகாரி (6416)

எனவே விளையாட்டை விளையாட்டாகக் கருதுவோம். நம்முடைய அதிகமான கால நேரங்களை நல்லமல்கள் அதிகம் செய்வதில் ஈடுபடுத்துவோம். இறைவன் நம் அனைவரையும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக ஆக்கி அருள்புரிவானாக!

-இப்னு யூசுப் கடையநல்லூர்

Read more...

சனி, 13 ஜூன், 2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே) தனி மனித இயக்கம ?
இது எந்த அளவுக்கு உண்மை?

? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி மனிதனை தக்லீத் (கண் மூடிப் பின்பற்றுதல்) செய்கின்றனர் என்பது தான் தற்போது செய்யப்படும் பிரச்சாரம். இது எந்த அளவுக்கு உண்மை?

! எந்த மனிதனையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எனவே தவ்ஹீத் ஜமாஅத்திலும் இதற்கு அனுமதி இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்துவோர் அதற்கான சான்றுகளை எடுத்துக்காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இந்த விஷயத்தில் குர்ஆன் வசனம் இப்படிக் கூறுகிறது. நபிவழி இப்படிக் கூறுகிறது. அதற்கு மாற்றமாக பி. ஜைனுல் ஆபிதீன் இவ்வாறு கூறுகிறார். அதை தவ்ஹீத் ஜமாஅத்தினர் கண்ணை மூடிப் பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட வேண்டும். அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தின் உரைகளில் ''நாங்கள் மார்க்கம் என்று எதை உங்களுக்குச் சொல் கிறோமோ அதைக் கண்ணை மூடி ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமது மேடைகளில் இதற்கு எதிராகத் தான் பேசப்பட்டு வருகின்றது. நாங்கள் சொல்வது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால் அதைப் பின்பற்றாதீர்கள் என்பது தான் 25 ஆண்டுகளாக நமது பிரச்சாரமாக இருந்து வருகிறது. எனவே பி. ஜைனுல் ஆபிதீனையோ வேறு எந்த மனிதரையுமோ இந்த ஜமாஅத் ஒருக்காலும் தக்லீத் செய்ததில்லை. இனியும் செய்யாது. இந்த இடத்தில் ஆச்சரியமான ஒரு உண்மையை விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பி. ஜைனுல் ஆபிதீனை சிலர் தக்லீத் செய்திருந்தனர். அவர்கள் தக்லீத் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் இருந்தது. யாரெல்லாம் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தார்களோ அவர்களில் ஒருவர் கூட பி. ஜைனுல் ஆபிதீனுடன் இன்று இல்லை. யார் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்யாமல் குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினார்களோ அவர்கள் மட்டும் தான் பி. ஜைனுல் ஆபிதீனுடன் உள்ளனர். இதைத் தக்க ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். நம்மோடு சேர்ந்திருந்து விட்டு தடம் புரண்டு விட்ட இயக்கத்தின் தலைவர் தனது பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில்,
''இவரது பேச்சைக் கேட்டு நிறைய தவறுகளைச் செய்து விட்டோம்; அதற்காக சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்கிறோம்''
என்று கூறியிருக்கிறார். இதை வேறு பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் பொருள் என்ன? இது காலம் வரை எங்கள் மூளையை அடகு வைத்து விட்டு பி. ஜைனுல் ஆபிதீன் என்ன சொன்னாலும் தலையாட்டி வந்தோம். சமுதாயத்துக்கே துரோகம் செய்து வந்தோம்; என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. அதாவது இவர்கள் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டு ஒரு மனிதன் சொன்னதைத் தக்லீத் செய்துள்ளனர். அந்த மனிதன் மீது வெறுப்பு ஏற்படும் வரை அவன் செய்யச் சொன்ன எல்லா அக்கிரமத்தையும் செய்து வந்தனர். சமுதாயத்திற்கு துரோகம் செய்யச் சொன்னாலும் அதையும் செய்தனர். நல்லவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தத் தனி மனிதன் சொன்னால் அதையும் செய்தனர். காட்டிக் கொடுக்கச் சொன்னால் காட்டிக் கொடுத்தனர். இவர்கள் செய்த அனைத்துமே இவர்களால் சிந்தித்துச் செய்ததல்ல, ஒரு மனிதனைக் கண் மூடிப் பின்பற்றிய தால் தான் இவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது. எனவே தான் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தவர்கள் அனைவரும் அவரை விட்டு ஒதுங்கி விட்டனர். நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்த்தவர்கள் மட்டும் நியாயத்தின் பக்கம் நின்று விட்டனர். அதே இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் ஏப்ரல் 10க்குப் பின் தொழுகையில் விரல் அசைப் பதை விட்டு விட்டனர். இதற்குக் காரணம் என்ன? நபிவழியை விளங்கி அதில் நம்பிக்கை வைத்து அதை அவர்கள் செய்யவில்லை. ஒரு மனிதனைக் கண்மூடி பின்பற்றியிருக்கிறார்கள். அந்த மனிதன் இவர்களுக்கு எதிரியானவுடன் சுன்னத்தை விட்டு விட்டு புது வியாக்கியானம் கூற ஆரம்பித்து விட்டனர். பி. ஜைனுல் ஆபிதீனை கண்மூடிப் பின்பற்றியவர்கள் அவரை விட்டுப் போய்விட்டனர் என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது. ஏகத்துவப் பிரச்சாரத்தை ஒருவரது தலைமையில் நாம் செய்து வந்தோம். அவரது நடவ டிக்கை சரியில்லை என்பதால் அவரை மாற்றி விட்டு வேறு தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறோம். அந்த முன்னாள் தலைவர் கடந்த பிப். 27 அன்று நாகூரில்,
''அவர் கறுப்பை வெள்ளை என்று சொன்னால் நானும் வெள்ளை என்று கூறினேன். அவர் வெள்ளையை கறுப்பு என்று கூறினால் அவ்வாறே நானும் கூறினேன். 15 வருடங்க ளாக அவர் என்ன சொன்னாலும் அதைச் சரிகண்டு வந்தேன்''
என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். (மக்களெல்லாம் சுற்றி வளைத்து மடக்கிய போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின் வாங்கி ஒட்டம் பிடித்தார் என்பது தனி விஷயம்) 15 வருடங்களாக ஒரு மனிதன் கருப்பை வெள்ளை என்று கூறி யிருக்கிறான். தெரிந்து கொண்டே அதற்குத் தலையாட்டியுள்ளனர் என்றால் அதற்குப் பெயர் தானே தக்லீத். இந்த உண்மையை(?) கூட எப்போது சொல்கிறார்கள்? தூக்கி எறியாமல் இருந்திருந்தால் இன்னும் அதே தக்லீதைத் தான் செய்திருப்பார்கள். தக்லீத் எனும் மாபாவத்தைச் செய்த இவர்கள் தக்லீதை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் மீது இப்பழியைச் சுமத்துகின்றனர். இந்த இரண்டு குரூப்பைத் தவிர இன்னொரு குரூப்பினரும் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். ஏகத்துவ பிரச்சாரப் பணியைச் செய்வதற்காக நாம் கண்ட முதல் அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தான் குறிப்பிடுகிறோம். அமீர் சொல்வதை யாரும் எதிர்க்கக் கூடாது. மார்க்க விஷயமானாலும் நிர்வாக விஷயமானாலும் அமீரின் சொல்லை எதிர்க்கக் கூடாது என்று புத்தக மாகவே போட்டு பிரகடனம் செய்துள்ளனர். மார்க்க விஷயத்தில் கூட அந்த அமைப்பின் தலைவர் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும். அதை ஏற்பவர்கள் தான் இந்த அமைப்பில் இருக்க முடியும் என்று தெள்ளத் தெளிவாக அறிவிப்பது தான் தக்லீத். அதை ஏற்பது தான் தக்லீத். தக்லீதைக் கொள்கையாகக் கொண்ட இந்தக் கூட்டணி தான் நம்மீது அந்தப் பழியை போடுகிறது. அர்த்தமற்ற இது போன்ற உளறல்களை நிறுத்தாவிட்டால் அவர்களின் தக்லீத் பட்டியல் விரியும். அவமானம் சேரும்.
அழைப்பு பணியில் என்றும் அன்புடன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே)

புதுமடம் கிளை

Read more...

வியாழன், 11 ஜூன், 2009


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

வரலாற்று சாதனை புரிந்தது TNTJ மாணவர் அணி

அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி ஓர் ஆண்டில் மட்டும் (28/05/08 to 31/05/09 - 53 வாரங்கள்) தமிழகத்தில் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி சரித்திரம் படைத்துள்ளது.

தமிழகத்தில் எவ்வளவோ முஸ்லீம் அமைப்புகள் , கல்வி அறக்கட்டளைகள் இருந்தும் நமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. காரணம் கல்வி அறக்கட்டளைகள் நடத்தும் இவர்கள் கல்வி சேவைக்காக அறக்கட்டளைகள் நடத்தாமல் காசு சம்பாதிக்க அறக்கட்டளை நடத்துகின்றனர். இவர்கள் கல்வி நிறுவனங்களை நிருவி சிறுபாண்மை கல்வி நிறுவனம் என்று அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு ஏழை முஸ்லீம் மாணவர்களுக்கு உதவாமல், கல்வியை வியாபாரமாக்கி முஸ்லீம்களிடமே ஒரு சீட்டுக்கு இலச்சகணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களால் அடித்தட்டு முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதுவரை கல்வி செவையில் ஈடுபட்டவர்கள் வயதானவர்களாக இருந்த காரணத்தினாலும், தவ்ஹீத் இல்லாமையும், பெருமை, புகழ் விரும்பும் மனப்பான்மையும் பெரிய அளவில் இவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லீம்களுக்கு கல்வியில் வழிகாட்ட மாணவரணியை நிறுவி, கல்வி விழிப்புணர்வு பிராசாரத்தை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டது. இதனால் தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கொட்டும் மழையையும் , கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் ஒர் ஆண்டில் மட்டும் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி உள்ளனர். இதுவரை எந்த முஸ்லீம் இயக்கமும் செய்திறாத சாதனையை நமது TNTJ மாணவரணி செய்துள்ளது. தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டவர்களால் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டம் முடியும் என்பதை மீண்டும் நிருபித்துள்ளது,

தவ்ஹீத் தங்களின் வளர்சிக்கு தடையாக உள்ளது என்று கூறியவர்களால் இதை சாதிக்க முடியவில்லை.( ஓட்டும் வாங்க முடியவில்லை). இந்த கல்வி சேவையில் ஈடுபட்டவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருப்பதினால்தான் உலக ஆதாயம் கருதாமல் மறுமை வெற்றி மட்டுமே குறிக்கோளக கொண்டு வேகத்தோடும் , வீரியத்தோடும் இத்தகைய சாதனைகளை புரிய முடிந்தது,
கல்வி சேவையோடு, முஸ்லீம் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் த்மிழகத்தில் 120 -க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவரணியை வழுப்படுத்தி உள்ளனர். முஸ்லீம்களை வைத்து உலக ஆதாயம் தேட முயலும் போலி முஸ்லீம் அமைப்புகளை மாணவர்களும் இளைஞர்களும் புறகணித்து இம்மை மறுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

தமிழக முஸ்லீம் இளைஞர்களின் ஒட்டு மொத்த சக்த்தியாக நமது மாணவரணி உருப்பெற்றுள்ளது..

நமது மாணவரணி வரும் ஆண்டுகளில் கல்வி சேவையை தமிழகத்தின் அனைத்து கடை கோடி முஸ்லீம்களுக்கும் சென்றடையும் வகையில் தனது செயல்பாடுகளை பண்மடங்காக பெருக்க திட்டமிட்டுள்ளது இன்ஷா அல்லாஹ். நமது மாணவரணியின் சேவை இன்னும் சிறக்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாரு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

-S.சித்தீக்.M.Tech

TNTJ மாணவரணி கல்வி கருத்தரங்குகள் நடைபெற்ற 80 இடங்கள்

வட சென்னை மாவட்டம்
1. நேதாஜி நகர்
2. ஏழுகினறு
3. மண்ணடி
தென் சென்னை மாவட்டம்
4. திருவல்லிகேணி
5. ஜாம்பஜார்
6. சேப்பாக்கம்
7. தரமணி
காஞ்சி (மேற்கு) மாவட்டம்
8. தாம்பரம்
9. பல்லாவரம்
10. குன்றத்தூர்
11.. காஞ்சிபுரம்
12. உத்திரமேரூர்
13. பீக்கங்கரனை
14. காமராஜபுரம்
15. ரங்கநாதஜபுரம்
காஞ்சி (கிழக்கு) மாவட்டம்
16. கல்பாக்கம்
17. கானத்தூர்
18.. செங்கல்பட்டு
19. கூடுவாஞ்சேரி (வள்ளளார் நகர்)
திருவள்ளுர் மாவட்டம்
20. பட்டாபிராம்
21. அரக்கோணம்
22. மதுரவாயல்
23. அம்பத்தூர்
கடலூர் மாவட்டம்
24. மேல்பட்டம் பாக்கம்
25. பரங்கி பேட்டை

விழுப்புரம் மாவட்டம்
26. திண்டிவணம்
வேலூர் மாவட்டம்
27. பேரணம்பேட்
28. வேலூர்
திருவன்ணாமலை மாவட்டம்
29. வந்தவாசி
கிருஷ்ணகிரி மாவட்டம்
30. ஓசூர்
நாமக்கல் மாவட்டம்
31. நாமக்கல்
தர்மபுரி மாவட்டம்
32. தர்மபுரி
தஞ்சாவூர்(வடக்கு) மாவட்டம்
33. கும்பகோணம்
34. வழுத்தூர்
35. கதிராமங்களம்
36. சோழபுரம்
37. ஆவூர்
தஞ்சாவூர்(தெற்கு) மாவட்டம்
38. பட்டுகோட்டை
திருவாரூர் மாவட்டம்
39. திருவாரூர்
40. முத்துபேட்டை
நாகை(வடக்கு) மாவட்டம்
41. அரசூர்
42. துளசேந்திரபுரம்
நாகை(தெற்கு) மாவட்டம்
43. நாகபட்டினம்
44. நாகூர்
திருச்சி மாவட்டம்
45. சிங்காரதோப்பு
பெரம்பலூர் மாவட்டம்
46. லெப்பைகுடி காடு
புதுக்கோட்டை மாவட்டம்
47. புதுகோட்டை
48. அம்மாபட்டினம்
49. அறந்தாங்கி
இராமநாதபுரம் மாவட்டம்
50. இராம்நாட்
51. கீழகரை
சிவகங்கை மாவட்டம்
52. திருப்பத்தூர்
53. காரைகுடி
54.. இளையான்குடி
55. புதுவயல்
கோவை மாவட்டம்
56. போத்தனூர்
57. ஆனைமலை
58. ஆசாத் நகர்
59. பொள்ளாச்சி
திருப்பூர் மாவட்டம்
60. திருப்பூர்
61. மங்களம்
ஈரோடு மாவட்டம்
62. தாராபுரம்
63. ஈரோடு
சேலம் மாவட்டம்
64. சேலம்
மதுரை மாவட்டம்
65. காய்தேமில்லத் நகர்
66. அவனியாபுரம்
67. வில்லாபுரம்
தேனி மாவட்டம்
68. கம்பம்
திண்டுக்கல் மாவட்டம்
69. பேகம்பூர்
விருதுநகர் மாவட்டம்
70. விருது நகர்
71. அருப்புகோட்டை

நெல்லை மாவட்டம்
72. மேலப்பாளையம்
73. பாளையங்கோட்டை (ரஹ்மத் நகர்)
தூத்துக்குடி மாவட்டம்
74. செய்யுதுங்க நல்லூர்
75. ஆராம்பன்னை
76. தொங்கராங்குறிச்சி
குமரி மாவட்டம்
77. தக்கலை
பாண்டிசேரி
78. சுல்தான்பேட்டை
காரைகால்
79. காரைகால்
80. TR பட்டினம்

Read more...

செவ்வாய், 9 ஜூன், 2009

மாணவரணியின் மாபெரும் கல்வி விழிப்புண‌ர்வு மாநாடு மற்றும் கண்காட்சி
07.06.2009 அன்று சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள மதராஸே இ அஞ்ஞும் பள்ளியில் சென்னை மண்டல மாணவரணியின் மாபெரும் கல்வி விழிப்புண‌ர்வு மாநாடு மற்றும் கண்காட்சி நடந்தது. அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையாலும் உதவியாலும் சென்னை மண்டல மாணவரணியின் மாநாடு கண்காட்சி மிகவும் வெற்றிகரமாகவும் அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் பெரும் உதவி உள்ளதாகவும் அமைந்தது.... அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.

கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சி யின் ஏற்பாடுகளை மாணவரனியின் நிர்வாகிகளான சகோ. S.சித்திக்.M.Tech- மாநில செயலாளர் அவர்களும் K.சித்திக்.DRAC மண்டல மாணவர் அணிச் செயலாளர் அவ‌ர்க‌ளும் M.நஸீர் அஹமது சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் S.ஷமீம்.M.Sc மாநில மாணவர் அணி துணை செயலாளர்(வேலை வாய்ப்பு) அவ‌ர்க‌ளும் K.பஷீர் அஹமது.MCA மாநில மாணவர் அணி துணை செயலாளர்,(கல்வி உதவி) அவ‌ர்க‌ளும் N.அல்அமீன் B.E. மாநில மாணவர் அணி துணை செயலாளர்,(பத்திரிக்கை துறை, மாணவர் பிரச்சனைகளை எதிர்கொள்வது ) அவ‌ர்க‌ளும் . முஹமது ஷபி.B.ஏ மண்டல மாணவர் அணிச் செயலாளர் (கல்வி வழிகாட்டுதல்) அவ‌ர்க‌ளும் M.அப்துல் பாசித்.B.Sc.(B.L) மாநில மாணவர் அணி துணை செயலாளர்(அரசு துறை, சட்டம்) அவ‌ர்க‌ளும் A. இம்தியாஸ் சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் O.முஹமது நூருல்லாஹ் சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் மற்றும் சென்னை மண்டல மாணவரனியின் உறுபினர்களும் மிகவும் சிறப்பாக செய்து முடித்திருந்தனர்

இந்த கண்காட்சியில் 25க்கும் மேற்ப்பட்ட அரங்குகளில் பல்வேறு துறைகளை பற்றி பல தகவல்களை தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள நமது மாணவரணியினர் ஏற்ப்பாடு செய்திருந்தனர் குறிப்பாக அங்கு அமைக்கப்பட்டிருந்த 10 மற்றும் 12 வகுப்புகள் முடித்த மாணவர்களுக்கான அரங்கம், பி.இ மற்றும் பி.டெக் போன்ற துறை பற்றிய அரங்கங்கள்,தொலை தூரக் கல்வி, முதுகளை, எம்.பி.ஏ,வேளை வாய்ப்பு, நுழைவுத் தேர்வு,சட்டக் கல்வி,பாதுகாப்புத் துறை, எம்.ஏ & எம்.காம், கலை மற்றும் வணிகம்,அறிவியல்,பொறியியல்,பத்திரிக்கைத் துறை வெளிநாட்டு படிப்புகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சம்மந்தமான அரங்குகளில் மாணவர்களும் பெற்றோர்களும் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

சகோதரர் சிவக்குமார் அவர்கள் ரேடியோகிராஃபி படிப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார் மற்றும் சகோதரர் உமர் அவர்கள் காவல் துறையில் எப்படி நுழைவது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினார். சகோதரர் சஃபி அவர்கள் நமக்கு கிடைத்துள்ள இட ஒதுக்கீடு பற்றியும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் ஒரு விளக்க உரை நிகழ்த்தினார்.
தொலை தூரக் கல்வி அரங்கில் செங்கல்பட்டை சேர்ந்த சகோ. அப்துல் வகீப் மற்றும் பைசூர் ரஹ்மான் அவர்களும் முதுகளை படிப்பு பற்றிய அரங்கில் கும்பகோணத்தை சேர்ந்த சகோ. அப்துர் ரஹ்மான் அவர்களும் எம்.பி.ஏ பிரிவில் தஞ்சையை சேர்ந்த சகோ. ஆசிக், ஜாஃபர் சாதிக் மற்றும் முஹ்மத் ரிஜ்வான் அவர்களும், வேளை வாய்ப்பு பகுதியில் சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த சகோ. ஷஜஹான், முஹ்மத் அனஸ் மற்றும் முஹ்மத் ரியாஸ் அவர்களும், சட்டக் கல்வி பகுதியில் சென்னையை சார்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக் அவர்களும் பாதுகாப்புத் துறை அரங்கில் சென்னை அசோக் நகரை சார்ந்த சகோ தமிமுல் அன்சாரி அவர்களும், எம்.ஏ & எம்.காம் படிப்புகள் பற்றிய அரங்கில் குண்றத்தூரை சேர்ந்த சகோ. முஹ்மத் உசைன் அவர்களும், கலை மற்றும் வணிகம் தொடர்பான அரங்கில் சென்னையை சேர்ந்த சகோ. முஹ்மத் இஸ்மாயில், ஜாவீத் மற்றும் முஹ்மத் யூசுப் அவர்களும், அறிவியல் துறை சம்மந்தமான அரங்கில் சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த சகோ. அப்துல் லதீப் மற்றும் சாகுல் அவர்களும் பொறியியல் படிப்புகள் சம்மந்தப்பட்ட அரங்கில் சகோ. அப்துல் கரீம் மற்றும் மீரா மொயீதீன் அவர்களும் பத்திரிக்கை துறை சார்ந்த அரங்கில் சகோ. அலமீன் அவர்களும் வெளிநாட்டு படிப்புகள் தொடர்பான அரங்கில் சகோ. ஹனீப்பா அவர்களும் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான அரங்கில் க‌டலூரை சேர்ந்த சகோ. கலீலூர் ரஹ்மான் அவர்களும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சம்மந்தப்பட்ட துறை பற்றியும் விரிவான விளக்கம் அளித்தனர்.
இதில் மிகவும் ஹைலைட் என்னவேன்றால் நமது சமுதாயத்தை சார்ந்த மாணவ மாணவிகளின் பெற்றோகள் மட்டும் இல்லாமல் மாற்று மத சகோதரர்களும் கலந்துக் கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று சென்றது தான்.




இறுதியாக நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மாணவரணி செயலாளர் சகோ. சித்திக் அவர்கள் மாணவரனியின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோ. பக்கீர் முஹ்மத் அல்தாஃபி அவர்கள் சமுதாயத்தின் கல்வியாளர்கள் நிலை என்ற தலைப்பிலேயும் வட சென்னை மாவட்ட பேச்சாளர் பெற்றோரும் மாணவர்களும்(பிள்ளைகளும்) என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தி மாணவரனியின் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியை நிறைவு செய்தனர்.

இந்த மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியின் வெற்றிக்கு முழு முதல் காரணம் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே என்பது யாரலும் மறுக்க முடியாத ஒன்று.

கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியின் புகைப்படங்கள்:

Read more...

வியாழன், 4 ஜூன், 2009


நிகழ்ச்சியின் அழைப்பிதழ்


(இன்ஷா அல்லாஹ்)

நாள் : ஜூன் 7 ஞாயிற்று கிழைமைநேரம் : காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : மதரஸாயே ஆஜம் மேல் நிலை பள்ளி, மவுன்ட் ரோடு, சென்னை ( LIC எதிரில் , ஸ்பென்சர் ப்ளாசா அருகில்)

கண்காட்சியில் இடம் பெறும் பகுதிகள்

உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்க்கான நுழைவுதேர்வுகள் பற்றி அறிய (IIT, IIM, IISc, NIT, Anna University , ect..)
வெளிநாட்டு படிப்புகள்,
வீட்டில் இருந்தே படிக்க (தொலைதூர கல்வி)
தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?
மத்திய மாநில அரசு தேர்வுகள் பற்றிய விபரம் அறிய IAS, IPS etc.. தேர்வுகள் பற்றிய விபரம் அறிய Group Exams RRB Exmans,காவல் துறை மற்றும் இராணுவத்தில் சேர்வதர்க்கான வழிமுறைகள்
பத்திரிக்கை துறையில் உள்ள படிப்புகள்
மேலும்B.E/B.Tech, M.B.B.S, M.E/M.TechB.A, B.Sc., B.Com, BBA, BCA, B.Lit etc..B.L, M.L, LLB etc..M.A, M.Sc., M.Com, etc..MBA, MCAB.Ed, M.Ed, M.Phil, PhdDiploma, ITI,B.Pharm, hotel management
போன்ற படிப்புகளை பற்றி அறிய, எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி அறியதமிழகத்தின் தலை சிறந்த கல்வியாளர்கள் பங்கு பெறுகின்றனர்
மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி
cell : 9884235802,9940205959
e-mail :
tntjedu@gmail.com visit : www.tntj.net, http://tntjsw.blogspot.com/
மாணவரணியின் இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் இன்ஷா அல்லாஹ்


Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP