ஞாயிறு, 12 ஜூலை, 2009


இஸ்லாம் பெண் கல்வியை மறுக்கிறதா?


தினமணி கதிரில் (14.06.2009) 11ம் பக்கத்தில் 'அக்கரைச் சீமை' என்ற தலைப்பில் ராணி மைந்தன் என்பவர் எழுதிதியுள்ளார். அதில் சில விஷமக் கருத்துகளை கூறியுள்ளார். என்னவென்றால் 'தாலிபாகளுக்கு நம்பர் ஒன் எதிரி பெண் கல்வி' என்றும் பெண் கல்வி கூடாது என்று தாலிபான்கள் சொல்லக் காரணம் இது இஸ்லாமிய நெறி முறைகளுக்கு முரணானது என்று நினைப்பது தான் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தினமணியின் அறியாமையைத்தான் காட்டுகிறது. குர்ஆனின் முதல் வேத வெளிப்பாடான வசனமே 'இக்ராஹ்'. படிப்பீராக, கற்பீராக, ஓதுவீராக என்று தான் துவங்குகிறது. கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் வேதம் இஸ்லாம்தான். ஆண்களே கற்பீறாக என்றோ, பெண்களே கற்காதீர்கள் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது பெண்கள் கல்வி கற்ப்பது இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணானது என்று கூறும் தினமணி அதன் அறிவின் வரட்சியை வெளிக்காட்டுகிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிபுரிந்த போது போதைப் பொருள் உற்பத்தியை முற்றிலுமாக ஒழித்து கட்டியதற்காக ஐ.ந. சபையின் பாராட்டுதலைப் பெற்றிருந்தது என்பதை தினமணி மட்டுமல்ல வேறு யாரும் மறுக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் குற்றங்கள் ஒழுக்கக்கேடுகள் குறைந்திருந்ததையும் மறுக்க முடியாது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து மேலை நாட்டு அரைகுறை ஆடைகளுடன் படிப்பதை தான் தாலிபான்கள் வெறுக்கின்றனர். உலக முஸ்லீம்கள் மத்தியில் தாலிபான்கள் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்காவின் தலையீட்டை ஆப்கானிஸ்தானில் தொடர வேண்டும் என்பதற்க்காகவும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஆப்கன் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காகவும், அமெரிக்க ஏஜெண்டுகள் இது போண்ற கீழ்த்தரமான காரியங்களை செய்து விட்டு தாலிபான்கள் மீதும், அல்காயிதா மீதும் பழி போட்டு கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் பெண் கல்வியை எதிர்ப்பது போண்று எழுதப்பட்ட செய்திதான் இப்போது பிரச்சினையே! ஆணும், பெண்ணூம் இரண்டறக் கலந்து கற்க வழி வகுக்கக்கூடாது; அப்படி செய்தால் பல விதமான ஒழுக்க கேடுகள் அதாவது திருமணத்திற்க்கு முன்பே உடலுறவு வைத்து பிள்ளையைப் பெற்றெடுப்பது, பெண்கள் ஓடிப்போவது, தற்க்கொலை செய்து கொள்வது போன்ற கேடுகள் விளையும்.

எனவே ஆண், பெண் சேர்ந்து பயிலக்கூடது என்று தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

தாலிபான்கள் பாகிஸ்தானில் அவர்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஜிஸ்யா வரி வசூலிப்பதாக வந்த செய்தியை கூட பாகிஸ்தான் ஹை கமிஷன் மறுத்துள்ளது.


‍எம்.ஏ.ஹாஜி முஹ்ம்மது, நிரவி

Read more...

வெள்ளி, 26 ஜூன், 2009

கடலூர் மாவட்ட பொதுக்குழு

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத்-ன் கடலூர் மாவட்ட பொதுக்குழு 21.06.09 அன்று வடலூர்-ல் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!
மேலும்இப் பொதுகுழுவில்

1.மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் கண்தான பதிவு மையம் அமைப்பது. 2.மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் திருமண தகவல் மையம் அமைப்பது. 3.ஆகஸ்ட் மாதத்தில் தவ்ஹித் ஏழுச்சி மாவட்ட மாநாடு நடத்துவது 4.வட்டி இல்லாகடன் திட்டத்தை அணைத்து கிளைகலிலும் மேம் படுத்த வேண்டி திர்மானம் ஏற்றப்பட்டது,

மேலும் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் மற்றும் மாநில பேச்சாளர் அப்துன் நாசிர் ஆகிய மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.








Read more...

வியாழன், 25 ஜூன், 2009

தொ(ல்)லைக் காட்சிகள்
இந்தியாவில் சின்னத்திரையில் ஹிந்தி சேனல்களுக்கு அடுத்து தமிழகத்தில் தான் மிக அதிகமான சேனல்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 14 தமிழ் சேனல்கள் உள்ளன. இது தவிர அந்தந்த ஊர்களில் கேபிள் டி.வி. இணைப்பு தருபவர்கள் தனியாக உள்ளூர் சேனல்களை நடத்தி வருகின்றனர்.மக்களைச் சிந்திக்க விடாமலும், நற்காரியங்களைச் செய்யவிடாமலும் தடுக்கும் முதல் சாதனமாக இந்தத் தொலைக்காட்சிகளே உள்ளன.
ஆரம்பத்தில் இலவச சேனல்களாக இருந்த பல சின்னத்திரைச் சேனல்கள், இன்று கட்டணச் சேனல்களாக மாறி உள்ளன. மக்களுக்கு இலவசமாக சில காலங்கள் உருப்படாத காட்சிகளைத் தந்து, அதில் அவர்களை அடிமையாக்கி, பின்னர் அவர்கள் மூலம் கொள்ளை லாபம் அடிக்கத் தீட்டம் தீட்டி செயல்படுகின்றன பல முன்னணி சேனல்கள்.
சமீபத்தில் இலவச சேனலாக இருந்த முன்னணி டி.வி. சேனல் ஒன்று, கட்டண சேனலாக மாற்றப் பட்டது. இதற்காக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தினர். அந்த டி.வி. சேனல், ஒரு வீட்டின் இணைப்பிற்கு மட்டும் 32 ரூபாய் கேட்பதாக கேபிள் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் சுமார் 50 ரூபாய் வரையிலும் கூடுதலாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
இதன் மூலம் மாதத்திற்குப் பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொண்டிருக்கிறது அந்த டி.வி.
சேனல்.கடுமையான கட்டண உயர்வை ஏற்று இன்றும் ஏராளமானோர் அந்த சேனல்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நல்ல செய்திகள் நிறைந்திருந்தால் அதற்காக செலவழிப்பதில் தவறில்லை. முழுக்க முழுக்க சினிமா, சீரியல் என்று மக்களை அடிமைப்படுத்தி நல்ல செயல்களைச் செய்யவிடாமல் தடுக்கும் இவற்றிற்குப் பணம் கொடுத்துப் பார்க்க வேண்டுமா?டி.வி. பார்ப்பதில் முத­டம் வகிக்கும் பெண்களை நாடகத்தில் அடிமையாக்கி இப்போது அறுவடை செய்கிறார்கள்.
குறிப்பாக, பெரும்பாலான சின்னத்திரைச் சேனல்களில் மக்களுக்குப் பயன் தரும் செய்திகள் மிக மிகக் குறைவு தான். அதிலும் அந்த டி.வி.யை எடுத்துக் கொண்டால் காலை 11.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 12.00 மணி வரையும் தொடர் நாடகங்கள். அதில் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் நாடகங்களும் அடக்கம்.
பெரும்பாலான நாடகங்கள் சமூகச் சீரழிவையே ஏற்படுத்துகின்றன. தவறுகள் எந்த விதத்திலெல்லாம் செய்யலாம் என்பதற்கு இந்த நாடகங்கள் நல்ல (?) வழி காட்டுகின்றனர். இதனால் கெட்டுப் போனவர்கள் ஏôரளம்.
இடையில் சில நிமிடங்கள் செய்திகள் வருகின்றன. அவை அனைத்தும் அந்த டி.வி. சேனல் சார்ந்துள்ள கட்சிக்கு ஆதரவான செய்திகள். அல்லது அந்தக் கட்சியைப் பாதிக்காத செய்திகள். நாட்டில் எவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தாலும் அந்தக் கட்சிக்கு எதிராக இருந்தால் முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. இதனால் உண்மையான செய்திகளை அதில் காணமுடிவதில்லை.
முழுக்க முழுக்க பயனற்ற நாடகங்கள், சினிமா, ஆபாசம், வன்முறைகள் நிறைந்த இந்தத் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்காக எவ்வளவு கட்டண உயர்வையும் ஏற்க மக்கள் குறிப்பாகப் பெண்கள் தயாராக உள்ளனர்.
சின்னத்திரையில் வர்த்தக விளம்பரங்கள் மூலம் நல்ல லாபத்தைக் கண்டு வரும் முதலாளிகள், கட்டண அலைவரிசையாக மாற்றி இன்னும் கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.தென் மாநிலங்களில் விளம்பரக் கட்டணம் கடுமையாக உள்ள ஒரே சேனல் அந்த டி.வி. மட்டுமே! வர்த்தக விளம்பரம் மூலம் கடுமையான வருமானம் கிடைத்தாலும் நடுத்தர வர்க்கத்தினர் மடியிலும் கை வைக்கத் துவங்கியுள்ளனர் அந்த டி.வி. உரிமையாளர்கள்.எந்தத் தொலைக்காட்சியாக இருந்தாலும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினால் தரமான செய்திகளும் உண்மை நிலவரமும் நமக்குக் கிடைக்கும்.
கட்டணங்களை கடுமையாக உயர்த்தும் போது அந்த டி.வி. சேனல்களை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தால் இது போன்ற கடுமையான கட்டண உயர்வு ஏற்படாது.

Read more...

செவ்வாய், 23 ஜூன், 2009

ஏய்ட்சுக்கு மருந்து இஸ்லாம் மட்டுமே!

"பதினைந்து வயதுக்கு உட்பட்ட 70,000 குழைந்தைகள் ஹெச்.ஐ.வி என்னும் வைரஸ் பாதிக்கப் பட்டுள்ளார்கள்; அதாவது எய்ட்ஸ் என்னும் கொடிய நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்"

மத்திய சுகாதார முன்னால் அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25.08.07 அன்று இதை ராஜ்யசபாவில் அறிவித்தார்.


இந்தியாவில் மட்டும்மல்ல! உலகெங்கும் உள்ள சிறு குழந்தைகள் இன்றைக்கு எய்ட்ஸ்சுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் ஹெச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்ட 38.6 மில்லியன் மக்களில் இந்தக் குழந்தைகளும் விதிவிலக்கல்ல!


இதில் வேதனை என்னவெனில் இந்த தீமை எப்படி ஏற்பட்டது என்பதை இந்த உலகம் இன்னும் உணராமல் இருப்பது தான். பாதுகாப்பான உடலுறவுக்குக் காண்டத்தை உபயோகியுங்கள் என்று வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்.


"பாதுகாப்பான உடலுற‌வுக்கு திருமணமே சிறந்த வழி" என்று சொன்னால் அதன் மூலம் விபச்சாரம் தவிர்க்கப்படுவதுடன் எய்ட்ஸ் நோய் பரவுவதும் தடுக்கப்படும். இப்படி அறிவிப்பதை விட்டு விட்டு, பாதுகாப்பான உறவுக்கு காண்டத்தை பயன்படுத்துங்கள் என்று அதாவது காண்டம் அணிந்து விபச்சாரம் செய்யுங்கள் என இன்று வரை அரசாங்கம் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

இப்படி விளம்பரம் தொடர்ந்து கொண்டு போனால் எய்ட்ஸின் பாதிப்பும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

உலகில் உள்ள மனிதனை எந்த இயற்க்கை நியதியில் படைத்தானோ அந்த இறைவனின் நியதிபடி நடக்காத வரை எய்ட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவுவதைத் தடுக்க முடியாது.

உலகில் உள்ள மார்க்கங்களில் இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மதமும், விபச்சாரத்திற்க்குக் கடுமையான தாண்டனையை விதிக்கவில்லை.

இஸ்லாமிய ஆட்சியில் மண முடிக்காத ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம் செய்து விட்டால் அவருக்கு 100 கசையடிகள் கொடுத்து நாடு கடத்த வேண்டும்.

மணம் முடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவரைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.

இது தான் விபச்சாரத்திற்க்கு இஸ்லாம் வழங்கும் தண்டனையாகும்.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்ப்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

(அல்குர்ஆன் 24:2)

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்த போது அஸ்லம் குலத்தை சேர்ந்த ஒரு மனிதர் அவர்கலிடம் வந்து, "நான் விபச்சாரம் செய்து விட்டேன்" என்று சொன்னார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக) நான்கு தடைவை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.

ஆகவே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து "உனக்கு என்ன பைத்தியமா ?" என்று கேட்டாகள். பிறகு "உனக்கு திருமணம் ஆகி விட்டதா? ' என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார்.

எனவே அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். பாறைகள் நிறைந்த (அல்லாஹர்ரா எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டார்.


அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)
நூல்:புகாரி 5270


உலகில் எய்ட்ஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்தவர்கள், சிந்தனையாளர்கள் அனைவரும் விபச்சாரத்திற்கு இத்தகைய தண்டனை வழங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்தச் சட்டத்தைத் தங்கள் நாடுகளில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட முன்வைக்கின்றனர்.


இது போன்ற ஒரு சிறப்பான சட்டம் உலகெங்கும் நடைமுறையில் இருக்குமானால் இந்தக் கொடிய நோயை விட்டும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.


விபச்சாரத்திற்க்கு இவ்வளவு கடுமையான தண்டனையை இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில் திருமணத்திற்குறிய வழிகளை மிகவும் எளிதாக்கி இருக்கின்றது.


அத்துடன் மனிதர்களின் பாலுணர்வுத்த் தேவையை, தேட்டத்தை உணர்ந்து அவர்களுக்கு பலதாரமணத்தையும் அனுமதிக்கின்றது.


பொதுவாக ஓர் ஆணுக்கு அவனுடைய பாலுணர்வுத் தேட்டம் ஒரு பெண் என்ற வட்டத்தில் நிற்பதில்லை. இரண்டு மூன்று என்று அவனது தேட்டம் இருக்கும்.


மனிதனின் இயற்க்கை சுபவத்தை உணர்ந்த இயற்க்கை மார்க்கமான இஸ்லாம், நான்கு பெண்களை ஒருவர் திருமணம் முடிக்கலாம் என்ற அனுமதியை வழங்குகின்றது.


உன்னுடைய தேவையை இந்த வரையறைக்குள் வைத்துக் கொள்! இந்த வரம்பைத் தாண்டாதே! எய்ட்ஸ் போன்ற கடுமையான நோய்களை வரவழைத்து கொள்ளாதே! என்று இயற்கை மார்க்கம் கூறுகின்றது.


அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மூம்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமையை பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!) இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.

(அல்குர்ஆன் 4:3)


உலகில் இஸ்லாமிய மார்க்கம், அதாவது இயற்கை மார்க்கம் மட்டும் மனிதனின் தேவையை அறிந்து அதற்க்கு தீனியைக் கொடுத்து பசியைத் தணிக்கிறது.

அதையும் மீறி வேலி தாண்டினால் கடுமையாகத் தண்டிக்கிறது. எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் மனிதனை தாக்கமல் தடுத்து காக்கிறது.

Read more...

செவ்வாய், 16 ஜூன், 2009

கிரிக்கெட் மோகம்
பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பலகோடி முட்டாள்கள் பார்க்கின்றார்கள் என்று ஒருவர் ஒரு விளையாட்டைப் பற்றிக் கூறினார். அது தான் கிரிக்கெட் என்ற விளையாட்டாகும்.

இன்றைக்கு நம் இந்திய நாட்டில் தேச பக்திக்குரிய அடையாளமாக இந்த விளையாட்டு மாறிவிட்டது.

இந்திய கிரிக்கெட் அணியை நேசிப்பவன் தான் உண்மையான இந்தியன். மாற்று அணியையோ, அந்த அணி வீரர்களின் விளையாட்டையோ ரசிப்பவன் இந்தியாவிற்கு எதிரானவன் என்று கருதுமளவிற்கு இந்த விளையாட்டு இந்திய மக்களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்று விட்டது. அரசியல்வாதிகள் கூட கிரிக்கெட் வீரர்களைக் காட்டி ஓட்டுகளைப் பெற்றுவிடலாம் என்ற முடிவிற்கே வந்து விட்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் துவங்கியவுடன் நம் இந்திய நாடே ஒரு வித பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்து மதத்தவர்கள் இந்தியா வெற்றி பெறுவதற்காகப் பலவிதமான யாகங்களைச் செய்து கொண்டிருக்கும் வேளையில் சில இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையும் நடத்தியுள்ளனர்.

மேலும் நம் நாட்டின் பிரதமர், இந்திய அணி வெற்றி பெற பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எங்கும் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றுமா? என்ற பேச்சு தான். இந்த கிரிக்கெட் மோகத்திற்கு பெண்களும் விதிவிலக்கல்ல..

தாங்கள் நேசிக்கும் அணி தோற்றுவிட்டால் அதற்காக மிகப்பெரும் அளவில் கவலைப்படக்கூடிய மக்களையும் பார்க்கிறோம். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்று விட்டதற்காக ஒரு ரசிகர் மாரடைப்பில் இறந்து விட்டார். விளையாட்டு வீரர்களின் உருவப் பொம்மையை எரிப்பது, அவர்களின் வீடுகளைத் தாக்குவது போன்ற வன்முறைச் செயல்களிலும் தீவிர ரசிகர்கள் ஈடுபடுகின்றனர். இந்தியா தான் ஜெயிக்கும், பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என்று இரு பிரிவாகப் பிரிந்து பலர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

இந்தக் கிரிக்கெட் மோகம் முஸ்லிம்களையும் விட்ட பாடில்லை. இறைவனைத் தொழுவதற்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களிலும் கூட இந்த கிரிக்கெட் பேச்சு தான்.

பல ஊர்களில் மார்க்கப் பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்யும் போது இன்றைக்கு மேட்ச் உள்ளது; மக்கள் நிகழ்ச்சிக்கு வருகை தர மாட்டார்கள்; எனவே வேறொரு நாளில் வைத்துக் கொள்வோம் என்ற ஆலோசனையைப் பலர் கூறுகிறார்கள்.

பலர் இந்த போட்டியைப் பார்த்து ரசிப்பதிலேயே தங்கள் தொழுகையை மறந்து விடுகிறார்கள். நல்லமல்களைத் தொலைத்து விடுகிறார்கள்.குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றாதவர்கள் அறியாதவர்கள் வேண்டுமானால் வழி தெரியாமல் இது போன்ற விளையாட்டுக்காகத் தங்கள் நேரங்களையும் காலங்களையும் வீணாக்குவார்கள். ஆனால் குர்ஆன், ஹதீஸை கொள்கையாகக் கொண்டவர்கள் கூட இது போன்ற வீணான காரியங்களில் மூழ்குவது தான் நமக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:
”(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” என கூறுவீராக!

(அல் குர்ஆன் 63:11)

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 6:32)

இந்த வசனங்களில் இறைவன் கூறுவதைப் போன்று தான் நம் சமுதாயத்தவர்களின் நிலை மாறிவிட்டது. இந்த விளையாட்டைப் பார்ப்பதற்காக பலர் தொழுகைகளைத் தொலைத்து விடுகின்றனர். இரவு முழுவதும் இதைப் பார்ப்பதற்காகக் கண் விழித்துக் காத்திருக்கின்றனர்.பொழுது போக்கிற்காக, குறிப்பிட்ட நேரம் மார்க்கத்திற்கு முரணில்லாத எந்த ஒரு விளையாட்டையும் பார்ப்பது தவறு கிடையாது. ஆனால் இந்த விளையாட்டைப் பார்ப்பதை மார்க்கக் கடமை போல் கருதி, மார்க்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் கூட புறந்தள்ளி விட்டு, தங்களுடைய காலங்களையும் நேரங்களையும் வீணாகக் கழிப்பவர்களை காலத்தின் அருமையை உணராதவர்கள் என்றே கருத வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

(அல்குர்ஆன் 104வது அத்தியாயம்)

தமக்குக் கிடைத்த மிகக் குறைந்த வாழ்நாட்களில் நல்லறங்கள் செய்து நன்மைகளை சேர்க்காமல் அவற்றை வீணாக்குபவன் மிகப்பெரும் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட அத்தியாயத்தில் இறைவன் நமக்கு உணர்த்துகிறான்.

காலத்தின் அருமை தெரியாமல் நாம் அவற்றை வீணிலும் விளையாட்டிலும் கழித்து விடக் கூடாது. நம்முடைய மரணம் வருவதற்கு முன்பாகவே நமக்கு கிடைக்கின்ற காலங்களை நல்லறங்கள் செய்வதிலே விரைவு படுத்த வேண்டும்.. இதைத் தான் இறை நம்பிக்கையாளர்களுக்குரிய பண்பாக இறைவன் கூறுகின்றான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

(அல்குர்ஆன் 3:114)

அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன் 21:90)

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 3:133)

இவ்வுலக வாழ்க்கையில் நம்மை ஈர்க்கின்ற இந்த வீணான மனோ இச்சைகளில் அளவு கடந்து வீழ்வது தான் நம்முடைய மறுமையின் தோல்விக்குக் காரணமாக அமைகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவர்க்கம் சிரமங்களால் சூழப்பட்டுள்ளது. நரகம் மனோஇச்சைகளால் சூழப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: தாரமி (2720)

நமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களை வீணிலும் விளையாட்டிலும் கழித்து விடாமல் மறுமை வாழ்வின் வெற்றிக்காக அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நபியவர்கள் பல ஹதீஸ்களில் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து நற்செயல்கள் புரிந்து கொள்ளுங்கள். (அக்குழப்பங்களின் போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறை மறுப்பாளனாக மாறி விடுவான். மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இû றமறுப்பாளனாக மாறி விடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்று விடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் (186)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கி விடும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி (6514)

மேலும் பலர் தமக்குரிய ஒய்வு நேரங்களை சரியாகப் பயன்படுத்தாததால் இழப்புக்குள்ளாகி விடுகின்றனர் எனவும் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம்
2. ஓய்வு
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி (6412)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் எங்களுக்குரிய மூங்கிலாலான ஒரு குடிசை வீட்டைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் நபியவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, ”இது என்ன?” என்று கேட்டார்கள். ”வீடு பாழடைந்து விட்டது. அதைச் சரி செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள், ”(மரணம் என்ற) அக்காரியம் இதை விட மிக விரைவானது” என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதி (2257)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தை செலவிடு. உனது இறப்புக்குப் பிந்திய நாளுக்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு.

நூல்: புகாரி (6416)

எனவே விளையாட்டை விளையாட்டாகக் கருதுவோம். நம்முடைய அதிகமான கால நேரங்களை நல்லமல்கள் அதிகம் செய்வதில் ஈடுபடுத்துவோம். இறைவன் நம் அனைவரையும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக ஆக்கி அருள்புரிவானாக!

-இப்னு யூசுப் கடையநல்லூர்

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP