தமுமுக
தேர்தலில் தமுமுக வை ஆதரிக்காத்து ஏன் ?
கேள்வி : முஸ்லீம் சமுதாயத்தின் உரிமைக்காக பாடுபடும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் தமுமுகவை ஆதரிப்பதிலை என்று முடிவு எடுப்பது சரியா ? யாரோ பொறுப்புக்கு வருவதற்க்கு பதிலாக நம்மவர்கள் பொறுப்புக்கு வந்தால் நல்லதுதானே ?
n எஸ்.அபுதாஹிர்,திருவல்லிகேணி
முஸ்லீம் வேட்பாளரை ஆதறிப்பது என்பது உணர்வுபூர்வமாக பார்ப்பதில் சரியானதாகத் தோன்றலாம்.ஆனால் முஸ்லீம் வேட்பாளர் என்று மட்டும் பார்க்காமல் சமுதாயத்தின் நன்மையையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
முஸ்லீம் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்ற பின்பு முஸ்லீம் சமுதாயத்துக்கே அச்சுறுத்தலாக அமைவார் என்றால் அப்போழுது வேட்பாளாரை விட சமுதாயத்தின் நலனை தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லீம் வேட்பாளருக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலனைப் பின் தள்ளி விட கூடாது.
தமுமுக வை பொறுத்தவரை அவர்கள் நமது இயக்கத்தின் கொள்கைக் கோட்பாடுகளை அழிக்க நினைப்பவர்கள் என்பதாலும், ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு இவர்கள் எதிரானவர்கள் என்பதாலும் அவர்களை முஸ்லிம்கள் ஆதரிக்க கூடாது என்பதே நமது நிலைபாடு.
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் என கூறி மக்களை திரட்டிய தமுமுகவினர், தேர்தலில் போட்டியிடாமலேயே செய்த அராஜகங்கள் எண்ணி மாளாது.
தாங்கள் இயக்கம் நடத்துவதற்காக நமது சமுதாயத்தின் செல்வந்தர்களையும் , பிரமுகர்களையும் மிரட்டி பணம் வசூலித்தனர்.
ஆளும் கட்சியின் கூட்டனி என்ற பெயரை பயன்படுத்தி முஸ்லிம் மக்கள் பிரச்சனையில் தலையிட்டு பணம் வாங்கிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்தனர்.
அடியாட்கள் மூலம் ஆட்க்களை தூக்கி சென்று மிரட்டி தமது காரியத்தை சாதித்து கொண்டனர்.
சுனாமி ஃப்த்ரா என்ற பெயரில் திரட்டிய நிதியை சம்மந்தபட்டவர்களுக்கு வழங்காமல் தமதாக்கிக் கொண்டனர்.
தமுமுக பொது செயலாளர் வக்ஃப்பு வாரியச் சேர்மன் பதவியைப் பெற்ற பின்பு பள்ளிவாசல் நிர்வாகிகளையும் ஜமாஅதார்களையும் மிரட்டினார்.
வக்ஃப்பு அதிகாரிகளும் தமுமுக உள்ளூர் தலைவர்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளை மிரட்டி பணம் பறித்தனர்.
வக்ஃப்பு சொத்துக்களை அரசியல்வாதிகளுக்கும் பண முதலைகளுக்கும் தமக்கு வேண்டியவர்களுக்கும் தாரை வார்த்தனர்.
தங்களை எதிர்ப்பவர்கள் மீது பொய் புகார்களை கூறி பல்வேறு வழக்குகளை போட்டனர்.
வக்ஃப்பு சொத்தை கொள்ளையடித்த கும்பல் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறியே மிரட்டி காரியங்களை சாதிப்பது, வக்ஃப்பு வாரியத்தை பயன்படுத்தி தமுமுகவினரை நிர்வாகதில் வலுக்ட்டாயமாக நுழைத்தது அகியவை பொதுவாக சமுதாயதிற்க்கு எதிராக இவர்கள் கட்டவிழ்த்த அராஜகங்கள் ஆகும்.
இது தவிர தவ்ஹீத் ஜமாஅதிற்க்கும் தவ்ஹீத் கொள்கைக்கும் எதிராக இவர்கள் செய்த கொடுமைகளும் தனியாக உள்ளன.
தவ்ஹீத் சகோதரர்களாள் தங்களை வளர்த்துக் கொண்ட பின் தவ்ஹீத் பிரச்சாரம் தங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்று பகிரங்கமாக அறிவித்து தவ்ஹீத் சகோதரர்களை கூண்டோடு வெளியேற்றியது.
தவ்ஹீத் ஜமாஅதிற்க்கு எதிராக எந்த இயக்கமோ அல்லது எந்த தனி நபரோ வெளியிடும் அவதூறுப் பிரச்சாரங்கள் அனைத்தையும் தமுமுக கிளை நிர்வாகிகள் மூலம் தமிழகம் மூலம் விநியோகம் செய்தது.
தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும் அதன் நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பரப்புவதற்கெண்றே ஒரு தனி இனையத்தலம் துவக்கி அன்றாடம் அவதூறுகளை பரப்பியது. மின்னஞ்சல் மூலம் அவதூறுகளை பரப்பியது.
தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் தவ்ஹீத் சகோதரர்கள் தாக்குவதற்க்கும் பள்ளிவாசலில் நுழைவதை தடுப்பதற்க்கும் தமுமுக வினர் தலைமை தாங்கியது.
தவ்ஹீத் ஜமாஅதிற்க்கு எதிரான எல்லா இயக்கங்களுடனும் கைக்கோர்த்துக் கொண்டு அவர்களை தவ்ஹீத் ஜமாஅதிற்க்கு எதிராக தூண்டிவிட்டது.
தவ்ஹீத் பிரச்சாரம் தங்களுக்கு எதிரானது என்று கூறி போலி தவ்ஹீத்வதிகளை கொண்டு ஐ.பி.பி ஆரம்பித்து தவ்ஹீத் போர்வையில் தவ்ஹீதை எதிர்த்தது என்று ஆட்டம் போட்டதை எளிதில் நாம் மறந்துவிட முடியாது.
இத்தகையவர்கள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினரானால் அவர்களால் சமுதாயம் எத்தகைய கொடுமைகளை சந்திக்குமோ என்று நாம் அஞ்சுகிறோம்.
தவ்ஹீத் பிரச்சாரத்துக்கும் தவ்ஹீத் வாதிகளுக்கும் இவர்களால் என்ன என்ன இடையூறுகளை செய்வார்களோ என்று நாம் அஞ்சுகிறோம்.
எனவே தமிழகத்தில் உள்ள முஸ்லிம் இயக்கங்களில் முஸ்லிம்களையே மிரட்டும் ஒரே இயக்கமான தமுமுக (ம.ம.க) எந்த அணியில் போட்டியிட்டாலும் தனியாக போட்டியிட்டாளும் அவர்களை தோற்க்கடிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முழு மூச்சுடன் பாடுபடுவதுதான் கடமையாகும்.
உங்களை நீங்களே அழித்து கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ம.ம.க வை ஆதரிப்பதும் நம்மை நாமே அழித்திக் கொள்வதும் ஒன்று தான் என்பதை சமுதாயத்திற்க்கு புரிய வைக்கும் கடமையை தவ்ஹீத் ஜமாஅத் தாட்சண்யமின்றி செய்து முடிக்கும் இன்ஷா அல்லாஹ் !