>>வாசகர்கள் பயன் பெறுவதற்காக நமது இனையதளதில் புதிய வசதி தினமும் Update செய்யப்படும் நமது இனையதில் பல விடியோ அடியோ மற்றும் இஸ்லாமிய கட்டுரைகளை டவுன்லோட் செய்துகொள்ளலாம் Click Here to Visit
முக்கிய அறிவிப்பு :
தமுமுகவின் பைலாவை காணவில்லை !
கடந்த 19.04.2009 அன்று மண்ணடியில் 'திமுகவிற்க்கு முஸ்லீம்கள் ஆதரவு ஏன்?' ஏன்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பி.ஜே. அவர்கள், தமுமுகவினர் பதவி சுகம் பெறுவதற்காக தங்களது கொள்கை கோட்பாடுகளையும், மானத்தையும் காற்றில் பறக்கவிட்டு தேர்தலில் குதித்திருக்க்ர்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
மேலும் அவர் கூறும்போது,"அவர்களது பைலாவை கூட அவர்கள் கடைபிடிக்கவில்லை என்று கூறி, தமுமுகவின் பைலாவில் உள்ள விதி (2) :கொள்கை மற்றும் நோக்கம். பிரிவு 3ல் : (அ) நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்பு கூட்டுறவு சங்க அமைப்புகள் ஆகிய எந்த தேர்தலிலும் கழகம் போட்டியிடாது " என்ற விதியைச் சுட்டிக்காட்டி, தற்போது தமுமுகவின் தலைவராக இருக்கின்ற ஜவாஹிருல்லாவும், பொதுச்செயலாளராக இருக்கின்ற ஹைதர் அலியும் எப்படி போட்டியிட முடியும்; இது அவர்களது கொள்கைக்கே எதிரானது இல்லையா ? என்ற கேள்வியை எழுப்பினார்.
மேலும் விதி 25 : தேர்தல் பிரிவு 6: கழகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று நிர்வாகிகளாக பொறுப்பு வகிப்பவர்கள், அரசியல் கட்சியில் எதிலும் பொறுப்பு ஏற்றால் கழகத்தில் அவர் வகிக்கும் பொறுப்பு தானாக ரத்தாகிவிடும். தலைமை நிர்வாகக் குழுவினால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு இது பொருந்தும் " என்ற விதியை சுட்டிக்காட்டி,அரசியல் கட்சியான ம.ம..க ஒருங்கினைப்பாளராக ஜவாஹிருல்லாஹ்வும் , ஹைதர் அலியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் எப்படி தமுமுகவில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி, இந்த பைலாவின் அடிப்படையில் உங்களது உறுப்பினர்களை வைத்தே உங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.
சமுதாயத்தின் மானம் காக்க புறப்பட்ட ம.ம.கட்சியினர் பைலாவை காட்டி வழக்கு தொடர்ந்தால் மானம் மலையேறிவிடும் என்ற அச்சத்தில், தங்களது தமுமுகவின் அதிகாரப்பூர்வ இனையத்தளத்தில் 'இயக்க விதிகள்' என்ற தலைப்பிலிருந்த பைலாவையும் அதற்க்கு அடுத்த நாள் அழித்து விட்டனர்.
தங்களின் பதவி சுகத்திற்காக, இயக்க பைலாவையே இனையத்தளத்திலிருந்து நீக்கும் அளவுக்கு துணிந்து விட்ட இவர்களா சமுதாயத்தின் மானம் காக்க போகிறார்கள் ? சமுதாயத்தின் மானம் காக்க புறப்பட்ட இவர்கள் தற்போது மானம் இழந்து நிற்கிறார்கள்.
தமுமுகவின் கழக கண்மணிகளே ! சிந்தியுங்கள் . கழகத்தின் கண் (இல்லாத) மணியை வேண்டுமானால் இவர்கள் நம்ப வைத்து ஏமாற்றிவிடலாம். இவர்களது நாடகத்தை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் நம்பி ஏமாறத் தயாரில்லை என்பதை மட்டும் தற்போதைக்கு சொல்லி வைக்கிறோம்.
எனவே தமுமுகவின் பைலாவை கழக கண்மணிகளே! நீங்களாவது கண்டுபிடித்து கொடுங்கள் !?
-- அபூ நஸ் ரீன், மதுரை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக